Tag: Bairavar

  • Special Abhishekam for Sri Bhairava at Sri Darbaranyeswarar Temple!

    ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 

  • Badhala bairavar

    ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

    வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

    ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மேலும் சிறப்பு தருவதாக அமையும்.

    சிவந்த ஜடையும் பரிசுத்தமான உடலும் சிவந்த தேஜஸும் சூலம் கபாலம் உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும் நிர்வாணமாகவும் நாயினை வாஹனமாகவும் கொண்டு முக்கண்ணனாக ஆனந்த வடிவினனாக பூத பிரேதநாதனாக க்ஷேத்திரங்கள் க்ஷிப்பவராக உள்ளார் பைரவர். .

  • Bairavar Jayanthi Yagam

    இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகளான மஹா கணபதி ஹோமம், கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை, 64 பலி பூஜைகள், கூஷ்மாண்ட ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. 

    இதனை தொடர்ந்து மாலை காலபைரவருக்கும், சொர்ண பைரவருக்கும் விசேஷ அபிஷேகங்களும், ஆராதனைகளும், 64 ஹோமகுண்டங்களுக்கான 64 பைரவர் பூஜையும், சொர்ண பைரவர், மஹா பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களை வேண்டி நடைபெற உள்ளது. நாளை 64 குண்டங்களில், 64 நபர்கள் பங்கேற்று நடைபெறும் மாபெரும் சதுர்ஷஷ்டி பைரவர் யாகம் நடைபெற உள்ளது.