Tag: Atthi Varadha

  • Atthi Varadha 47 days 1 crore dharshan

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் கடந்த மாதம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்றது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெற்ற அத்தி வரதர் வைபவத்தின் இறுதிநாளான இன்று, மீண்டும் அனந்த புஷ்கரணியில் மீண்டும் சயன நிலையில் வைக்கப்பட உள்ளார். 

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என பல்வேறு அலங்காரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சிஅளித்துள்ளார். முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர். 

    தினமும் லட்சக்கணக்கான பகதர்கள் தரிசனம் செய்த நிலையில் 47 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

  • Pattu Sennira Atthi Varadha

    அத்தி வரதர் சக்ர வாரத்தையொட்டி பட்டு செந்நிற ஆடையில் மல்லி மற்றும் முல்லை பூ அலங்காரத்துடன் காட்சியளித்தார்.

    உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது கடந்த 5 நாட்களில் 3.5 லட்சம் பக்தர்கள் அதித் வரதரை தரிசனம் செய்துள்ளனர்

    அத்தி வரதரை தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்து 3 மணி நேரத்திற்க்கு பிறகே  தரிசனம் செய்து வருகின்றனர்

    இன்று 5 வது நாளில் அத்தி வரதர் சுக்ரவாரம் பெருமாளுக்கு உகந்த நாள் செந்நிற ஆடையுடன் மல்லி மற்றும் முல்லை பூ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    கடந்த 4 நாட்களில் இதுவரை 3.5 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் அத்தி வரதர் திருவிழாவை முன்னிட்டு 2600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்