Tag: athi varadhar

  • Athi Varadhar dharshan

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் அத்தி வரதரை கடந்த 10 நாட்களில் மட்டும் 12 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட்டு 17 ஆம் தேதி வரை 48 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது.

    11வது நாளான இன்று அத்தி வரதர் காவி நிற பட்டாடையிலும் கதம்பம் பூ மலர்களால் அரங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார்.

    நேற்றுடன் 10 நாட்களில் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா  தெரிவித்துள்ளார்.

    48 நாட்கள் நடைபெறும் அத்தி வரதர் திருவிழாவுக்காக வெளி மாநில, வெளி நாடுகளில் இருந்து அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். கோயில் வளாகம் மட்டும் அல்லாமல் நகரம் முழுவதும் போலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று  காலை  5 மணி முதலே  வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர் அத்தி வரதரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் கூறுகின்றனர். 

    மேலும் நாளை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் அத்திவரதரை தரிசனம் தரிசனம் செய்ய இருக்கிறார். 
     

  • Athi varadhar sirappu dharisanam

    40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் தற்போது சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  ரூ.500 செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் தினமும் ஆயிரம் பேர் வரை அத்தி வரதரை தரிசிக்கலாம். 

    காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 48 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ளது.

    அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். கடந்த 5 நாட்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.

     அத்திவரதர் தரிசனம் செய்வதற்கென ஆன்லைனில் கடந்த 2 நாட்களாக ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தோருக்கான தரிசனம் நேற்று தொடங்கியது.

    அதன்படி தினந்தோறும் இரண்டு வேளைகளில் 500 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து 12 மணி வரை 500 பேர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 500 பேர் என மொத்தம் ஆயிரம் பக்தர்கள் ஆன்லைனில் ரூ. 500 செலுத்தி தரிசனம் செய்தனர்.

    சிறப்பு தரிசனம் மேற் கொண்டவர்கள் முக்கியஸ்தர்கள் செல்லும் வரிசையில் சென்றனர். அவர்களுக்கு அத்திவரதர் பெருவிழா என அச்சிடப்பட்ட கைப்பையுடன் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
     

  • Kanchi athi varadhar

    சின்ன காஞ்சிபுரத்தில் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஆனந்தபுஷ்கரினி என்ற குளத்தில் இருந்து வருகிற 1/07/2019 தேதியில் அத்திவரதர் வெளியே வந்து நாற்பத்து எட்டு 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் அருள்புரிகிறார். நின்ற கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்.  சயன கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்
     
    அடுத்த தரிசனம் 2059ல்  நாற்பது ஆண்டுகள் பின் கிடைக்கும். 40 ஆண்டு ஒரு முறை மட்டுமே அத்திவரதரை காண முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ,  நம்   கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

    இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி. மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.

    பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

    பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

    வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள்,  40 வருடங்களுக்கு  ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

    வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்…

    நின்ற கோலத்திலும்,சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.