Tag: Auspiciousness அரசர்கோயில் மகாலட்சுமி

  • Spiritual Vastu Rules for Women: Auspicious and Divine!

    பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக வாஸ்து விதிகள், சுப மங்களங்களையும் தெய்வீகப் பண்புகளையும் பெற உதவும். பெண்கள் எப்போதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும்: மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு. இது உடல் ஆரோக்கியத்தையும், ஆன்மிக சக்தியையும் தரும். தாலியை நூல் சரட்டில் கோர்த்து அணிவது சிறப்பு, ஏனெனில் நூலில் பஞ்ச பூத சக்திகள் உள்ளன. தேவையான சங்கிலியை அணியலாம், ஆனால் தாலியை தினமும் கழற்றி அணிவது தவறு; அது எப்போதும் கழுத்தில் இருக்க வேண்டும்.

    காலையில் அடுப்பு பற்றவைக்கும் முன், அக்கினியை வணங்கி, “சமைத்த உணவை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கட்டும்” என பிரார்த்திக்கவும். மாலையில் அரசமரத்தை வலம் வருவது தவிர்க்கப்பட வேண்டும். கோயிலுக்கு எடுத்துச் செல்லும் எண்ணெயை, கோயில் விளக்கில் மட்டுமே ஊற்ற வேண்டும்; பிறர் ஏற்றிய விளக்கில் ஊற்றக் கூடாது. முந்தானையைத் தொங்கவிடாமல், இழுத்து சொருகி நடக்கவும், இல்லையேல் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    குத்து விளக்கு ஏற்றும்போது, ஒரு திரி மட்டும் பயன்படுத்தக் கூடாது; இரு திரிகளுடன் ஒரு முகமாக ஏற்றவும். கோலம் போடும்போது தெற்கு நோக்கி நிற்கக் கூடாது; கோடு தெற்கில் முடியாமல் இருக்க வேண்டும். கோயிலில் வணங்கும்போது, பின்னங்கால்களைச் சேர்த்து, நெற்றி தரையில் படுமாறு முழு உடலுடன் விழுந்து கும்பிட வேண்டும். பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது, முந்தானையை இடது, வலது கைகளுக்கு நடுவில் வைத்து பெறவும்.

    சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது, தெற்கு முகமாக உட்கார்ந்து, மஞ்சள் தேய்த்து முகத்தில் பூசி குளிக்க வேண்டும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய், மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். இவ்விதிகளைப் பின்பற்றுவது ஆன்மிகப் பலன்களையும், குடும்ப நலனையும் உறுதி செய்யும்.

  • Arasarkovil Mahalakshmi:The Goddess Bestowing Prosperity and Auspiciousness

    செங்கல்பட்டு –  மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்  ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில். இந்த ஆலயத்தில் குடிகொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். அன்னைக்குப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக தருகிறார்கள்.  

    யோக வாழ்வளிக்கும் மகாலட்சுமீஸ்வரர்

    மைசூருக்கு அருகேயுள்ள ஹாஸன் பகுதிக்கு 23 கி.மீ தொலைவில் உள்ள ஊர் தொட்ட கட்டவல்லி. இங்கு இருக்கும் மகாலட்சுமியின் ஆலயத்தில் சரஸ்வதிக்கும் ஒரு சந்நதி யுள்ளது. சிவனும், விஷ்ணுவும் எதிர்எதிராக கோயில்கொண்டுள்ளனர். மிகவும் அழகான உருவம். நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை வைத்திருக்கிறாள். இம்மாதிரி கோலத்தில் வேறு எங்கேயுமே மகாலட்சுமி கிடையாது.

    திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதாக தல புராணம் கூறுகிறது. கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில், அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

    மாசற்ற வாழ்வு தரும் மாமாகுடி ஸ்ரீ மகாலட்சுமி

    ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடுகின்றனர். திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும், ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் இத்தலத்தை லட்சுமிபுரம், திருமால்மாகுடி என்றெல்லாம் அழைத்தனர். மிகவும் அரிய ஆலயமாக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

    அழகான ரூபம் தரும் அரூப லட்சுமி

    காஞ்சி காமாட்சி கோயிலில் அரூப லட்சுமியை தரிசிக்கலாம். மகாலட்சுமிக்கு தான் மிகவும் அழகுடையவள் என்ற கர்வம் ஏற்பட்டதாம். ஒருநாள் தன் கணவர் மகாவிஷ்ணு அழகையே பரிகசிக்க, அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்க காமகோட்டத்தை அடைந்து தேவியை நோக்கித் தவம் புரிகிறாள்.