Tag: Ayudha Poojai

  • Ayudha poojai timings

    சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 9ம் தேதி, அக்டோபர் 25 நவமி திதியில், அன்னையின் ஆயுதங்களை பூஜை செய்த நாள். அந்த வகையில் நாமும் தற்போது நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களை பூஜிப்பது வழக்கம்.

    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட, சுவாமி வழிபாடு செய்ய நல்ல நேரம்
    25 அக்டோபர் 2020 (ஐப்பசி 9) ஞாயிற்றுக் கிழமை

    அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை மட்டும்

    காலை 7 மணி முதல் 10 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) – ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

    காலை 11 மணி முதல் 12 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை

    பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்

    இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்

    பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம்
    ஞாயிறு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம்
    மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இராகு காலம்
    இரவு 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம்
    இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.
     
  • Ayudha poojai worship

    நவராத்திரியின் ஏழாம் நாளன்று நான்முகன் நாயகி  கலைவாணி ,நாதஸ்வரூபமாக எழுந்தருளி  நமக்கு ஞானத்தை தந்தருளுகிறாள். நவராத்திரியின் ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது,சரஸ்வதி தேவியை முறையாக  ஆவாகனம் செய்ய வேண்டும். கல்வியின் தெய்வமான சரஸ்வதி ஒரு  ஞான சக்தி.

    அதற்கு அடுத்து வரும் எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாத பல செயல்களையும் செய்யும் திறனை நமக்கு அருளி, நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள். பண்டிகையின் ஒன்பதாவது நாளில் அழியாத கல்வி செல்வத்தை அருளுகிறாள். கற்ற வித்தை என்றும் நிலையானது என்பதை நமக்கு உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி.

    நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி.தீமைகளில் இருந்து  நன்மையை காப்பாற்றி அருளும், விஜயதசமி  அன்று தொடங்கும் எந்த ஒரு  காரியமும்  வெற்றி பெறும் என்பதே விஜயதசமி கொண்டாடப்படுவதற்கான நோக்கம். நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    கல்வி, தொழில் செழிக்கவும், குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்கவும்  சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். சர‌ஸ்வ‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அவ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். மூலப் பரம்பொருளான விநாயகரை மனதில் நினைத்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன், விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது 'துர்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம' என்று கூறி பூஜையை தொடங்க அனைத்தும் நன்மையில் முடியும்.

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின் முன்பு, புத்தகங்களை  வைத்து சந்தான பொட்டிட வேண்டும். வாழை இலை விரித்து அதில் சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். கூடவே அவல், பொரி, கடலை மற்றும் பழங்களும் வைக்க வேண்டும். கலைமகளுக்கு உகந்த  செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்ற மலர்களை அன்னைக்கு அணிவிக்கலாம். 

     நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே மூன்று தேவியரின் அருளைப் பெற முடியும்.  அன்று நாம் செய்யும் ஆயுத பூஜை வழிபாடும் வாழ்வில் நம் உயர்வுக்கு பெரிதும்  உதவும். ஆயுத பூஜையன்று சிறிய ஆணி முதல் பெரிய இயந்திரங்கள் வரை, இறைபொருளாகப் பாவித்து ,கழுவி சுத்தமாகத் துடைத்து,பொட்டிட்டு, பூ வைத்து,பூஜைகள் செய்வது சிறப்பம்சமாகும்.
     
  • Ayudha Poojai Sami Kumbida Nalla Neram

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை நாளில் வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம். 

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ஆம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ஆம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம். 

    ஆயுதபூஜையின் ஐதீகம் ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது. 