அக்டோபர் 29 – பிரதோஷம்
குரோதி வருடம் – ஐப்பசி 12
அக்டோபர் 29 – 2024
செவ்வாய்
பிரதோஷம்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி ம 12.20
நட்சத்திரம் : உத்திரம் இ 8.48
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Tag: 2024
-
October 29 2024 Pradhosham
-
October 27 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நிறைவு
ரிஷபம் – மேன்மை
மிதுனம் – ஆதாயம்
கடகம் – அசதி
சிம்மம் – நற்செயல்
கன்னி – உயர்வு
துலாம் – வரவு
விருச்சிகம் – ஆக்கம்
தனுசு – அனுகூலம்
மகரம் – நட்பு
கும்பம் – நஷ்டம்
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம் -
October 27 2024 Vasthunaal
அக்டோபர் 27 – வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
குரோதி வருடம் – ஐப்பசி 10
அக்டோபர் 27 – 2024
ஞாயிறு
ஏகாதசி
வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி கா 8.54
நட்சத்திரம் : மகம் மா 4.10
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
October 26 2024 Rasipalan
அக்டோபர் 26 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – உதவி
கடகம் – பொறுமை
சிம்மம் – பாராட்டு
கன்னி – ஏமாற்றம்
துலாம் – வெற்றி
விருச்சிகம் – சோதனை
தனுசு – அலைச்சல்
மகரம் – மேன்மை
கும்பம் – சுபம்
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம் -
October 26 2024 Indrayanaal
அக்டோபர் 26 – நெல்லை காந்திமதியம்மன் தேர்
குரோதி வருடம் – ஐப்பசி 09
அக்டோபர் 26 – 2024
சனி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 7.44
நட்சத்திரம் : ஆயில்யம் ம 2.22
யோகம் : மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Meenam Shakthi Online – November Monthly Prediction – 2024
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
ராசியில் ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
05.11.2024 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
08.11.2024 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று பாக்கிய ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
16.11.2024 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூர்யன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டைக் காக்கும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படும் மீன ராசி அன்பர்களே இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும்.
பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும்
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
பூரட்டாதி:
இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.
ரேவதி:
இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
சந்திராஷ்டம தினங்கள் : 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Kumbham Shakthi Online – November Monthly Prediction – 2024
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் சனி (வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் – தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
05.11.2024 அன்று ராசியில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
08.11.2024 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று தொழில் ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
16.11.2024 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூர்யன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எந்த கடினமான வேலைகளையும் சரியாக செய்து முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்கள் ராசிக்கு யோகம் பெறுகிறீர்கள். எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும்.
பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.
அரசியல்துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
அவிட்டம்:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
ஸதயம்:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.
பூரட்டாதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள் : 25, 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Maharam Shakthi Online – November Monthly Prediction – 2024
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – பஞசம ஸ்தானத்தில் குரு(வ) – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன் – லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
05.11.2024 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
08.11.2024 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று லாப ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
16.11.2024 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சூர்யன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட மகர ராசி அன்பர்களே இந்த மாத பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல் களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.
கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. உற்சாகமாக இருப்பீர்கள். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு நல்ல பெயர் ஏற்படும்.
அரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.
உத்திராடம்:
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.
திருவோணம்:
இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
அவிட்டம்:
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள் : 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Dhanusu Shakthi Online – November Monthly Prediction – 2024
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சூரியன் – விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
05.11.2024 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
08.11.2024 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
16.11.2024 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூர்யன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
யார் எந்த பிரச்சனை என்று வந்தாலும் அவர்களுக்கு சரியாக வழிகாட்டும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் குரு நல்ல பலன்களை பெறுவதற்கு உண்டான எல்லா வகைகளிலும் சஞ்சரிக்கிறார். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் பேச்சு திறமை கை கொடுக்கும்.
தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..
கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணீகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.
அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
மூலம்:
இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பூராடம்:
இந்த மாதம் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம்:
இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Viruchigam Shakthi Online – November Monthly Prediction – 2024
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசி ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சனி (வ) – பஞசம ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
05.11.2024 அன்று சுக ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
08.11.2024 அன்று ராசியில் இருந்து சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று ராசியில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
16.11.2024 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சூர்யன் ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
சொல் போல் செயலும் இருக்க வேண்டும் என்று செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.
அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
விசாகம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.
அனுஷம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
கேட்டை:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள் : 18, 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்