Tag: Arudhra Dharisanam

  • December 30 Arudhra Dharisanam

    டிசம்பர் 30 – ஆரூத்ரா தரிசனம்
    சார்வரி வருடம் – மார்கழி 15
    ஆரூத்ரா தரிசனம்
    30-டிச-2020 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    9.18
    நட்சத்திரம்    :    திருவாதிரை    இ    7.50
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • January 10 Arudhra dharisanam

    ஜனவரி 10 – ஆரூத்ரா தரிசனம்
    விகாரி வருடம் – மார்கழி 25
     பவுர்ணமி பவுர்ணமி
    ஆரூத்ரா தரிசனம்
    10-ஜன-2020 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    ந.இ    1.49
    நட்சத்திரம்    :    திருவாதிரை    ப    3.31
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Arudhra Dharisanam Patri Therindhukolvom

    சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

    ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.

    ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

    அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிப்பதாக வரம் கொடுத்தால். பார்வதியின் வரத்தை கேட்டு சிவபெருமான் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

    அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும், அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

    சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாககொண்டாடப்படுகிறது.