மே 14 – அட்சயதிரிதியை
பிலவ வருடம் – சித்திரை 31
subamugurthanaal
சுபமுகூர்த்த நாள்
அட்சயதிரிதியை
14-மே-2021 வெள்ளி
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சூன்ய
திதி நேரம் : திரிதியை முழுவதும் 0.00
நட்சத்திரம் : மிருகசீரிடம் முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: Atchaya thirudiyai
-
MAY 14 ATCHAYA THIRUDIYAI
-
Atchaya thirudiyai poojai murai
அட்சய திருதியை பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம், தங்கம் வைத்து மந்திரங்களையும் உச்சரித்து பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேலே கலசம் வைக்கவும். வீட்டில் லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைக்கவும். பின்னர் நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்கவும்.
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். பின்னர் தீப ஆராதனைகள் செய்யுங்கள்.
-
Atchaya thirudiyai guberan
அட்சய திருதியை நாளில் ஒரு கைப்பிடி உப்பை வாங்கி வைத்து வழிபட்டால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். அன்றைய தினத்தில் ஒரு உப்பு பாக்கெட்டை வாங்கி பூஜை அறையில் வைத்துவிட்டு, அதன் பிறகு பூஜையை துவங்க வேண்டும்.
இறைவனுக்கு தீப தூபம் காட்டுகையில் உப்பிற்கும் காட்ட வேண்டும். அதன் பிறகு அந்த உப்பை எடுத்து உப்பு டப்பாவில் கொட்டி அதை யன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்கும். உப்பு வழிபாட்டை இன்று செய்வதன் மூலம் நமது கடன் சுமைகள் விரைவில் நீங்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அட்சய திருதியை நாளில் தானம் செய்வது நமக்கு அமோக பலனை தரும்.
இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேர தொடங்கும்.
அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ