Tag: 24 garuda sevai

  • 24 garuda sevai

    தஞ்சாவூரில்  வேறு எங்கும் காண முடியாத வகையில்  24 கருட சேவை நடைபெற்றுள்ளது.   வயதானவர்கள்,  உடல் நலம் இல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பக்தர்களும்  அனைத்து கோயில்களுக்கும் செல்ல முடியாத பக்தர்களும் தரிசனம் செய்திட   24 பெருமாள் கோயில்களில் இருநதும்  24 பெருமாள்கள்  கருட வாகனத்தில்   தஞ்சையில்  சங்கமித்தன. 

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் 85 வது ஆண்டு  24 கருட சேவை இன்று கும்மியாட்டம்   பஜனை  பாடல் என  கோலாகலமாக நடைபெற்றது.  தஞ்சையில் உள்ள  நீலமேகப் பெருமாள் கோயில்,  ஸ்ரீ நரசிம்ம பெருமாள், கல்யாண வெங்கடேஷபெருமாள் கோயில் உள்ளிட்ட 24 பெருமாள் கோயில்களில் இருநதும் 24 பெருமாள் களும் கருட வாகனத்தில் இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

    தஞ்சை கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதிகளில் திரண்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் 24 பெருமாள் களையும் தரிசனம் செய்தனர்