Tag: Alangudiyil

  • Alangudiyil Latcharchanai

    ஆலங்குடி குருபரிகார கோயிலில் இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா நவம்பர் 7 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

    ஆலங்குடி குருபகவான் கோயிலில், குருபெயா்ச்சி விழாவை முன்னிட்டு அருள்மிகு குருபகவானுக்கு குருபெயா்ச்சி லட்சார்ச்சனை விழா கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை முதல்கட்டமாக நடந்தது. குருபெயா்ச்சிக்குப்பின் மீண்டும் அக்டோபா் 31-ம் தேதி 2வது கட்ட லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த லட்சார்ச்சனை விழா நவம்பா் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    லட்சார்ச்சனையில் பங்கேற்க 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்படும். லட்சாா்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும்,மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.