Tag: Alangudi

  • Alangudi Guru ;Peyarchi

    குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.  இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    இந்த ஆண்டு குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடந்தது. அதிகாலை குருப்பெயர்ச்சி நடந்தபோது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

     முன்னதாக குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபரிகார யாக பூஜைகள் நடந்தன. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் குரு கோஷங்களை எழுப்பி குருபகவானை தரிசனம் செய்தனர்.


    வருகிற 31-ந் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 7-ந் தேதி முடிய இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.

  • Alangudi Guru Peyarchi Latcharchanai

    குருபரிகார ஸ்தலமான ஆலங்குடியில் குருபெயா்ச்சி லட்சார்சனை விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

    மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூா்த்தி தனிசன்னதியில் எழுந்தருள அங்கு ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களைச் சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனா்.

    ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனா். லட்சார்ச்சனை தொடக்க விழாவில் அறநிலைய உதவி ஆணையா் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலா் பி.தமிழ்செல்வி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

    இந்த முதல் கட்ட லட்சார்ச்சனை வரும் 27 ம்தேதி வரை நடைபெறும் .மீண்டும் குருபெயா்ச்சிக்குப்பின் அக்டோபா் 31ம்தேதி தொடங்கி நவம்பா் 7ம்தேதி முடியவும் இரண்டாவது கட்டமாகவும் நடைபெறும். 

    நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் உள்ளது. திஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

     இவ்வாண்டும் குருபகவான் வரும் அக்டோபா் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது.
     

  • Guru Peyarchi Alangudi

    குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 

    இந்த ஆண்டு குரு பகவான் அக்டோபர் 29-இல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதை முன்னிட்டு அன்றைய தினம் ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு குரு பகவானுக்கு லட்சார்ச்சனை விழா அக்டோபர் 24-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை முதல்கட்டமாகவும், குரு பெயர்ச்சிக்குப் பின் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

    ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனையில் பங்கேற்க ரூ.400 செலுத்த வேண்டும். குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியால் செய்த 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும். லட்சார்ச்சனை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

    தபால் மூலம் லட்சார்ச்சனை பிரசாதம் பெற விரும்புவோர் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய விவரங்களுடன் தொகையை பணவிடை, வரவோலை எடுத்து உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி -612801 என்ற கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்பலாம்.