Tag: Amman

  • Benefits of lighting a ghee lamp!

    இறைவனை வழிபடுவதில் தீப வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தீப ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் லட்சுமி தேவியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளி அருள்புரிவதாக ஐதீகம் உள்ளது. ஆகவே, தீபத்தில் முப்பெரும் தேவியரும் கடாட்சம் செய்வதாக நம்பப்படுகிறது.

    விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் பலன்கள்:

    • 5 நெய் விளக்குகள்: சிறந்த கல்வி மற்றும் ஞானம் பெறலாம்.

    • 9 நெய் விளக்குகள்: நவகிரக தோஷங்கள் விலகும்.

    • 12 நெய் விளக்குகள்: தடைகள் நீங்கி, எடுத்த காரியம் வெற்றியடையும்.

    • 18 நெய் விளக்குகள்: கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் அகலும்.

    • 27 நெய் விளக்குகள்: திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • 36 நெய் விளக்குகள்: சகல தோஷங்களும் நீங்கும்.

    • 48 நெய் விளக்குகள்: தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    • 108 நெய் விளக்குகள்: அம்மனின் அருள் முழுமையாக பெறலாம்.

    நெய் விளக்கு ஏற்றிய பிறகு, கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வருவது சிறப்பு.

    நெய் தீப பரிகாரங்கள்:
    வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது மாலை 6 மணிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நாகராஜ சிலைக்கு அபிஷேகம் செய்து, செவ்வரளி சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால், தம்பதியரிடையே ஒற்றுமை நிலைக்கும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் அமாவாசை அன்று பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் தோஷம் நீங்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து, தொடர்ந்து நெய் தீபம் ஏற்றினால், விரைவில் கருத்தரிக்கலாம். தீபம் ஏற்றும்போது வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்து ஏற்றினால் செல்வ செழிப்பு பெருகும்.

    கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்தி பொழுது நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. கருவறையில் உள்ள தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட்டால், கடுமையான பிரச்சினைகளும் விலகும். சமூக வலைதளங்களில், இந்த பரிகாரங்களை பலரும் பகிர்ந்து, இறைவனின் அருளை பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

  • Kamatchi amman koil kumbabishegam

    திருவண்ணாமலையில் 2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை வடக்குவீதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன்,பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், தீபாரதனையும் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு  முலீகை பொருட்களை கொண்டு யாகம் நடத்தி பின்னர் மஹா பூர்ணாஹிதி நடைபெற்றது.

    பின்னர் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர உச்சியில் அமைந்துள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம், தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

     திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தோன்ற மூல காரணமான ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

  • Ratha Sapthami Flag Hoisting Ceremony at Lalithambigai Amman Temple!

    லலிதாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரத ஸ்ப்தமி கொடியேற்ற உற்சவம்! 

    திருவாரூர் மாவட்டம், திருமீயச்சூர் பகுதியில் அமைந்துள்ள லலிதாம்பிகை அம்மன் சமேத மேகநாத சுவாமி ஆலயத்தில் இரத ஸ்ப்தமியையொட்டி கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

  • Sri Pathirakali Amman Temple

    அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை!

    காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை யொட்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.

  • Amman Gayathri Mandiram

    துர்கை:

    (ராகுதோஷ நிவர்த்திக்காக)
     
    ஓம் காத்யாயனாய வித்மஹே
    கன்யகுமரி தீமஹி
    தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மாரி ப்ரசோதயாத்
     
    அன்னபூரணி தேவி:

    (நித்தியான்ன பிராப்திக்காக)
     
    ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
    மஹேஸ்வர்யைஹ் தீமஹி
    தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
     
    சிவதூதி:
     
    ஓம் சிவதூத்யை ச வித்மஹே
    சிவங்கர்யைச தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    பாலா:
     
    ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
    காமேஸ்வரீ ச தீமஹி
    தன்னோ பாலா ப்ரசோதயாத்
     
    அம்ருதேஸ்வரி தேவி:

    (ஆயுள் ஆரோக்கியம் பெற)
     
    ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
    சக்தீஸ்வரீ ச தீமஹி
    தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
     
    வாக்பலா:

    (பேச்சுபிழை சரியாக)
     
    ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
    வாக்பவேஸ்வரீ தீமஹி
    தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
     
    சர்வமங்கள:

    (நல் பயணத்திற்கு)
     
    ஓம் சர்வமங்களை வித்மஹே
    மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    கன்னிகா பரமேஸ்வரி:

     (மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
     
    ஓம் பாலாரூபிணி வித்மஹே
    பரமேஸ்வரி தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத்
     
    ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
    கந்யாரூபிணீ தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத்
     
    காமேச்வரி:

    (மங்களம் உண்டாக)
     
    ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
    காமேச்வர்யை தீமஹி
    தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
     
    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லிந்நாய தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    காமதேனு:

    (கேட்டது கிடைக்க)
     
    ஓம் சுபகாமாயை வித்மஹே
    காமதாத்ரை ச தீமஹி
    தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
     
    காளிகா தேவி:

    (கேட்ட வரம் கிடைக்க)
     
    ஓம் காளிகாயை ச வித்மஹே
    ஸ்மசான வாசின்யை தீமஹி
    தன்னோ கோரா ப்ரசோதயாத்
     
    வாராஹி:

    (நினைத்தது நிறைவேற)
     
    ஓம் வராஹமுகி வித்மஹே
    ஆந்த்ராஸனீ தீமஹி
    தன்னோ யமுனா ப்ரசோதயாத்
     
    குலசுந்தரி:

    (சொத்து, கவுரவம் அடைய)
     
    ஓம் குலசுந்தர்யை வித்மஹே
    காமேஸ்வர்யை தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    சந்தோஷி மாதா:

    (திருமண தடை நீங்க)
     
    ஓம் ருபாதேவீ ச வித்மஹே
    சக்திரூபிணி தீமஹி
    தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
     
    கவுமாரி தேவி:

    (சக்தி பெற)
     
    ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
     
    கவுரிதேவி:

    (தியானம் சித்தி அடைய)
     
    ஓம் சுவபாகாயை வித்மஹே
    காம மாளினை தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    ருத்ரபத்ன்யை ச தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் கணாம்பிகாய வித்மஹே
    மஹாதபாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
    காம மாலாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் ஸோஹம்ச வித்மஹே
    பரமஹம்ஸாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

  • Draupathy ammann agni vasantha vizha

    கலவை அருகே தபசு மரம் ஏறும் விழாவில் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை கேட்ட பெண்கள் – எலுமிச்சம் பழம் வீசி குழந்தை வரம் கொடுத்த அர்ஜுனன்.

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள கே.வேளூர் கிராமத்தில்  பழமை வாய்ந்த ஸ்ரீ  த்ரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருவதோடு நாடக கலைஞர்களால் நாள்தோறும் மகாபாரதத்தின் கதையை எளிய முறையில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வேடம அணிந்து நடித்து வருகின்றனர்.

    மேலும் இந்த அக்னி வசந்த் விழாவில், பாஞ்சாலிக்கு சுபத்திரை திருக்கல்யாணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வந்த  நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சிவபெருமானிடம் அர்ஜுனன் ஐந்து ஆயுதங்களான சிவாஸ்திரம், அகோர அஸ்திரம், பாசுபதம் அஸ்திரம், பிரத்தீங்கா அதிஸ்திரம், யோமாஸ்திர என ஆயுதங்களை பெற 60 அடி உயரம் கொண்ட தபசு மரத்தில் ஒவ்வொரு அடிக்கு ஒவ்வொரு பாடல் பாடி தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்த விழாவில் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் குழந்தை வரம் வேண்டி தபசு மரத்தில் தொட்டில் கட்டி கருங்கல் வைத்து தாலாட்டி ஈரத்துணியுடன் விரம் இருந்து பெண்களுக்கு தபசு மர ஊச்சியில் சென்ற அர்ஜூனன் வேடமனிந்த நாடக கலைஞர் ஒருவர் அங்கிருந்து எலும்பிச்சை பழம் போட அதனை பெண்கள் மடியை ஏந்தி பெற்றுக் கொண்டு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர்.

    இந்த அக்னி வசந்த விழாவில் கலவையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் உள்ளூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

  • 108 varalakshmi amman potri

    வரலட்சுமி 108 போற்றியை தினமும் பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். ஸ்ரீ அம்பாளின் பரிபூரண ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் சர்வ ஐஸ்வர்யம் கிட்டும்…

    1. ஓம் அகில லட்சுமியே போற்றி
    2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி
    3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
    4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
    5. ஓம் அமர லட்சுமியே போற்றி
    6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி
    7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
    8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
    9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி
    10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி

    11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
    12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
    13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
    15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி
    16. ஓம் இதய லட்சுமியே போற்றி
    17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி
    18. ஓம் உதய லட்சுமியே போற்றி
    19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி

    21. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
    24. ஓம் கருணா லட்சுமியே போற்றி
    25. ஓம் கனக லட்சுமியே போற்றி
    26. ஓம் கபில லட்சுமியே போற்றி
    27. ஓம் கமல லட்சுமியே போற்றி
    28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி
    29. ஓம் கஜ லட்சுமியே போற்றி
    30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி

    31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
    32. ஓம் குண லட்சுமியே போற்றி
    33. ஓம் குரு லட்சுமியே போற்றி
    34. ஓம் கோமள லட்சுமியே போற்றி
    35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
    36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி
    38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி
    39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி
    40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி

    41. ஓம் சகல லட்சுமியே போற்றி
    42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி
    43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
    45. ஓம் சீதா லட்சுமியே போற்றி
    46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி
    47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
    48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
    49. ஓம் சுப லட்சுமியே போற்றி
    50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி

    51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
    52. ஓம் ஞான லட்சுமியே போற்றி
    53. ஓம் தங்க லட்சுமியே போற்றி
    54. ஓம் தயா லட்சுமியே போற்றி
    55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி
    56. ஓம் தன லட்சுமியே போற்றி
    57. ஓம் தவ லட்சுமியே போற்றி
    58. ஓம் தான லட்சுமியே போற்றி
    59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி
    60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி

    61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
    62. ஓம் தீப லட்சுமியே போற்றி
    63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
    64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
    65. ஓம் நாக லட்சுமியே போற்றி
    66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி
    67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
    68. ஓம் நீல லட்சுமியே போற்றி
    69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
    70. ஓம் பவள லட்சுமியே போற்றி

    71. ஓம் பக்த லட்சுமியே போற்றி
    72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி
    73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
    74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
    75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
    77. ஓம் பால லட்சுமியே போற்றி
    78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
    79. ஓம் புவன லட்சுமியே போற்றி
    80. ஓம் புனித லட்சுமியே போற்றி

    81. ஓம் பொன் லட்சுமியே போற்றி
    82. ஓம் போக லட்சுமியே போற்றி
    83. ஓம் மகா லட்சுமியே போற்றி
    84. ஓம் மதன லட்சுமியே போற்றி
    85. ஓம் மதுர லட்சுமியே போற்றி
    86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி
    87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி
    88. ஓம் மகா லட்சுமியே போற்றி
    89. ஓம் மகுட லட்சுமியே போற்றி
    90. ஓம் மரகத லட்சுமியே போற்றி

    91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
    92. ஓம் மாதா லட்சுமியே போற்றி
    93. ஓம் முத்து லட்சுமியே போற்றி
    94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
    95. ஓம் யோக லட்சுமியே போற்றி
    96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
    97. ஓம் ராம லட்சுமியே போற்றி
    98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
    99. ஓம் வரலட்சுமியே போற்றி
    100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி

    101. ஓம் விஜய லட்சுமியே போற்றி
    102. ஓம் விமல லட்சுமியே போற்றி
    103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
    104. ஓம் வீர லட்சுமியே போற்றி
    105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
    106. ஓம் வேணு லட்சுமியே போற்றி
    107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
    108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!
     

  • Aadi month amman sirappugal

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. 

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருபப்து கூடுதல் பலன் களை தரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும். ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

    ஆடிப்பூரத் தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத் தன்று ஆண்டாளை நந்த வனத்துக்கு எழுந் தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  • Periyapalayam amman

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.

    தல வரலாறு :
    கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘கம்சா! உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்’ என்றது அந்தக் குரல். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

    கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

    மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது.

    ‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

    வளையல் வியாபாரி :

    முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்குவந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமமும் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில்பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

    ஆலய அமைப்பு :

    பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஆலயத்திற்குள் நுழையும் போது விநாயகர் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

    இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறும். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் உற்சவமும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை பக்தர் களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத்திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.
     

  • veerakali amman

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ளது அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் திருக்கோயில் அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக இக்கோவிலில் வாழும் அம்மன் போற்றப்படுகிறாள். முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என்றும் இத்தலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. 

    இத்தல வரலாறானது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர்.

    அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், தான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தாள். மேலும் என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விட்டு. அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டினால் என் வடிவம் கிடைக்கும் என்று கூறினாள். பின்னர் அவ்வாறே அக்கிராம மக்கள் அதை செய்த போது அம்மனின் பிரம்மாண்ட கற்சிலை அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த பிரம்மாண்ட சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்த மக்கள் அம்மனை காவல் தெய்வமாக வழிபட தொடங்கினர்.

    இக்கோவிலில்  கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக அருள்பாலிக்கிறாள். வலதுபுறம், கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி, வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள்.

    திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தோஷங்களை நீக்குபவளாக வீரமாகாளி திகழ்கிறாள். மேலும் நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறாள். மேலும் அம்மன் ஆசியால் குழந்தைப் பெற்றவர்கள் நேர்த்திக் கடனாக அந்தக் குழந்தையை இக்கோவிலுக்குத் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். மேலும் அம்மன் அருளால் திருமணமானவர்கள் பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்கிறார்கள்.