Tag: #பிப்ரவரி2026 #ராசிபலன் #அதிர்ஷ்டம் #ஆன்மிகம் #ஜோதிடம் #FebFortune #RasiPalan

  • Libra: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    துலாம் :

     

    கிரகநிலை :

     

    சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – பஞ்சம ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூபாக்கிய ஸ்தானத்தில் குரு() – லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணிக்கிறார்.

    இதனால் பணவரவு அதிகமாகும். குரு பார்வையால் சுபச்செலவு உண்டாகும்.

    நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.

    புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

    குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.

    பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

    மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

     

    பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்வெள்ளி

     

    சந்திராஷ்டம தினங்கள்பிப்ர 24, 25

     

    அதிர்ஷ்ட தினங்கள்பிப்ர 03, 0

     

     

     

  • Virgo: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    கன்னி :

     

    கிரகநிலை :

     

    பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூதொழில் ஸ்தானத்தில் குரு() – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
     

    கிரகமாற்றம்:
     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
     

    பலன்:
     

    இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சஷ்டாஷ்டக ஸ்தானத்தில் இருக்கிறார்.

    அனைவரும் உங்களிடம் நேசமுடன் பழகுவார்கள். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் அகலும்.

    அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் வேகமாக நடக்கும்.

    எதிர்ப்புகளை சிறப்பாக சமாளிப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும்.

     ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

     குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.

     பெண்களுக்கு சுபச்செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் அகலும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வரும்.

    அரசியல்துறையினருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

     

    பரிகாரம்: வாராகி தேவியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.

     

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்புதன்

     

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 22, 23

     

    அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 01, 02, 28

  • Leo: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    சிம்மம்

     

    கிரகநிலை:

     

    ராசியில் கேதுரண ருன ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – களத்திர ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூலாப ஸ்தானத்தில் குரு() என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். வீண்கவலை அகலும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    வெளி வட்டார தொடர்புகளினால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

    வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் இருந்த தடங்கல்கள் நீங்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது.

     பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

    பெண்களுக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சுபச்செலவுகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

    அரசியல்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

     

     

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

     

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறுசெவ்வாய்வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 20, 21

    அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 26, 27

  • Cancer: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    கடகம்

     

    கிரகநிலை:

     

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுசப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூவிரைய ஸ்தானத்தில் குரு() என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசியை செவ்வாய்சூரியன் பார்க்கிறார்கள். நல்ல பலன்கள் வரும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சில நேரங்களில் அவசரத்தன்மை ஏற்படலாம்.

    வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும்.பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.

    பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்.

     

     கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும்.

    கலைத்துறையினருக்கு மந்தமான காரியங்கள் வேகமெடுக்கும். அரசியல்துறையினருக்கு சுபச்செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

    பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

     

    பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்புதன்வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்:       பிப்ர 18, 19

    அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 24, 25

    கடகம்

     

    கிரகநிலை:

     

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுசப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூவிரைய ஸ்தானத்தில் குரு() என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசியை செவ்வாய்சூரியன் பார்க்கிறார்கள். நல்ல பலன்கள் வரும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சில நேரங்களில் அவசரத்தன்மை ஏற்படலாம்.

    வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும்.பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.

    பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்.

     

     கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும்.

    கலைத்துறையினருக்கு மந்தமான காரியங்கள் வேகமெடுக்கும். அரசியல்துறையினருக்கு சுபச்செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

    பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

     

    பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்புதன்வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்:       பிப்ர 18, 19

    அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 24, 25

     

  • Gemini: February will be a lucky month for this zodiac sign! Everything will go well!

    மிதுனம்:

     

    கிரகநிலை:

     

    ராசியில் குரு() – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேதுஅஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்  – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.

    பேச்சை கடுமை அதிகரிக்கலாம். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

     தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

     

    ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும்.

     சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

    ராசிக்கு இரண்டில் செவ்வாய் சுக்கிரனுடன் சஞ்சாரம் செய்வதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

    பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும்.

    அரசியல்துறையினருக்கு எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.

    மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

     

     

    பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்பிப்ர 15, 16, 17

  • Taurus: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    ரிஷபம்:

     

    கிரகநிலை:
     

    தனவாக்கு ஸ்தானத்தில் குரு() – சுக ஸ்தானத்தில் கேதுபாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்தொழில் ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி சுக்கிரன் புதனுடன் சேர்க்கை பெற்று ராசிக்கு பத்தில் சஞ்சாரம் செய்வதால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும். முயற்சிகள் கைகூடும்.

    பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை சமாளிப்பீர்கள். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.

    கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

     

     அரசியல்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை ஏற்படும். மேலிடத்துடன் இருக்கும் உரசல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும்.

    பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

     

    பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்வெள்ளி

     

    சந்திராஷ்டம தினங்கள்:       பிப்ர 13, 14

     

    அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 20, 21