Tag: 33 நாட்கள்

  • Muneeswarar koil kumbabishegam

    ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற 33 அடி  ஸ்ரீ குழந்தை  முனீஸ்வரர் ஆலய  கும்பாபிஷேக விழாவில் சாமி வந்து ஆடிய பக்தர்கள்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தில் உள்ள பாலாற்றங்கரையோ ரம் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரிய முழு உருவ குழந்தை முனீசுவரர் ஆலயத்தில் இன்று 11 மணிக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது,

     கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று மங்கள வாத்தியத்துடன் ஸ்ரீ கணபதி ஹோமம் பூஜை தொடங்கப்பட்டு தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுபதி, வாஸ்து சாந்தி பிரவேச பலி அங்குரார்பணம், நாடி சந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க  புனிதநீர்  ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேதங்கள், மற்றும் மந்திரங்கள் ஓத குழந்தை  மூலவர் முனீசுவரர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு, திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது, அப்போது பக்தர்கள் மீது சாமி வந்து ஆடினர்

     பின்னர் புனித நீர் பக்தர்கள் தெளிக்கக்பட்டு அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவில் சுற்றுவட்டார 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

  • sri dhanvanthri peedam thirumanjanam

    அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் தொடர் திருமஞ்சன திருவிழா நாள் 24.4.2022 முதல் 26.05.2022 வரை நடைபெறுகிறது. 

    இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வருகிற 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 26.05.2022 வியாழக்கிழமை வரை 33 நாட்கள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் நடைபெறுகிறது. 

    தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு லக்ஷார்ச்சனையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 26.05.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை புஷ்பாஞ்சலியும், அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பெயர், நக்ஷத்திரம், கோத்திரம் தெரிவித்து இறை பிரசாதம் பெறலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 – 294022, செல் – 94433 30203