Tag: amavasai

  • October 16 Amavasai

    அக்டோபர் 16 – அமாவாசை
    சார்வரி வருடம் – புரட்டாசி 30
     அமாவாசை 
    உணவு தினம்
    16-அக்-2020 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    ந.இ    2.03
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ப    3.53
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Amavasai visesham

    மகத்துவம் மிக்க நம் இந்து மதத்தில் , அமாவாசை , பௌர்ணமி . அஷ்டமி ,நவமி மற்றும் சதுர்த்தி திதிகளுக்கென்று ஒரு முக்கியத்துவம் உண்டு . எந்த ஒரு  நல்ல வேலையை  செய்வதற்கும்   இவைகளை அனுசரித்தே  நாள்  குறிக்கப்படும் .  

    அமாவாசையை பற்றி நமக்கு தெரிந்து தெரியாததுமான சில தகவல்களை இப்பதிவில் காண்போம் .  அமாவாசை முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுக்கும் நாளாக  காலம் காலமாக நம் மனதில் ஆழ பதிந்து விட்டதால் , சிலர் அன்று சுபகாரியங்களை தவிர்த்து விடுவார்கள் . ஆனால் அதே சமயம்  நிறைந்த  முழு அமாவாசை தினத்தன்று , கடை திறப்பது ,  புதிய வண்டி வாங்குவது , நிலம் பத்திரம் செய்வது போன்ற வேலைகளை செய்பவர்களும் உண்டு . இப்படி நம் நல்லது கெட்டதில் முக்கிய பங்கு வகிக்கும் அமாவாசைக்கு  அப்படி என்ன தான் விசேஷம் ?

    அமாவாசை தினத்தில் தான் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது . அன்று  புண்ணியலோகத்திலிருந்து நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து ,தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து அவர்களை , கரிசனத்தோடு ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்  என்பது நம்பிக்கை .

     அதிலும் தை , ஆடி , புரட்டாசி,மாசி அமாவாசைகள்  மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது .அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது .  மேலும் அமாவாசை தினத்தன்று  ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை நாளில் தான்  நடத்துகின்றனா்.

    அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது என்று பெரியவர்கள்  சொல்லக் கேட்டு இருப்போம் . புண்ணியத் தலங்களின் அருகில் உள்ள  கடலில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிப்பதான் மூலம்  வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது .  
     

  • June 20 Amavasai

    ஜூன் 20 – அமாவாசை
    சார்வரி வருடம் – ஆனி 6
     அமாவாசை 
    20-ஜூன்-2020 சனி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ப    12.34
    நட்சத்திரம்    :    ரோகிணி    ப    12.54
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Panguni amavasai

    தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனி அமாவாசை தினத்தில் தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள்  திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி அடுத்து பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வளமை பொங்கும்.

    பங்குனி மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் என்பதை நம்மில் பலர் முன்னமே அறிவோம். இத்தகைய சிறப்பு மிக்க பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் பித்ரு சாபம் மற்றும் குல சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்க பெறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும். உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். 

    பங்குனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும். யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இந்த தினத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் புத்திர பாக்கியம். 

  • amavasai Saraba yagam

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 23.02.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகத்துடன் இரண்டாம் நாள் மங்கள சண்டி யாகம் நடைபெற்றது.

    இதில் மங்கள இசை, கோபூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், 64 யோகிணி பைரவர் பலி பூஜை, யாகசாலை பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், மிளகாய் வற்றல், பூசணிக்காய், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியாபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மேலும் நாளை 24.02.2020 திங்கள்கிழமை மூன்றாம் நாள் மங்கள சண்டி யாகமும் மஹா பூர்ணாஹுதியும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • Amavasai Rameswaram Nadai Thirappu

    தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 24 ஆம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் பகல் முழுவதும் நடைதிறந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு அன்று அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும். காலை 7 மணிக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெறுவதைத் தொடர்ந்து கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். 

    அமாவாசையையொட்டி பகல் முழுவதும் கோயில் நடை திறந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் இடைவிடாமல் அபிஷேக ஆராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் ஸ்ரீராமர் வெள்ளி ரதத்தில் வீதியுலா நடைபெறும். அமாவாசையை முன்னிட்டு தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்வதற்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 

    அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்பதால் அன்று பகல் முழுவதும் இடைவிடாமல் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும் அனுமதிக்கடுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • November 26 Amavasai

    நவம்பர் 26 – அமாவாசை
    விகாரி வருடம் – கார்த்திகை 10
     அமாவாசை 
    26-நவ-2019 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    இ    9.32
    நட்சத்திரம்    :    விசாகம்    கா    10.29
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Augusy 30 Amavasai

    ஆகஸ்ட் 30 – அமாவாசை
    விகாரி வருடம் – ஆவணி 13
     அமாவாசை 
    பெருவயல் முருகன் தேர்
    30-ஆக-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    மா    4.48
    நட்சத்திரம்    :    மகம்    மா    6.36
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • July 2 Amavasai

    ஜூலை 2  – அமாவாசை
    விகாரி வருடம் – ஆனி 17
     அமாவாசை 
    திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்
    02-ஜூலை-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    இ    1.36
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    கா    8.43
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • June 3 Amavasai

    ஜூன் 3 – அமாவாசை
    விகாரி வருடம் – வைகாசி 20
    03-ஜூன்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    மா    4.19
    நட்சத்திரம்    :    ரோகிணி    இ    1.08
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்