செப்டம்பர் 27 – மாத சிவராத்திரி
விகாரி வருடம் – புரட்டாசி 10
27-செப்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 3.07
நட்சத்திரம் : பூரம் இ 1.02
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: 27
-
September 27 Monthly Sivarathiri
-
August 27 Indraya Naal Eppadi
ஆகஸ்ட் 27 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – ஆவணி 10
27-ஆக-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி இ 11.27
நட்சத்திரம் : புனர்பூசம் இ 10.58
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
July 27 Vasthu Naal
ஜூலை 27 – வாஸ்து நாள்
விகாரி வருடம் – ஆடி 11
27-ஜூலை-2019 சனி
வாஸ்து நாள்(காலை 07.44 – 08.20)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : தசமி
திதி நேரம் : தசமி மா 4.26
நட்சத்திரம் : கார்த்திகை மா 5.02
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
June 27 Indraya Naal Eppadi
ஜூன் 27 – ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
விகாரி வருடம் – ஆனி 12
27-ஜூன்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : தசமி
திதி நேரம் : தசமி அ.கா 4.38
நட்சத்திரம் : ரேவதி கா 6.14
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
May 27 Indraya Naal Eppadi
மே 27 இன்றைய நாள் எப்படி
விகாரி வருடம் – வைகாசி 13
27-மே-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 11.16
நட்சத்திரம் : சதயம் மா 4.14
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
nellaiappar-aani-therotam
நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தேரோட்டத்தைக் கண்டு மகிழ்வர்.
இந்தாண்டுக்கான ஆனித்திருவிழா ஜூன் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
நெல்லையப்பர் கோயிலில் உள்ள 5 தேர்களும் சுத்தம் செய்யும் பணி முதற்கட்டமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
-
nellaiappar-koil-uzhavhra-pani
திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் மே 27 ஆம் தேரி உழவாரப்பணி நடைபெறுகிறது.
ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நெல்லையப்பர் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்று வருகிறது. அமைப்பின் சார்பில் 227ஆவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் ஸ்ரீஆறுமுகநயினார் சன்னதியில் இருந்து தொடங்கப்படுகிறது.
அமைப்பின் சார்பில் அன்றைய தினம் திருநெல்வேலி நகரத்திலுள்ள அருள்மிகு கரிய மாணிக்கப்பெருமாள் கோயில், அருள்மிகு தொண்டர்கள் நயினார் கோயில், சம்பந்தர் தெருவிலுள்ள அருள்மிகு திருஞானசம்பந்தர் கோயிலில் உழவாரப்பணி நடைபெறுகிறது.
-
madurai-meenatchi
சித்திரைத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் தீபாராதனை காட்டி கொடி மர பூஜை செய்யும் சிவாச்சாரியார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
இரவு மாசி வீதிகளில் எழுந்தருளிய சுவாமி, அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்மலை கள்ளழகர் கோயில் இணைந்த சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
நிகழாண்டு புதன்கிழமை காலை நடைபெற்ற கொடியேற்றத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபம், அதன் முன்பகுதி மலர் பந்தல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கம்பத்தடி மண்டபத்தில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து பூஜை செய்தனர். காலை 9.30 மணிக்கு கொடி மர பூஜை தொடங்கியது. அப்போது கொடிமரம் முன்பு சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர்.
சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடிமரத்துக்கு நான்கு புறமும் தர்ப்பைப் புல் வைத்து பூஜை செய்தனர். பின்னர் பூக்களால் பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10.10 மணிக்கு மிதுன லக்னத்தில் காளை உருவம், சிவலிங்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கொடி மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. காலை 11.20 மணிக்கு பூஜைகள் நிறைவு பெற்றதும் சுவாமி, அம்மன் கோயிலுக்குள் குலாலர் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன், மாநகர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கோயில் இணை ஆணையர் என். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாசி வீதிகளில் அருள்பாலிப்பு: புதன்கிழமை இரவு சுவாமி, பிரியாவிடை கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
அம்மன், சுவாமி வாகனங்களுக்கு முன்னதாக கோயில் யானை, காளை ஆகியவை வலம் வந்தன. சுவாமி உலாவை அறிவிக்கும் வகையில் பக்திப் பாடல்களுடன் வாகனங்கள் வலம் வர அதன் பின்னர் சிவபக்தர்கள் சிவ இசைகளை இசைத்தபடி வலம் வந்தனர். குழந்தைகள் கோலாட்டம், சுவாமி வேடமணிந்து அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் அணிவகுத்து வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சிகள்: விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 25-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 26-ம் தேதி திக் விஜயமும், 27-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 28-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது. -
27
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கான பந்தக்கால் நடும் விழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். பாண்டியர் கால சிவாலயங்களில் பழமையானது. கருவூரார் சித்தர், அகஸ்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. இதைத்தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் கோபுரம், விமானம், கொடிமரம், சுற்றுச்சன்னதிகள் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் தளம் அமைத்தல், கோபுரம், விமானங்கள் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல், வெள்ளையடித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைகள் அமைப்பதற்கான கொட்டகை அமைக்கும் பணிக்கான கால்நடும் விழா மற்றும் பந்தக்கால் நடும் விழா ஆகியவை நாளை மறுநாள் காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது.
-
27
ஒட்டனந்தல் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர விழாவில் ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக ரூ.27 ஆயிரத்துக்கு எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் சின்னமயிலம் என்றும், இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டு தோறும் நடக்கும் பங்குனி உத்திர விழாவில், 11-வது நாள் நடைபெறும் விழாவின் போது பொதுமக்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவில் தொடர்ந்து 9 நாட்கள், கருவறையில் முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது குத்தப்படும் எலுமிச்சை பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும். இந்த பழங்களின் சாற்றை குழந்தையில்லாத தம்பதியினர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை கிராம மக்கள் போட்டி போட்டு ஏலம் எடுப்பார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் 9 நாட்களும் வேல் மீது குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்களுக்கு பூஜை செய்யப்பட்டது.
இறுதி நாளில் 9 எலுமிச்சை பழங்களும் கிராம மக்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டன. நாட்டாமையான பாலகிருஷ்ணன் முதல் எலுமிச்சை பழத்தின் ஏலத்தை ஒரு ரூபாயில் இருந்து தொடங்கி வைத்தார்.இதை ஏலம் எடுப்பதற்காக பலர் போட்டி போட்டனர். முடிவில் அந்த பழத்தை ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம்- ஜெயந்தி தம்பதியினர் அதிகபட்ச தொகையாக ரூ.27 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.
தொடர்ந்து எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. 9 நாள் திருவிழாவின்போது பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் ரூ.68 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது.