Tag: Bogi

  • January 14 2024 Bogi

    ஜனவரி 14 – போகிப் பண்டிகை
    சோபகிருது வருடம் – மார்கழி 29
    14-ஜன-2024 ஞாயிறு
    போகி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை ம 12.21
    நட்சத்திரம் : அவிட்டம் ம 2.44
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : மேற்கு

  • Ketta shakthigalai virattum bogi kappu

    அந்தக் காலத்தில் கூரை மற்றும் பனை ஓலை வீடுகள் தான் அதிகம் இருக்கும். பழைய கூரைகளையும், ஓலைகளையும் எரிப்பதற்கு போகி பண்டிகையை பயன்படுத்திக் கொண்டார்கள். போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்வதால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற காப்பு கட்டுதல் என்ற வழிமுறையை கடைபிடித்தார்கள்.

    காப்பு கட்டுதல் என்பது வேப்பிலை, பீளைப்பூ, கருந்துளசி, தும்பை இலை, ஆவாரம்பூ ஆகிய ஐந்து மூலிகை பொருட்களைக் கொண்டு ஒன்றாக சேர்த்து கட்டி காப்பாக வீடுகளின் கூரையில் சொருகி வைப்பார்கள். இப்படி வீட்டில் சொறுகி வைப்பதால் வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது. மேலும் இவைகள் தெய்வீக மூலிகை என்பதால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் வீட்டிற்குள் நுழைய முடியாது.

    வேப்பிலையை தோரணமாக கட்டுவதும், சொருகி வைப்பதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நோய்க் கிருமிகளின் தாக்குதல்கள் இன்றி ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கு உதவியாக இருக்கும். வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துக் கொண்டால் போதும்.

    விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் அந்த சூரியனுக்கும்,  மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்த இந்த நாள் தான் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. போகி அன்று செய்யக்கூடிய ஒரு நிகழ்வுதான் இந்த காப்பு கட்டுதல் ஆகும். சேவூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று தங்களது வீடுகளை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வெள்ளையடித்து  தரைகளை சாணத்தால் மெழுகியிருந்ததை காணமுடிந்தது.
     
  • January 14 Bogi

    ஜனவரி 14 – போகிப் பண்டிகை 
    விகாரி வருடம் – மார்கழி 29
    போகி, ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாள் திருக்கல்யாணம்
    14-ஜன-2020 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    6.24
    நட்சத்திரம்    :    மகம்    கா    11.18
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     
  • Bogi mariamman vazhipadu

    மாரியம்மன் என்றால் மாரியின், அதாவது மழையின் தேவதை என்று பொருள். மாதம் மும்மாரி பொழிய மாரியம்மனைதான் வேண்டி வணங்குவார்கள் விவசாயப் பெருமக்கள். விவசாயிகள் ஆண்டு முழுவதும் விளைவித்த உணவுப்பொருட்களை எல்லாம் மார்கழியில் அறுவடை செய்து தை மாதத்தில் விற்பனைக்கு அனுப்புவர். 

    தை முதல் நாள் பொங்கல். அரிசி, மஞ்சள், கரும்பு என எல்லா விளைபொருட்களும் மக்களிடம் வந்து சேரும் . எனவே கடந்தாண்டு வேண்டிய மழையை பெய்வித்து, விளைபொருட்களை நல்ல முறையில் விளைவிக்க அருள் செய்த மாரியம்மனுக்கு நன்றி தெரிவிக்கவே போகி பண்டிகையன்று அம்மன் வழிபாடு நடத்துகிறோம். 

    தை மாதத்திற்கு பிறகு உஷ்ணம் தொடங்கும் என்பதால், கோடையில் பரவும் நோய்களை தடுக்கும் விதமாக அம்மாதங்களிலும் மழையை பெய்விக்க வேண்டி மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். மாரியம்மனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே மாரியம்மன் வழிபாடு என்பது குழந்தைகளுக்கு நோய் நொடிகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வாள். போகியில் சாமி கும்பிடும்போது மாரியம்மன் பாடல்கள், மாரியம்மன் தாலாட்டு ஆகிய எளிய தமிழ் பாடல்களை பாடி அன்னையை குளிர்விக்கலாம்.
     
  • Bogi Festival

    பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழையபொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.

    பழைய பொருட்களையும், பயனற்றவையும்விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம்.

    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்துதமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழையபொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

    பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான்  பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக  மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.

    போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றைதீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால்வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என நம்பப்படுகிறது. பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலம்போடப்படும்.

    போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவைபடைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

    பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போதுகுழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகிபண்டிகை அமைந்திருக்கும்.
     
  • Bogi Festival Special