Tag: Aadi month

  • Spiritual Vastu Rules for Women: Auspicious and Divine!

    பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக வாஸ்து விதிகள், சுப மங்களங்களையும் தெய்வீகப் பண்புகளையும் பெற உதவும். பெண்கள் எப்போதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும்: மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு. இது உடல் ஆரோக்கியத்தையும், ஆன்மிக சக்தியையும் தரும். தாலியை நூல் சரட்டில் கோர்த்து அணிவது சிறப்பு, ஏனெனில் நூலில் பஞ்ச பூத சக்திகள் உள்ளன. தேவையான சங்கிலியை அணியலாம், ஆனால் தாலியை தினமும் கழற்றி அணிவது தவறு; அது எப்போதும் கழுத்தில் இருக்க வேண்டும்.

    காலையில் அடுப்பு பற்றவைக்கும் முன், அக்கினியை வணங்கி, “சமைத்த உணவை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கட்டும்” என பிரார்த்திக்கவும். மாலையில் அரசமரத்தை வலம் வருவது தவிர்க்கப்பட வேண்டும். கோயிலுக்கு எடுத்துச் செல்லும் எண்ணெயை, கோயில் விளக்கில் மட்டுமே ஊற்ற வேண்டும்; பிறர் ஏற்றிய விளக்கில் ஊற்றக் கூடாது. முந்தானையைத் தொங்கவிடாமல், இழுத்து சொருகி நடக்கவும், இல்லையேல் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    குத்து விளக்கு ஏற்றும்போது, ஒரு திரி மட்டும் பயன்படுத்தக் கூடாது; இரு திரிகளுடன் ஒரு முகமாக ஏற்றவும். கோலம் போடும்போது தெற்கு நோக்கி நிற்கக் கூடாது; கோடு தெற்கில் முடியாமல் இருக்க வேண்டும். கோயிலில் வணங்கும்போது, பின்னங்கால்களைச் சேர்த்து, நெற்றி தரையில் படுமாறு முழு உடலுடன் விழுந்து கும்பிட வேண்டும். பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது, முந்தானையை இடது, வலது கைகளுக்கு நடுவில் வைத்து பெறவும்.

    சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது, தெற்கு முகமாக உட்கார்ந்து, மஞ்சள் தேய்த்து முகத்தில் பூசி குளிக்க வேண்டும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய், மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். இவ்விதிகளைப் பின்பற்றுவது ஆன்மிகப் பலன்களையும், குடும்ப நலனையும் உறுதி செய்யும்.

  • aadi month en ivvalavu sirappugal

    ஒரு வருடத்தை உத்தராயண, தட்சிணாயன புண்ணிய காலம் என இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்படுகின்றன. தை மாதம் முதல் ஆனி வரை உத்தராயண காலம், அதாவது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், தட்சிணாயன புண்ணிய காலம், அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகர்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

    நம் ஊரில் ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதமாக பார்க்கப்படுகிறது. எல்லா அம்மன் கோவில்களிலும் மிக விசேஷமாக திருவிழாக்கள் கொண்டாடப்படும். அத்தினையொரு கீர்த்தி. இத்தனை ஸ்ரேஷ்டமான மாதமாக இருந்தாலும் இந்த மாதத்தில் திருமணங்கள் செய்யப்படுவதில்லை.

    ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்படுகின்றன. தை மாதம் முதல் ஆனி வரை உத்தராயண காலம், அதாவது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், தட்சிணாயன புண்ணிய காலம், அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகர்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

    சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரன் ஆளும் கடக ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. சிவனை விட சக்தியின் வல்லமை அதிகம் பரிமளிக்கிறது. அதனால் இதனை ஆஷாட மாதமாக சக்தி வழிபாட்டிற்கு உகந்தது, இந்த ஆடி மாதம் சக்தி மயமாக வழிபடும் வகையில் ஈஸ்வரிக்குச் சிவ பெருமான் அனுக்கிரகம் செய்தார்.
     

  • Aadi Month

    ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

    ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

    ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

    கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

    ஆடி மாதம் ஏகாதசி துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம் சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

    ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவு கொடுத்து ரவிக்கை சீப்பு குங்குமச்சிமிழ் கண்ணாடி வளையல் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை நாச்சியார் திருமொழி திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் சகல நலன்களையும் நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து செவ்வரளி செம்பருத்தி அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில் “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து கருப்புப் பட்டாடை நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை கருஊமத்தம் பூமாலை அணிவித்து மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
     

  • Aadi month viseshangal

    சூரியபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆடி மாதம்.அம்மன் கோயில்கள் எல்லாம் திருவிழாக் கோலம் காணும். வீடுகளில் விரதங்கள் நடைபெறும். இத்தகைய சிறப்புகள் உடைய ஆடி மாதத்தின் சிறப்புகளை இந்த மாதத்தில் வரும் விழாக்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

    ஆடி அமாவாசை (20.7.2020 அன்று வருகிறது)

    இந்த நாளில் முன்னோர்களுக்குரிய வழிபாடுகளைச் செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும். அதனால்தான் ஆடி மாதத்தின் முதல் நாளை ஆடிப் பண்டிகை என்றே சொல்வது வழக்கம். ஆடிமாதத்தில் வரும் மற்றுமொரு புண்ணிய தினம் அனைவரும் தவறவிடக் கூடாத, ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை அன்று சமுத்திரக் கரைகளிலும் நதிக்கரைகளிலும் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் வழக்கம் உண்டு. இந்த நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு வாழ்வில் முன்வினை காரணமாக உண்டாகும் தீவினைப் பயன்களைக் குறைத்து நல்வினைப் பயன்களை அதிகப்படுத்தும். 

    ஆடிப்பூரம், நாகர் சதுர்த்தி ((24.7.2020) 

    இந்த முறை ஆடிப்பூரமும் நாக சதுர்த்தியும் ஒரே நாளில்  இயற்கை வழிபாடுகளில் ஒன்றான நாகர் வழிபாடு என்பது தென் இந்தியா முழுவதும் ஆதியில் இருந்துவந்த வழிபாடாகும். அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் நாம் ஆலயங்களில் அம்மன் வழிபாட்டோடு இணைத்துக் கொண்டாடுகிறோம். நாகசதுர்த்தி நாளில் பலர் வீடுகளில் நாகர் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. வழக்கமாக இந்த நாளில் ஆலயம் சென்று அங்கிருக்கும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்பதால் வீட்டிலேயே அதைச் செய்ய வேண்டும். நாகர் வழிபாடு ராகு தோஷத்தால் உண்டாகும் திருமணத் தடையினை நீக்கும் என்பது நம்பிக்கை. நாகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் கருட பஞ்சமி என்று கொண்டாடப்படும். நாகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள், கட்டாயம் கருட பஞ்சமி நோன்பையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி.

    மூன்று பிரதோஷம்

    வழக்கமாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷ தினங்களே வரும். ஆனால் இந்த முறை மூன்று தினங்கள் வருகிறது. அவற்றில் இரண்டு பிரதோஷம் சனிமஹாபிரதோஷம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷமே மஹாபிரதோஷம். 18.7.2020 மற்றும் 2.8.2020 ஆகிய தினங்கள் சனிக்கிழமைகளில் வருகின்றன. மூன்றாவது பிரதோஷம் 16.8.2020 ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. நாமெல்லாம் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு நமக்கு உண்டாகும் துன்பங்கள் தீர்வதற்காக இறைவனே அருளும் புண்ணிய தினங்கள் இவை. இந்த நாளில் தவறாமல் சிவபுராணம் பாடி சிவபெருமானைப் போற்றி நமக்கு வரும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறலாம்.

    வரலட்சுமி நோன்பு
    சுமங்கலிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் வரலட்சுமி நோன்பு. ஆடிமாதம் பௌர்ணமிக்கு முன்புவரும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரதத்தை மேற்கொண்டால் வீட்டில் செல்வ வளம் சேரும் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் வரம் அருளும் விரதம் இது என்பது ஆன்றோர்களின் வாக்கு