Tag: 2020 predictions

  • Dhanusu 2020 predictions

    தன்னுடைய சொந்த காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே இந்த ஆண்டில் முக்கிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டினால் குதூகலங்கள் அதிகம் சந்திப்பீர்கள். பாசம் காட்டாத உற்றார் உறவினர்கள் பாசம் காட்டத் துவங்குவார்கள். உடலில் இருந்த உபாதைகளும், மனக்குழப்பங்களும் விலகும். புதியவர்கள் நட்பு கிடைத்து அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கைகள் வீண் போகாது.

    சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடியும். புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் தேடிவரும். அதே நேரம் திரும்பத் திரும்பச் செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி விடவும். மறைமுகப் பகையை பாராட்டும் பழைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம்.
    உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். உங்கள் பணிகளில் அதிக சிரத்தையும் முயற்சியும் தேவை. யாரும் உங்களை குறை கூறாத அளவிற்கு நேரத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் கனிவான உறவினை கொள்ளும். அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

    வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் லாபம் உறுதியாகக் கிடைக்கும். போட்டிகள் அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். உங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது நன்மை தரும். யாரிடமும் அனுசரணையான உறவைக் கையாள்வது நல்லது. கூட்டு வியாபாரங்களில் கணக்கினை சரியாக வைத்துக் கொள்வது நன்மை தரும். அரசு வகையில் சில பிரச்சனைகள் வரலாம். 

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சக கலைஞ்சர்களிடம் சுமூகமாக பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக படித்து பார்ப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்லும் சரியான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.

    மாணவர்களுக்கு ஏழரை ஜென்ம சனி ஆரம்பிக்க இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. விளையாட்டில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நன்மை தரும். உயர்கல்விக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

    அரசியல்துறையினருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர். 

    பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது. கடினமாக உழைத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் உதவிகளால் முன்னேறுவீர்கள். 

    மூலம்:
    இந்த ஆண்டு முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். 

    பூராடம்:
    இந்த ஆண்டு கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். 

    உத்திராடம்:
    இந்த ஆண்டு பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.

    பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு
    + அதிகமாக உழைத்தல் : – பரபரப்பு மற்றும் உடல்நலம் பாதித்தல்

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • maharam 2020 predictions

    உத்திராடம் 2,3,4 பாதங்கள் – திருவோணம் – அவிட்டம் 1,2 பாதங்கள்

    கல்விமான் என்று பலராலும் பாரட்டப்படும் அளவுக்கு உங்களிடம் சிறப்பான அறிவாற்றல் மட்டுமல்லாமல், கற்பனைத் திறனும் அபரிமிதமாக அமைந்திருக்கும் மகர ராசி அன்பர்களே இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதோடு பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும்.

    சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உங்கள் செயல் திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெறுவீர்கள். அதே சமயம் கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சரியான வெளிச்சம் உள்ள இடத்திலமர்ந்து படித்து கண்களில் குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் புண்படும்படி பேசியவர்கள் வருத்தம் தெரிவித்து நட்பாவார்கள். இல்லத்தில் சிறப்பான வாழ்க்கைச்சூழல் உண்டாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று குதூகலமாக காலத்தைக் கழிப்பீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். புது வீடு, வாகனம் ஆகியவைகளை வாங்குவீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உங்கள் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப் பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள். உய்டர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்குமாதலால் மறைமுக வருமானங்கள் போன்ற தனிப்பட்ட சலுகைகள் உங்கள் பொருளாதார நிலையைப் பெருமளவில் உயர்த்தி விடும். வேலை தேடி அலைந்து வந்த சிலர் இப்போது நல்லதொரு வேலையில் அமர்ந்து விடுவீர்கள். 

     

    வியாபாரிகளுக்கு:
    நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும். பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையா சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். 

    கலைத்துறையினருக்கு:
    புதிய புதிய வாய்ப்புகள்  பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.  சோர்வின்றி உழைத்து உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். 

    மாணவர்களுக்கு:
    கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும் கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அறிவியல், மருத்துவம் போன்ற துறையில் பயில்வோர் கூடுதல் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர்கல்வி பெற வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பம் நிறைவேறி மகிழவும் சிலருக்கு வாய்ப்புண்டு. சிலர் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய நிலையையும் அடைவீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாராட்டுவார்கள். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும். 

    பெண்களுக்கு:
    குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனைகள் எதுவும் எழாத வண்ணம் மிக நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள். சிலர் விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பைப் பெறுவீர்கள். மணமான பெண்களில் சிலர் இப்போது மகப்பேறு பாக்யத்தைப் பெற்று மகிழ்வீர்கள். மகளின் அமைப்புகளில் பொறுப்பானதும் பெருமைக்குரியதுமான பதவிகளைச் சிலர் பெறுவீர்கள். சேமிப்புகள் பெருகி மனமகிழ்ச்சியடைவீர்கள் என்றாலும் அதை நம்பகமற்ற சீட்டு கம்பெனிகளில் கொடுத்து ஏமாறாமல் முறையாக வங்கிகளில் சேமிப்பது மிக அவசியம்.
    நட்சத்திரப் பலன்கள்.

    உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்:
    இந்த ஆண்டில் நீண்ட காலமாக மனத்தில் இருந்து வந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். பணப்புழக்கத்தில் திருப்திகரமான நிலை இருந்து வரும். வாகனவசதிகள் சிலருக்கு அமையக்கூடும். மாண்வமணிகள் சிறப்பான முன்னேற்றம் பெற்று சாதனை படைக்கக்கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறும். அவ்வப்போது ஏற்படக் கூடிய சிறு சச்சரவுகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவதே நன்மை தரும். உடல் நிலையில் பிரச்சனை எதுவும் இராது என்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். 

    திருவோணம்:
    இந்த ஆண்டில் பெரும்பாலான விருப்பங்கள் நிறைவேறக் கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை திருமணம் தள்ளிப்போய் வந்தவர்களுக்கு இப்போது நல்ல முறையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. சிலர் மகப்பேறு பாக்யத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் உங்கள் மனைவியின் பெயரில் தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்கி உபரி வருமானத்தைப் பெறக்கூடும். 

    அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:
    இந்த ஆண்டில் தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலையில் உயர்நிலை அடையும் வாய்ப்பு உண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவாக அமையும். கலைஞர்களில் சிலர் விருதுகளைப் பெறக்கூடிய நிலை உண்டு. பெண்களால் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எல்லா வகையிலும் பலரும் பொறாமை கொள்ளும் வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகி ஏதேனும் தொழில் தொடங்குவீர்கள்.

    பரிகாரம்: பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

    + வாக்கு வன்மை அதிகரிக்கும் : – சுபநிகழ்ச்சிகளில் சுணக்கம்
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542
     

  • Kumbham 2020 predictions

    உங்கள் சொந்த பலத்தை மட்டுமே உறுதியானது என நம்பி, தளராத தன்னம்பிக்கையுடன் அயராமல் உழைத்து சாதனையாளராகும் கும்ப ராசி அன்பர்களே இந்த ஆண்டில் உங்கள் காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவு படுத்த சிறிது கடன் வாங்கவும் நேரலாம். உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக  விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். உடலாரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும்,மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும்.  

    சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்வீர்கள். மற்றபடி சகோதர  சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் நல்ல காரியங்களைச் செய்யும் காலகட்டமாக இது  அமைகிறது.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது. உங்கல் உயர் அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வர வேண்டும். உங்கள் வசம் உள்ள ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வர வேண்டியதும் அவசியம். சக பணியாளர்களாலும், தொல்லைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அவர்களிடமும் பணிவாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

    வியாபாரிகளுக்கு:
    எதிர்பார்த்த லாபம் இருக்காது. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடி வராமல் காக்கலாம். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளுடன் மனக் கசப்பு நேர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. 

    கலைத்துறையினருக்கு:
    முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து  முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உங்கள் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    மாணவர்களுக்கு:
    ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் படிப்பில் மேன்மை நிலை அடையலாம். நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தலைமை உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு பொறுப்பான பதவிகயையும், பொருளாதார உதவியையும் செய்வார்கள். 
    பெண்களுக்கு:

    குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். உங்கள் இரகசியங்களை எவரையும் நம்பி வெளிப்படுத்தாமலிருப்பது நன்மை தரும்.

    நட்சத்திரப்பலன்கள்:

    அவிட்டம் 3, 4ம் பாதங்கள்:
    இந்த ஆண்டு தொழில் வியாபாரம் ஏற்ற இரக்கமாக இருக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரலாம். மாணவமணிகளும்,. கலைஞர்களும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக்கூடும். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். தொலை தொடர்பு செய்திகள் இனிமையானதாக இருக்கும். 

    சதயம்:
    இந்த ஆண்டு குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வித சங்கடமும் வராது. தேவைகள் இல்லாமல் கடன் பெறுவதை தவிர்க்கவும்.
    பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:
    இந்த ஆண்டு சிறு சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுகிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு காணப்பட்டாலும், பேச்சு வார்த்தை மூலம் சரி செய்துவிடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள்.

    பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், சுக்கிரன்

    + தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் : – வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Meenam 2020 predictions

    எப்போதும் இன்முகத்துடனும், இனிய பேச்சுடனும் இருக்கும் மீன ராசி அன்பர்களே நீங்கள் எல்லோரிடமும் பழகி எல்லோரையும் உங்கள் பால் ஈர்த்துக் கொள்வீர்கள். இந்த ஆண்டில் நண்பர்கள் ஓடி  வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து  விட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். 

    மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி  செய்வீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்கள் செய்து அதன்மூலம் நன்மைகள் பெறுவீர்கள்.  எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராக சிந்திக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திரப் பேறு, வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். பணிகளில் அக்கறையுடனும், கவனமுடனும் செயல்படுவது அவசியம்.

    வியாபாரிகளுக்கு:
    வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போடியாளர்களால் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான கொள்முதல் செய்யும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கடன் தொகையை நிலுவையில் விடுவது சிரமத்தை ஏற்படுத்தும். கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு:
    புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக்கூடும். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். நேரத்திற்கு வேலைகளை முடித்துக்கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை ஏற்படுத்துவதைத் தவரிக்கவும். 

    மாணவர்களுக்கு:
    படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதன்மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர் மட்டுமின்றி  அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

    அரசியல்வாதிகளுக்கு:
    பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியடைய வைப்பீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் உங்களில் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

    பெண்களுக்கு:
    குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். சிலருக்கு திடீர் திருமண வாய்ப்பும் கிடைக்கப் பெறும். புத்திரப்பேறும் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக சேமிப்புகள் தக்க நேரத்தில் உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. 

    நட்சத்திரப் பலனகள்:

    பூரட்டாதி 4-ம் பாதம்:
    இந்த ஆண்டு, உத்தியோகஸ்தர்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத தனலாபத்தைப் பெறுவீர்கள்.

    உத்திரட்டாதி:
    இந்த ஆண்டு, சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் கவனம் தேவை.

    ரேவதி:
    இந்த ஆண்டு, நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பணவரவில் தடை இருக்காது. 

    பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை. 

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

    + பணவரவு மற்றும் வெளிநாடு செல்லுதல் : – உங்கள் மீது புறம் கூறுதல்
     

  • Thulam 2020 predictions

    எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே இந்த ஆண்டில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். 

    பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடலாரோக்கியம் ஒத்துழைக்கும். முற்காலத்தில் வாங்கியச் சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் உங்களுடன் நட்புக் கொள்ள அழைப்பார்கள். அதேநேரம், உங்கள் செயல்களைப் பெரிய ஆரவாரம் இல்லாமல் செய்யுங்கள். 

    மேலும் உங்கள் ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும். முரண்டுப் பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகிவிடவும். இதனால் புதுப்பிரச்னை எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு பிள்ளைகளிடம் அனாவசிய கெடுபிடிகளைத் தவிர்த்து தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

    உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. 

    தொழில் துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உப தொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். 

    கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர் – பின்னணி இசைக்கலைஞர்கள் – நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதத்திற்குப் பிறகு பொன்னான காலகட்டமாக இருக்கும். 

    மாணவமணிகளுக்கு கல்வியில் சிறிது ஆர்வகுறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற குற்றச்சாட்டு அகல தீய பழக்கவழக்கம் இருக்கும் நண்பர்களிடமிருந்து சற்றே விலகியிருப்பது நல்லது. 

    அரசியல் துறையினருக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். 

    பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது.  நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும். 

    நட்சத்திர பலன்கள்:
    சித்திரை 3, 4ம் பாதங்கள்:
    இந்த ஆண்டு எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். 

    ஸ்வாதி:
    இந்த ஆண்டு நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

    விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:
    இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.  எல்லாம் நல்லதே நடக்கும்.

    பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். 

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு

    + முதலீடு அதிகரிக்கும் : – சகோதர சகோதரிகளிடம் மனகிலேசம்
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • viruchigam 2020 predictions

    எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ள விருச்சிக ராசி அன்பர்களே இந்த ஆண்டில் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுத் தெரியும். செய்தொழிலில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரில்  இருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். 

    மேலும் பழைய கடன் பாக்கிகளும் வசூலாகும். புதுப்புதுப் பிரச்னைகளுக்கு நூதனமாகக் சிந்தித்து முடிவு காண்பீர்கள். அதே நேரம், குடும்பப் பிரச்னைகளில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், நீங்கள் நம்பியவர்களாலேயே ஏமாற்றப்படலாம். அதனால் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்ளுங்கள். மேலும் தீயோரின் சகவாசத்தை அடியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதோடு பாகப்பிரிவினைகளை துரிதப்படுத்தாமல் தாமதப்படுத்துங்கள். 

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். 

    வியாபாரிகளுக்கு:
    உங்கள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம்.  படிப்படியான வளர்ச்சி நிலை உங்கள் தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் காணப்படும். 

    கலைத்துறையினருக்கு:
    புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை இன்றி சுமூகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். 

    மாணவர்களுக்கு:
    உங்கள் படிப்பாரவம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம். விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாரட்டுகளைப் பெறுவீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்கள் பொறுப்பான் பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உங்களுடன் உள்ள சிலரே பொறாமைப் படுவார்கள். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செய்தால் வெற்றி உண்டு. 

    பெண்களுக்கு:
    குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். மனம்போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

    நட்சத்திரப்பலன்:

    விசாகம் 4ம் பாதம்:
    இந்த ஆண்டு தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும்.

    அனுஷம்:
    இந்த ஆண்டு உத்தியோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திர வழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும்.

    கேட்டை:
    இந்த ஆண்டு குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

    பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

    அதிர்ஷ்ட ஹோரைகள்: ஞாயிறு, செவ்வாய், குரு

    + உண்மையை உணர்தல் : – எடுத்த காரியங்களில் சுணக்கம்
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Simham 2020 predictions

    மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
    ராசியின் பெயருக்கேற்ப சிங்கதிற்கே உரிதான கம்பீரமான் தோற்றம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே இந்த ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அதே நேரம், இந்த காலகட்டத்தில் உங்களிடம் பணம் பெற்றவர்கள் நன்றி பாராட்டுவது குறைவாகவே இருக்கும். மேலும் உடல் உபாதைகளை அலட்சியப்படுத்தினால் பெரிய மருத்துவச் செலவுகள் செய்யுமாறு நேரிடலாம். 

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர் ப்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் விருப்ப ஓய்வின் மூல உத்தியோகத்திலிருந்துவிலகி தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவிவரும். 
    வியாபாரிகளுக்கு:
    உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்துநல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருள்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் நல்ல வேளை அமையும். 

    கலைத்துறையினருக்கு:
    வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவாரியாகப் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் , புகழும் நாடெங்கும் நன்கு பரவும். 

    மாணவர்களுக்கு:
    கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று , ஆசிரியர்களின் பராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு  முன்னரே  சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும்  தொண்டர்களின்பெரும் ஆதரவையும் பெற்றுள்ள  உங்கள் செல்வாக்கும்  சொல்வாக்கும்  உங்களூக்குத்தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.பொருப்பான பதவிகள் சில  உங்கத்தேடிவரும்  உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக்கணக்கில் சேமிப்பு பெருகும்.வீடு,மனை, வண்டி,வாகன வசதிகளைக்  குறைவறப்பெற்றுக் களிப்பில் திளைப்பீர்கள்.

    பெண்களுக்கு:
    வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள்.                    

    நட்சதிரப்பலன்கள்

    மகம்:
    இந்த ஆண்டில் உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டுமிட்டு  வந்தவை யாவும்  இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும் வீடு,மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்தவீட்டில்தான் இருக்கக்கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள்.குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிராது. எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டு.  உங்கள் திட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெறத் தவறுமாயினும்,வெற்றி பெரும்வரை சளைக்காமல் அதற்கெனப்போராடி  இறுதியில்  வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள்.  

    பூரம்:
    இந்த ஆண்டில் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பணப் புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். பிரிந்து சென்ற உறவினர் திரும்பி வந்து சேருவார்கள். மற்றவர்களுக்கு பெருமளவில் உதவியும் செய்வீர்கள். மாணவமணிகள் எல்லா வகையிலும் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்று மகிழ முடியும். மற்றவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பார்கள். பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை.

    உத்திரம் 1 ம் பாதம்:
    இந்த ஆண்டில் உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் பணப்புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இட முண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவுபடுத்தினால் போதுமானது. கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செல்வதே விவேகமாகும்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும். 

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு

    + பணவரவு : – சொத்துகளில் பிரச்சனை
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542