Tag: Devotees believe that if they worship the ‘Puliyuraan’ Siddhanatha Gurunath

  • Devotees believe that if they worship the ‘Puliyuraan’ Siddhanatha Gurunath, they will be cured of their diseases in seconds!

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராமத்தில்' அருள்மிகு ஸ்ரீ சித்தநாத குருநாதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இங்கு 16 ஆம், நூற்றாண்டில் புலியூரான் கிராமத்தில், தென்பொதிகை மலையிலிருந்து வந்த “சித்தர்” ஒருவர் அங்குள்ள புளியமரத்தின்” கீழ் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார், அப்போது காரணம் புரியாது பல நோய்கள் பரவி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். நோய் தாக்குதலுக்கு ஆளான பலர் அதற்கான சிகிச்சை கிடைக்காமல் மாண்டு போய் விட்டனர். அப்போது அப்பகுதியை ஆண்ட அரசன் பொதிகை சித்தரை அழைத்து நோய் தீர்க்கும் அரிய மருந்தினை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாட்டு மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி பொதிகை சித்தர் பௌர்ணமி அன்று மகா யாகம் நடத்தி தனது தவத்தின் பலனாக 21 தேவதைகளை அழைத்து அவர்களுக்கு வேண்டிய அமுது படைத்து, கொடும் நோயை தீர்க்கும் அருமருந்து உண்டாக்கும் மூலிகை குறித்து கேட்டு அறிந்தார். பின் தேவதைகளின் வழிகாட்டுதலின்படி நோய் தீர்க்கும் மூலிகைகளை கொண்டு மக்களின் நோய்களை தீர்த்து குணப்படுத்தினார். மேலும் 21 தேவதைகளையும் வனப்பகுதியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த தம்பிரான் என்பவர் சித்தரின் சித்து விளையாட்டுகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு முறை பொதிகை சித்தர் தேவதைகளுக்கு அமுது படைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்று'அங்கு நடப்பதை கவனித்தார், வணக்கம் போல் பொதிகை சித்தர் பூஜைகள் செய்து அமுது உண்பதற்காக தேவதைகளை அழைத்தபோது 21 தேவதைகளும் வர மறுத்தனர். இதற்கான காரணத்தை புரிந்து கொண்ட பொதிகை சித்தர் தன்னை பின் தொடர்ந்து வந்து பூஜைக்கு இடையூறு செய்த' தம்பிரான் என்பவரை மயக்கமடைய செய்தார். அதன் பின் தேவதைகள் சித்தர் முன் தோன்றி  அமுது உட்கொண்டன.

    இதனால்' சித்தரும் மனமிரங்கி' தீர்த்தம் திளித்து மயங்கி கிடந்தவரை தெளிவு பெற செய்தார், பின் தம்பிரான் தான் செய்த தவறை உணர்ந்து சித்தரின் தாள் பணிந்து வணங்கி நின்றார். சித்தரும் அவரை ஆசிர்வதித்து, தனது சீடனாக ஏற்று' தன்னுடன் இருந்து சித்த மருத்துவக் கலைகளை கற்று மக்கள் நலனுக்கு  தொண்டு புரியுமாறு அருளியதோடு' சித்த மருத்துவ கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தம்பிரானும் அவருடன் இருந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டார். அதன்பின், தம்பிரான் சித்தரின் அனுக்கிரகம் பெற்று சித்தர் முக்தி அடையும் காலம் வரை பக்தர்களின் எவ்வித நோய்க்கும் தீர்த்தம் வழங்கி சித்தருக்கு பணிவிடை செய்து வந்தார்.

    சித்தர் முக்தி அடைந்தவுடன், அவரின் அருள்வாக்குபடி  தம்பிரான் பொதிகை சித்தரை அடக்கம் செய்து, அங்கு, அருள்மிகு ஸ்ரீ சித்தநாத குருநாதர் என்ற பெயரில் கோவில் கட்டி, 21 தேவதைகளுக்கும் பொதிகை சித்தருக்கும் அமுது படைத்து வழிபட்டு வந்தார். பின்னர் “தம்பிரான்” முக்தி அடைந்ததும் அவரது உறவினர் சித்தரின் கருவறைக்கு அடுத்து அவரை அடக்கம் செய்து தனி கருவறை,  பீடம் அமைத்தும், அவரது பணியினை செய்து வந்தார். எனவும் தற்போதும் அந்த சித்தர் கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு நோய் நொடிகள் உடனுக்குடன் குணமடைவதாகவும் நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்