டிசம்பர் 19 – சிதம்பரம் நடராஜர் தேர்
பிலவ வருடம் – மார்கழி 4
சிதம்பரம் நடராஜர் தேர்
19-டிச-2021 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : பிரதமை
திதி நேரம் : பவுர்ணமி கா 10.22
நட்சத்திரம் : மிருகசீரிடம் மா 5.26
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: Car Fest
-
December 19 chidamparam natarajar car fest
-
Kalazhagar Koil Car fest
மதுரை அருகே பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை அருகே, அழகர்கோவிலில் அழகுற அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில், வருடந்தோறும் ஆடிப் பெருந்திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 7-ஆம் தேதி ஆடிப் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவியருடன், சிம்மம், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி பிரமோற்சவ திருவிழாவான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருதேருக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா" கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
-
Nellaiappar Car Fest
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம், பக்தர்களின் சிவசிவா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லையில் அமைந்து இருக்கிறது நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிவசிவா கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் தேர் வடத்தை பிடித்திழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். தேரோட்டத்தையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.