Tag: Aadi Perukku

  • August 03 2022 aadi perukku

    ஆகஸ்ட் 3 – ஆடிப்பெருக்கு
    சுபகிருது வருடம் – ஆடி 18
    ஆடிப்பெருக்கு
    03-ஆக-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    ந.இ    2.46
    நட்சத்திரம்    :    அஸ்தம்    மா    4.38
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Aadi perukku vizha sirappugal

    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று சுமங்கலிபூஜை நடத்துவர்.

    திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர். 

    தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர். ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.

    இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது.

    ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.

    பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

    ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். 

  • August 2 Aadi perukku

    ஆகஸ்ட் 2 – ஆடிப்பெருக்கு
    சார்வரி வருடம் – ஆடி 18
    ஆடிப்பெருக்கு, சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசு
    02-ஆக-2020 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    10.03
    நட்சத்திரம்    :    பூராடம்    கா    8.07
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Aadi perukku gold

    ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட வேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். 

    திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். 

    காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

    அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.
     

  • Aadi Perukku Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உதவி
    ரிஷபம் – சினம் 
    மிதுனம் – சோதனை
    கடனம் – யோகம் 
    சிம்மம் – ஆர்வம் 
    கன்னி –  பரிசு
    துலாம் –  கவனம் 
    விருச்சிகம் – உறுதி  
    தனுசு – போட்டி 
    மகரம் –   இரக்கம்  
    கும்பம் – ஊக்கம்  
    மீனம் – தனம்  
    சந்திராஷ்டமம்    – அவிட்டம்
     

  • August 3 Aadi Perukku

    ஆகஸ்ட் 3 – ஆடிப்பெருக்கு
    விகாரி வருடம் – ஆடி 18
    ஆடிப்பெருக்கு
    03-ஆக-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    2.16
    நட்சத்திரம்    :    மகம்    கா    10.28
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்