Tag: April

  • Midhunam April Monthly Prediction – 2023

    மிதுனம்:

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் குரு, சூர்யன் – லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன்  என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    07-04-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த சூழ்நிலையிலும் கலங்காத மனம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணர். இந்த மாதம் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும்.  நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

    தொழில் வியாபாரம் சிறப்பான  முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு – சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியில் பாராட்டு கிடைக்கும்.

    குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான  பொருள்களை  வாங்குவீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி கூடும்.  பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் காலகட்டம் இது.

    பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.

    கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

    அரசியல் துறையினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.  முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.  மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

    திருவாதிரை:

    இந்த மாதம் எந்த  ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ராசியில் ராகு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.

    பரிகாரம்: நந்தீஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Mesham April Monthly Predictoin – 2023

    மேஷம் :

    கிரகநிலை:

    ராசியில் ராகு, சுக்ரன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – சப்தம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி – விரைய ஸ்தானத்தில் குரு, சூர்யன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    07-04-2023 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
    14-04-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  
    22-04-2023 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  

    பலன்:

    எல்லோரிடமும் இதமான அணுகுமுறையும், மனஉறுதியும் மிக்க மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.

    தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது  நன்மையை தரும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.
    பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிக ரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள்.

    அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

    அஸ்வினி:

    இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.  காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    பரணி:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

    கார்த்திகை:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும்.

    பரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும்  நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11
    அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Rishabam April Monthly Predictoin – 2023

    ரிஷபம்:

    கிரகநிலை:

    தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் குரு, சூர்யன் – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    07-04-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    14-04-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:

    கடின உழைப்பும், தொழில் உயர்வும் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள்.  இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.  பேச்சு திறமை அதிகரிக்க செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும் போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.  வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

    குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு – மனை – வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

    பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை  சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.

    கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

    அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சனியின் சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.

    மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை  படிப்பது வெற்றிக்கு உதவும்.

    கார்த்திகை:

    இந்த மாதம் பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

    ரோகினி:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

    பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க  உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • April 28 Indraya Naal Eppadi

    ஏப்ரல் 28 – இன்றைய நாள் எப்படி 
    விகாரி வருடம் – சித்திரை 15
    28-ஏப்-2019 ஞாயிறு  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    8.03
    நட்சத்திரம்    :    அவிட்டம்    முழுவதும்    0.00
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • April 25 – Indraya Naal Eppadi

    ஏப்ரல் 25 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – சித்திரை 12
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர்
    25-ஏப்ரல்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    3.57
    நட்சத்திரம்    :    பூராடம்    இ    11.21
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • April 24 Puttaprthi Saibaba

    ஏப்ரல் 24  புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்
    விகாரி வருடம் – சித்திரை 11
    சாய்பாபா ஸித்தி தினம்
    24-ஏப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    ம    2.59
    நட்சத்திரம்    :    மூலம்    இ    9.39
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • April 22 Sangadahara chadurthi

    ஏப்ரல் 22 பூமி தினம்
    விகாரி வருடம் – சித்திரை9
     சங்கடஹர சதுர்த்தி
    பூமி தினம்
    22-ஏப்-2019 திங்கள்  
    சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    திரிதியை    ம    2.32
    நட்சத்திரம்    :    அனுஷம்    இ    7.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • April 19 Chitira paurnami

    விகாரி வருடம் – சித்திரை 6
     பவுர்ணமி 
    புனித வெள்ளி, சித்ரா பவுர்ணமி, மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
    19-ஏப்-2019 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    மா    5.20
    நட்சத்திரம்    :    சித்திரை    இ    8.10
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

  • April 18

    பெரிய வியாழன், மதுரை மீனாட்சி தேர்
    விகாரி வருடம் – சித்திரை 5
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    18-ஏப்-2019 வியாழன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    7.10
    நட்சத்திரம்    :    அஸ்தம்    இ    9.11
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • April 16 Indraya Naal eppadi

    ஏப்ரல் 16 இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – சித்திரை 3
    சமயபுரம் மாரியம்மன் தேர்
    16-ஏப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    இ    11.23
    நட்சத்திரம்    :    பூரம்    இ    11.53
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்