Tag: bagavan

  • soorya bagavan

    பொதுவாக சூரியனின் திசை வந்தாலே வீட்டில் உள்ளவர்கள் நடுங்கி போவார்கள். அதேபோல் நவகிரகங்களில் சூரியனுக்கு மட்டுமே மிகவும் குறுகிய காலம் (6 வருடம்) தசா சக்கரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மற்ற கிரகங்கள் செய்யும் நன்மை மற்றும் தீமைகளை குறுகிய காலத்தில் செய்துவிட்டு போவார் சூரியபகவான்.அதேபோல் சூரியதிசையை எதிர்கொள்ளும் சக்தி இங்கும் எவருக்கும் இல்லை.

    அதேபோல் ஜாதகத்தில் தோஷங்களில் முதன்மை தோஷமான பித்ரூ தோஷம் இவரால் ஏற்படக்கூடிய தோஷமாகும். அதேபோல் யோகங்களுக்கு மூலதாரமாக விலங்குவது சூரியனே. இதன்மூலம் அறிந்துகொள்வது என்னவென்றால்.

    "சூரியனை போல் அள்ளி தந்து வாழவைப்பவரும் இல்லை…. அதேபோல் சூரியனை போல பிடுங்கி கெடுப்பவரும் இல்லை" அதனால் தான் அவர் அரை சுபராக கருதப்படுகிறார்.

  • Nandhi Bagavan Sirappugal

    பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார்.

    அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார்.

    நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.

    தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.

    இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார்.

    புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும். 

  • Dhanvanthri Bagavan

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    ஆயுள் வேதமே ஆயுர்வேதம்.

    ஆயுர்வேதம் 
    ஓர் 
    இயற்கை மருத்துவம்.

    சித்த மருத்துவம் 
    தமிழின் கொடை. அகத்தியர் பெருமானே ஆதார நாயகன்.

    அகத்தியரும் 
    தேரையரும் 
    யூகி முனிவரும்
    சித்த மருத்துவத்தை
    அதிகமாய் அருளினார்கள்.

    ஆயுர்வேதத்தின் பிதாமகன்
    தன்வந்திரி.

    அகத்தியர் 
    வடநாட்டவர். 
    தமிழ் கற்று சித்தமருத்துவம் அருளினார்.

    தன்வந்திரி 
    தமிழ் நாட்டவர். 
    வடமொழிப் புலமையில் வடநாட்டினரை
    விஞ்சியவர்.

    தமிழின் 
    சித்த வைத்தியத்தை வடமொழியில் வழங்கி 'தன்வந்திர்'
    என்ற 
    நிகண்டாக்கினார்.

    அந்நூலை 
    அருளியதாலேயே
    தன்வந்திரி 
    என்ற 
    காரணப் பெயரும் பெற்றார்.

    வாகட நூலில் வல்லவரான 
    தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம்.

    மகாவிஷ்ணுவின் 
    மறு அவதாரமே தன்வந்திரி என்பார் 
    சில ஆய்வர்.

    தன்வந்திரியின்
    பிறப்பு பற்றி 
    சில சுவையான குறிப்புகள் உண்டு.

    தேவர்களும் 
    அசுரர்களும் 
    பாற்கடலைக் கடைந்தபோது 
    அமுத கலசத்துடன் அவதரித்தார் 
    தன்வந்திரி 
    என்கிறார் 
    போகர் பெருமான்.

    தீர்த்ததமர் 
    என்பவரின் 
    மகனாய் பிறந்தவர். 

    காசிராஜன் 
    புதல்வராகத் தோன்றினார்.

    தீர்த்தப்பசு 
    என்பவரின் 
    திருமகனே 
    தன்வந்திரி. 
    அப்பிறப்பில் 
    அவர் பெயர் 
    சேதுமான்.

    சேதுமான் தான் சுச்சுருதருக்கு ஆயுர்வேதம் உபதேசித்தவர்.

    இவ்விதம் கூட பல 
    பிறப்புக் குறிப்புகள் உலவுகிறது..

    தன்வந்திரியின் 
    மகன் 
    சேதுமான் 
    என்று 
    அடித்துச் சொல்கிறது அபிதான சிந்தாமணி.

    அனு 
    என்ற அரசனின் வாரிசாகப் பிறந்து 
    பரத்பாசரிடம் 
    ஆயுர்வேதம் கற்று 
    அதை 
    எட்டு வகையாகப் பிரித்து உபதேசித்தார்
    என்றும் கூறுகிறார்கள்.

    இவ்விதம் 
    பலவித பிறப்பும் 
    பற்பல செய்திகளும்
    பரவிக் கிடக்கின்றன.

    அகத்தியர் பெருமான் 
    ஒருபடி மேலே போய் தன்வந்திரி
    விஷ்ணு பகவான் தான் எனச் சத்தியம் செய்கிறார்.

    முற்பிறப்பில் விஷ்ணுபிரானாக
    வலம் வந்ததால்…
    மனிதனாகப் பிறந்ததே ஆயுர்வேதத்தை அகிலத்திற்கு
    அளிக்கத் தானாம்.

    அவர் தந்தை 
    தம்புராவுடன் 
    பாடிச் சென்று 
    யாசகம் பெற்றே தன்வந்திரியை வளர்த்தார்.

    தந்தையே சகல சாஸ்திரங்களையும் கற்பித்தார்.

    18 சித்தர்களும் தன்வந்திரிக்கு உபதேசித்துள்ளார்கள்.

    மூன்று லட்சம்
    கிரந்தங்களையும் சித்தர்கள் 
    உபதேசித்தனர்.

    அதனால் 
    ஞானம் பெற்று ஞானியானார் 
    தன்வந்திரி.

    தன்வந்திரி 
    சூரியன் போல் பிரகாசித்தார் 
    என்கிறார் 
    அகத்தியர் பெருமான்.

    இது 
    சித்தரர்களுக்கான
    சித்த அடையாளம்.

    ஒரு கையில் 
    கமண்டலம்.
    மறு கையில் 
    கதை. 
    இதுவே 
    தன்வந்திரியின்
    தவக் கோலம்.

    விக்கிரமாதித்தன் சபையில் 
    'நவரத்தினம்'
    என்ற பட்டம் பெற்றவர்.
    பண்டிதர் குழுவில் பணியாற்றியதாகவும் 
    செய்தி உள்ளது.

    தன்வந்திரி 
    அருளிய நூல்கள் வைத்திய சிந்தாமணி வைத்திய காவியம் 
    நூறு கண்ட ஞாலம் 
    கலை ஞானம் 
    ஜெயம் தைலம் 
    சிமிட்டு ரத்தினச் சருக்கம் கருக்கிடை 
    நிகண்டு 
    வைத்தியம் 
    தண்டதம் 
    கருடாரூடம் 
    செயநீர் 
    மூப்பு சூத்திரம் 
    உள்ளிட்ட பல.

    ஐப்பசி மாதம் 
    புனர்பூசம் 
    4 ஆம் பாதத்தில் அவதரித்தவர் 
    தன்வந்திரி.

    அவர்
    800 வருடம்
    32 நாட்கள் 
    வாழ்வாங்கு வாழ்ந்தார்.

    தன்வந்திரி 
    பற்றிய 
    தகவல்கள் குறைவே.

    வைத்தீஸ்வரன் கோயிலில் 
    தன்வந்திரி 
    லயமானார் 
    என்கிறது ஓர் ஆய்வு.

    கோரக்கரின் குறிப்பு 
    தன்வந்திரிக்கு 
    60 மனைவிகள் 
    160 மக்கட் செல்வங்கள் என வியக்க வைக்கிறது.

    எண்ணற்ற 
    கோயில்களில் தன்வந்திரிக்கு 
    பிரதான இடமுண்டு.

    அவற்றில் 
    தீராத நோய் தீர்க்கும் தெய்வமாக 
    காட்சி அளிக்கிறார்
    தன்வந்திரி சித்தர்.

    எந்தவித நோயையும் தீர்க்கும் 
    சிறப்பு மருத்துவரே-
    ஸ்பெஷலிஸ்ட்டே
    தன்வந்திரி…
    என்று துதிக்கிறார்கள் 
    பாதிப்புகள் நீங்கி பயன்பெற்ற
    பக்தகோடிகள்.

    மரணமிலா பெருவாழ்வுக்கு
    வழிகாட்டும் 
    மகா சித்தர் 
    என்று தொழுகிறது
    ஆன்மீக உலகம்.
     

  • Garuda bagavan dharisana palangal

    ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்

    நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

    திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.

    செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.

    புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

    வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்

    சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.

    கருடாழ்வாரை தரிசிக்கும்போது கூறி வணங்க வேண்டிய மந்திரம்

    குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! 
    விஷ்ணு வாஹ ! 
    நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:

    என கூறி வணங்க வேண்டும். பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
     

  • Narambu prechanai budhan bagavan

    புத்தியை இயக்கும் சக்திகளில் மிகவும் முக்கியமானது புதன் கிரகம். ஜாதகத்தில் புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வியும், மனன சக்தியும், கற்பனை

    வளமும் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, நிச்சயம் புதன் பகவானின் அருளைப்பெற வேண்டியது முக்கியம். திருவெண்காடு தலத்தில் புதன் பகவானுக்கு தனிச் சந்நதி உள்ளது. மேலும், மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரரும், பிரம்மவித்யாம்பிகை எனும் திருப்பெயரோடு அம்பாளும் திகழ்கிறார்கள்.

    பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று பழமொழி உண்டு. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோளான புதன், சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகில் இருப்பதாலேயே சாதரணமாக கண்களுக்கு புலப்படுவதில்லை. காலை அல்லது இரவின் தொடக்கத்தில் மட்டுமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

    சோதிட சாஸ்திரத்தில் புதனை கல்வியின் நாயகன் என்று அழைக்கின்றனர். "மாதுல (மாமன்), கல்விக்காரகர்' என்று அழைக்கப்படும் புதன் உடலில் நரம்புக்கும், தோலுக்கும் அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை கை கூடும். திருவெண்காடு நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக – வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

    இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர். கல்வியில் சிறக்க புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசிக்க கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை..

    படைப்புக் கடவுளான பிரம்மா இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் அதனால்தான் இங்குள்ள அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றன தலபுராணங்கள். கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்! இசைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது.

    உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம் புதன் தசை நடப்பவர்கள் புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

    புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். அதனால் பிரதி புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சுலபமான பரிகாரமாகும். புத பகவான் ஜனவசிய (வியாபார) பிரிவினைச் சேர்ந்தவர்.

    அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். மேலும் மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் வாக்கு வன்மையும், கல்வியில் மேன்மையும் உண்டாகும்.

    இக்கோயில் கல்வி வரமருளும்; புத்தியை வலுவூட்டும். சீர்காழியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, புதன் கோயில்.