Tag: Arogya Peedam

  • Danvantri Arogya Peedam

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 07.03.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சனி சாந்தி ஹோமத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது. 

    மேலும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு ஹோமத்துடன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மஹா சண்டியாகத்தின் இரண்டாம் கால யாக பூஜைகளும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் சென்னை திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினர்களின் தேவி மாஹாத்மியம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணங்கள் நடைபெற்றது. இவ்வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். 

    மேலும் நாளை 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை மங்கள மஹா சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதியும், மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் போன்ற 6 ஹோமங்களும்,  விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
     

  • Danvantri Arogya Peedam

    தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு 108 கிலோ மஞ்சள் குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் தேய்பிற அஷ்டமியை முன்னிட்டு நேற்று 21.09.2019 சனிக்கிழமை மற்றும் இன்று 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ப்ரத்யங்கிரா, துர்கா, பைரவர் யாகங்களுடன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ காலபைரவருக்கு 108 கிலோ மஞ்சள்  குங்கும்ம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருஷ்டி தோஷங்கள் நிவர்த்தியாகவும், சத்ரு உபாதைகள் அகலவும், குடும்ப நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், உலக நலனுக்காகவும், விவச்சாயங்கள் செழிக்கவும், மேலும் பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிராத்தனை செய்தனர். மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார், இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
     

  • Sri Danvantri Arogya Peedam Durga Homam

    பன்னிரு துர்கையின் அருள் பெற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தேவி மூகாம்பிகை ஹோமம் நடைபெற இருக்கிறது. 

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் வருகிற 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதத்தை  முன்னிட்டு  காலை 10.00 மணி முதல் 12.00 மணி  வரை தேவி மூகாம்பிகை ஹோமம் நடைபெற உள்ளது.

    தேவி துர்கையானவள் வனதுர்கை முதல் அஸுரி துர்கை, ஜெய துர்கை, சரஸ்வதி, சாமுண்டி, ஆக பன்னிரெண்டு துர்கைகளும் ஒன்று சேர்ந்தது தேவி மூகாம்பிகையின் அம்சமாகும். ஒவ்வொரு துர்கைக்கும் ஒவ்வொரு விதமான சக்தியும், அவளின் கருணையும், அருளையும், பலனையும், எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக ஆதிசக்தி நமக்கு அருள் புரிந்துள்ளார்.

    மூகன் எனும் அரக்கனை வதம் செய்ததால் அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறது. மூகாம்பிகை தேவி காளியின் அம்சமாகவும், திருமகளின் அம்சமாகவும், கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள். இவள் பத்மாசனத்தில் வீற்றிருந்து, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரணடைய தூண்டும் விதமாகவும், மற்றது வரமளித்து வாழ்த்தும் கோலத்தில் அன்னை மூகாம்பிகை காட்சியருள்கிறாள். மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். மூகாம்பிகை தேவியை அனைத்து கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்களின் கலைத்திறன் சிறப்படைய வழிபடுவது சிறப்பாகும்.

    மூகாம்பிகை ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சகலகாரிய சித்தி பெறலாம், சர்வ வஸ்யம், ரோக நிவர்த்தி, வாக்குப் பலிதம், திருஷ்டிதோஷ நிவர்த்தி, சத்ருநாசம், நேத்ர ரோக நிவர்த்தி, எதிலும் வெற்றி, சகல சம்பத்து விருத்தி, சோகநாசம், பயம் நீக்குதல், ஞானானந்தகரம், வசீகரணம், ஆயுள் விருத்தி, புத்ர விருத்தி, வித்தை, சங்கீத விருத்தி, தனலாபம், பதவி உயர்வு, மங்களப் பிராப்தி, சஞ்சலமின்மை, சந்தோஷம், அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட லசஷ்மி கடாசஷம், தீர்க்க சுமங்கலி பிராப்தி போன்ற பல்வேறு விதமான நன்மைகளை பெறலாம்.

    அன்னை மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறுகள், தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தேவி மூகாம்பிகையை வேண்டி நடைபெறும் மூகாம்பிகை ஹோமத்திலும், விசேஷ பூஜைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அழைப்பு விடுக்கிறது. 
    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513. செல் – 9443330203

  • Danvantri Arogya Peedam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 23.07.2019 காலை 10.00 மணிக்கு ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு தடைகளை தகர்க்கும் அதர்வண பத்ரகாளி யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் துவங்கியது. 

    இந்த அபிஷேகமானது வருகிற 30.07.2019 ஆடி செவ்வாய்கிழமை வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றலை கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

    ஆடி செவ்வாய்கிழமையான துவங்கிய 1000 கிலோ மிளகாய் அபிஷேகம் பக்தர்களுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்கள் அகலவும், இரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், புத்திர பக்யம் உண்டாகவும், தடைகள் நிவர்த்தியாகி முயற்சிகளில் வெற்றி பெறவும், ஏவல், பில்லி, சூன்யம் நம்மை விட்டு அகலவும், சத்ரு உபாதைகள் நிவர்த்தியாகவும் இங்கு பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள மிளகாய் வற்றலை பெற்று யாக குண்டத்தை மூன்று முறை வலம் வந்து அவரவர்கள் பிரார்த்தனை நிறைவேற மஹா காளி ப்ரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்தனர். 

    மேலும் பல்வேறு நன்மைகளுக்காக பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம, நகர பொதுமக்கள், தமிழகம் மட்டுமின்றி பிறமாநில பக்தர்களும் பங்கேற்று பக்தியுடன் மிளகாய் அபிஷேகம் செய்து வருவதாக  தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    – தொடர்புக்கு

    "Yagnasri Kayilai Gnanaguru" Dr. Sri Muralidhara Swamigal
    FOUNDER
    Sri Danvantri Arogya Peedam,
    04172-230033, 0944330203
    ,