டிசம்பர் 19 – சிதம்பரம் நடராஜர் தேர்
பிலவ வருடம் – மார்கழி 4
சிதம்பரம் நடராஜர் தேர்
19-டிச-2021 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : பிரதமை
திதி நேரம் : பவுர்ணமி கா 10.22
நட்சத்திரம் : மிருகசீரிடம் மா 5.26
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: Chidamparam
-
December 19 chidamparam natarajar car fest
-
Chidamparam Aani Thirumanjanam
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவிலுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கங்காதர தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க 50 தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்று கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்
கோயில் கொடியேற்றத்தை முன்னிட்டு விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் எஸ்பி நீ அபினவ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
Chidamparam Arudra dharisanam
சிதம்பரம் நடராஜர் கோயிலில் முக்கிய விழாவான ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா மற்றும் பிச்சாண்டவர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக ஆருத்ரா தரிசனம் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கதனர்.
-
Chidamparam Mariamman koil festival
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ளது அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா உற்சாகமாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாதத்திற்கான தீமிதி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் பல்வேறு பூஜைகளும், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கரகம் அலங்கரிக்கப்பட்டு சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளை வலம் வந்தது. அப்போது கரகத்திற்கு பின்னால் ஏராளமான பக்தர்கள் மஞ்சள் துணி உடுத்தி, வேப்பிலை, பூ அணிந்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் கோயில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் கரகம் இறங்கிச் சென்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்து அம்மனின் அருளை பெற்றனர். கோயிலுக்கு உள்ளே ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட மாவிளக்கு போட்டு படையல் நடத்தினர். உடல் நலமில்லாமல் வேன் டிக் கொண்டவர்கள், மனித உருவ பொம்மைகளை வாங்கி வைத்தும், மணலால் செய்யப்பட்ட கை, கால் போன்ற உடல் உறுப்புகளை வாங்கி வைத்தும் வழிபாடு நடத்தினர்.
-
Chidamparam Aani thirumanjanam kodiyetram
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 7ந் தேதி தேரோட்டமும், 8ந் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன உற்சவ விழா 10 தினங்களுக்கு சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி இன்று காலை கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று முதல் தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் நகர வீதிகளில் உலா வரும்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7ந் தேதி தேரோட்டம் நடக்கிறது அன்று காலை கோயிலின் மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வரும். அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வேண்டி வடம் பிடித்து தேர் இழுப்பார்கள் அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் கோயிலின் உள்ளே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
மறுநாள் 8ந் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பின்னர் மதியம் 2 மணி அளவில் நடராஜரும் சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிப்பர். பின்னர் நடராஜர் சித்சபா பிரவேசமான கருவறைக்கு கொண்டு செல்லப்படும். பிரசித்தி பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
-
Chidamparam Natarajar koil
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்கிறார்.
ஜூன் – 30 – வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
ஜூலை 1 சூரிய பிறை வாகனத்தில் வீதிஉலா
ஜூலை 2 வெள்ளி பூதவாகனத்தில் வீதிஉலா
ஜூலை 3 தெருவடைச்சான் உற்சவம்
ஜூலை 4 வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா
ஜூலை 5 தங்க கைலாச வாகனம்
ஜூலை 6 தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
ஜூலை 7 தேர்த் திருவிழா, இரவு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை
ஜூலை 8 சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம்
பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா -
Chidamparam Natiyanjali Festival
இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டிய மாணவர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற நாட்டிய விழா நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனைக்காக நடந்த இந்த நிகழ்ச்சியை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் துவக்கி வைத்தார்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் பங்கேற்று கலைஞர்களை வாழ்த்தினார். ஒரே நேரத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் நடனம் ஆடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் உலக சாதனைக்காக நடேசர் கவுத்துவம் என்ற பெயரில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.