இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பயம்
மிதுனம் – பாசம்
கடனம் – சிக்கல்
சிம்மம் – ஆதரவு
கன்னி – தோல்வி
துலாம் – நோய்
விருச்சிகம் – லாபம்
தனுசு – செலவு
மகரம் – சுகம்
கும்பம் – கவலை
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – பூராடம்
Tag: 23
-
September 23 Rasi Palan
-
September 23 Indraya Naal
செப்டம்பர் 23 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – புரட்டாசி 6
23-செப்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : நவமி ம 1.54
நட்சத்திரம் : திருவாதிரை கா 7.53
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
August 23 Krishna Jayanthi
ஆகஸ்ட் 23 கிருஷ்ண ஜெயந்தி
விகாரி வருடம் – ஆவணி 6
கிருஷ்ண ஜெயந்தி
23-ஆக-2019 வெள்ளி
வாஸ்து நாள்(காலை 07.23 – 07.59)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி அ.கா 5.22
நட்சத்திரம் : கார்த்திகை இ 12.45
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
July 23 Aadi Tuesday
ஜூலை 23 – ஆடி செவ்வாய்
விகாரி வருடம் – ஆடி 7
23-ஜூலை-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : அதிதி
திதி நேரம் : சஷ்டி ம 1.58
நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 11.47
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
June 23 subamugurthanaal
ஜூன் 23 சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – ஆனி 8
23-ஜூன்-2019 ஞாயிறு
சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 10.58
நட்சத்திரம் : சதயம் இ 11.37
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
december-23-rasi-palan
டிசம்பர் 23
விளம்பி வருடம் – மார்கழி 8
23-டிச-2018 ஞாயிறு
நல்ல நேரம் : 6.00 – 7.00
ராகு : 4.30- 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
மார்கழி 8,ஞாயிறு .
திதி பிரதமை (தேய்பிறை)
நட்சத்திரம்
திருவாதிரை 42.15 (A.M 11.19)
சந்திராஷ்டமம் கேட்டை, மூலம்
இசுலாமிய நாள் ரப்யூஸானி 15
விரத, விசேஷங்கள்
ஆருத்திரா தரிசனம்இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – தனம்
மிதுனம் – மேன்மை
கடனம் – நலம்
சிம்மம் – ஓய்வு
கன்னி – நன்மை
துலாம் – சலனம்
விருச்சிகம் – இன்பம்
தனுசு – மறதி
மகரம் – போட்டி
கும்பம் – நிறைவு
மீனம் – அமைதி -
malaikottai-maha-deepam
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலை உச்சியில் வருகிற 23-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
மலையின் உச்சியில் உச்சி பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி முன்னதாக செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை கொண்டு செய்த திரி வைக்கப்படும். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் ஊற்றப்படும். செப்புக்கொப்பரையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும்.
-
arunachaleswarar-koil-deepa-thiruvizha
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா புகழ் பெற்றதாகும். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரளும் இந்தத் திருவிழா நவம்பர் 11-ஆம் தேதி துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றமும், 20-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 23-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவும் நடைபெறுகின்றன. இதையொட்டி, நவம்பர் 23-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்தத் திருவிழாவுக்கான அழைப்பிதழ் கோயில் நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு, வியாழக்கிழமை மாலை கோயிலில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து, கோயில் முக்கியப் பிரமுகர்கள், தீபத் திருவிழா பணியில் ஈடுபடும் பல்வேறு சமூகத்தினருக்கு கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் அழைப்பிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் நரசிம்மன், நகர அதிமுக செயலர் செல்வம், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
-
thiruchendur-aani-varshbishegam
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 23ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பின்னர் கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து, காலை 8.30 – 9 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.
-
23
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவை ஒட்டி அக்டோபர் 1ந் தேதி வரை 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வருகிறார். திருப்பதி ஏழுமலையான்கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி செப்டம்பர் 19-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 22-ந் தேதி அங்குரார்ப்பணமும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் மொத்தம் 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் உலா வருகிறார். 23-ந் தேதி மாலை துவாஜரோகணம் எனும் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரியசேஷ வாகன வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 9 மணிக்கு சின்னசேஷ வாகனத்திலும், இரவு 9 மணிக்கு அம்ச வாகனத்திலும், 25-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 26-ந் தேதி காலை 9 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு 9 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. 27-ந் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவு 7.30 மணிக்கு கருடவாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா வருகிறார். 28-ந் தேதி காலை அனுமந்த வாகனத்திலும், மாலை 5 மணிக்கு ஸ்வர்ண ரதோட்சவத்திலும், இரவு 9 மணிக்கு கஜவாகன வீதி உலாவும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 9 மணிக்கு சூரியபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. அக்டோபர் 1-ந் தேதி காலை 6 மணிக்கு சக்ரஸ்நானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு துவாஜரோகனம் நடக்கிறது.