Tag: Asta Bairavar Yagam

  • Asta Bairavar Yagam

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி 16.03.2020 திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நவாவரண பூஜை, தச மஹாவித்யா ஹோமத்துடன் சொர்ணாகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது.

    இதில் நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள், வஸ்திரங்கள், நிவேதனப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கு  , பால், தயிர், மஞ்சள், சந்தனம் மற்றும் பன்னீர் போன்ற பஞ்ச திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். 

    மேலும் பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.