மே 31 – பிரதோஷம்
விகாரி வருடம் – வைகாசி 17
பிரதோஷம்
31-மே-2019 வெள்ளி
கரிநாள்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி மா 4.52
நட்சத்திரம் : அசுவினி இ 12.03
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: 31
-
May 31 – Pradhosham
-
31-10-30
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31ம்தேதி 10.30 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. 31ம்தேதி மாலை 5.40 மணி முதல் இரவு 8.30 மணிவரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்று காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 9.30 மணிக்குபிறகு நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கோயில் நடை அடைக்கப்படுவதையொட்டி அன்றைய தினம் ரூ.300 டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படும். மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு 31ம்தேதி அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை திவ்ய தரிசன டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்படும். சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்றைய நாளில் அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படாது. வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இதனை கருத்தில்கொண்டு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
31
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக்டோபர் 31 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.
அக்டோபர் 31 ஆம் தேதி அன்று காலை சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டு, விரதம் மேற்கெள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். காப்பு கட்டிக் கொள்ளும் பக்தர்கள் ஆறு நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி பால், பழம், துளசி, மிளகு உள்ளிட்ட பல்வேறு விரதங்கள் மேற்கொள்வர். தேன், சர்க்கரை கலந்த தினை மாவு கோயில் சார்பில் வழங்கப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 4ல் வேல் வாங்குதல், நவம்பர் 5ல் சூரசம்ஹாரமும், நவம்பர் 6 ஆம் தேதி காலையில் தேரோட்டம், மதியம் பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.
சஷ்டி விழா நடக்கும் நாட்களின் தினம் காலை 11:00 மணி, மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர்க்கு சண்முகார்ச்சனை நடக்கும். -
31
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31ஆம் தேதி தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ந் தேதி தொடங்குகிறது.
அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து ஐந்து நாட்களும் தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.2-ம் திருநாளில் இருந்து அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
6-ம் திருநாள் வரை மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.6-ம் திருநாள் அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது.
மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.
-
31
திருக்கழுகுன்றம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் 108 கலசாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சங்கு தீர்த்த புஷ்கர மேளா, லட்ச தீப பெருவிழா ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விழா சிறப்பாக நடைபெற வேண்டி, சங்கு தீர்த்த குளத்தையொட்டி உள்ள ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 108 கலசாபிஷேகம், கலச பூஜை, ஹோமம் நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் வேதமலை பெருவள குழுத் தலைவர் தி.க.துரை, செயலாளர் தி.து.அன்புச்செழியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.