Tag: 1000-ஆவது

  • Tnj periyakoil annabishegam

    தஞ்சாவூர் பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம், 700 கிலோ காய்கறிகளாலும் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.

    தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ்பெற்று சிறந்து பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி கட்டிட கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது, இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம், அதைப்போல் இந்தாண்டும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, சுமார் 1000 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய்  உள்ளிட்ட 700 கிலோ காய்கறிகள் கொண்டும் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது,

    இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது, அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும். இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

  • prityagara devi 1000 kg chilli yagam

    இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 31.01.2022 திங்கட்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சரபசூலினி ப்ரத்தியங்கிரா யாகத்துடன் கண்திருஷ்டி போக்கும் 1000 கிலோ மிளகாய் யாகம் நடைபெற்றது.

    ப்ரத்தியங்கிரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். அன்னை சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். கம்பீரமான விஸ்வரூபம். நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் எட்டு கரங்களுடன் மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள். அடியவருக்கு வாரி வழங்கும் விதமாக சாந்த ரூபிணியாக 4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் திகழ்கின்றன. அன்னைக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.

     தீராத வியாதிக்குக்கூட மருத்துவர்களைச் சந்தித்து மருந்து வாங்கி நிவாரணம் பெற்று விடலாம். ஆனால், திருஷ்டி என்கிற கொடூர நோய்க்கு உள்ளாக நேர்ந்து விட்டால், அவ்வளவுதான்! சொத்து, சுகம், நிம்மதி, அன்பு இப்படி எதுவுமே நம்மிடம் தங்காது. காரணம் இது கலி காலம். ஒருவரது முன்னேற்றம் இன்னொருவரது முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிற காலம் இது. போட்டியும் பொறாமையும் தலை விரித்து ஆடுகின்றன.

    இத்தகைய திருஷ்டி ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொள்வதால், இருக்கிற திருஷ்டி அகல்வதோடு ராகு திசை நடப்பவர்களுக்கும் ராகு புக்தியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று அருள் பெறலாம்.மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும்,  நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இன்று 31.01.2022 திங்கட்கிழமை தை அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட ப்ரத்தியங்கிரா யாகமும் ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    கோவிட்19 போன்ற நோய்கள் அகலவும், விஷக்கிருமிகள் தாக்காமல் இருக்கவும், உலக மக்களின் நலன் கருதியும், இயற்கைச் சீற்றங்கள் குறைந்து, சகல வளங்களையும் அனைவரும் பெறும் வண்ணம் இந்த யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், முறம், வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றைக் கொண்டு இந்த மஹா யாகம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
     

  • Danvantri Arogya Peedam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 23.07.2019 காலை 10.00 மணிக்கு ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு தடைகளை தகர்க்கும் அதர்வண பத்ரகாளி யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் துவங்கியது. 

    இந்த அபிஷேகமானது வருகிற 30.07.2019 ஆடி செவ்வாய்கிழமை வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றலை கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

    ஆடி செவ்வாய்கிழமையான துவங்கிய 1000 கிலோ மிளகாய் அபிஷேகம் பக்தர்களுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்கள் அகலவும், இரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், புத்திர பக்யம் உண்டாகவும், தடைகள் நிவர்த்தியாகி முயற்சிகளில் வெற்றி பெறவும், ஏவல், பில்லி, சூன்யம் நம்மை விட்டு அகலவும், சத்ரு உபாதைகள் நிவர்த்தியாகவும் இங்கு பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள மிளகாய் வற்றலை பெற்று யாக குண்டத்தை மூன்று முறை வலம் வந்து அவரவர்கள் பிரார்த்தனை நிறைவேற மஹா காளி ப்ரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்தனர். 

    மேலும் பல்வேறு நன்மைகளுக்காக பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம, நகர பொதுமக்கள், தமிழகம் மட்டுமின்றி பிறமாநில பக்தர்களும் பங்கேற்று பக்தியுடன் மிளகாய் அபிஷேகம் செய்து வருவதாக  தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    – தொடர்புக்கு

    "Yagnasri Kayilai Gnanaguru" Dr. Sri Muralidhara Swamigal
    FOUNDER
    Sri Danvantri Arogya Peedam,
    04172-230033, 0944330203
    ,
  • 1000 KG Milagai vatral yagam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் இருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி வரும் ஆடி அமாவாசை அன்று 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா காளி யாகம் நடத்தப்பட இருக்கிறது. 

    ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆக்ஞைப்படி  வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

    காளி, காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை போக்குவதும், நீக்குவதும் இவளே. காளி ஞானத்தின் வடிவம். அறியாமை எனும் இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பவள். கருணையின் வடிவம். 

    இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்ல முடியும். ஞானத்தையும், செல்வத்தையும், கல்வியையும், அளிப்பவள் இவளே. இவள் துணிவை தருபவள், பயத்தை போக்குபவள், நோய்களை போக்குபவள், மரணமில்லா பெருவாழ்வு தருபவள். 

    இந்த யாகங்கள் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், உயர் பதவி கிடைக்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபாரம் மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடு, வாசல், நன்மைகள் அமையவும், சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன் அஷ்டபைரவர் யாகம் நடைபெற உள்ளது.

    மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகை பொருட்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆசார்ய வஸ்திரங்கள், மளிகை பொருட்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள், மிளகாய் வற்றல், சிகப்பு நிற புஷ்பங்கள், சிகப்பு நிற பழங்கள், சமித்துக்கள், போன்றவை அளித்து கைங்கரியத்தில் பங்குபெற்று இறையருளுடன் குருவருள் பெற்று மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு வாழலாம். 
     

  • 1000

    திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் முதல் பணக்கார கடவுளான ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்தாண்டு 2 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 897 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் 995.89 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 730 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 66 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 594 பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்தாண்டில் 1 கோடியே 22 லட்சத்து 37 ஆயிரத்து 368 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதன் விற்பனை மூலம் ரூ.6.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

  • 1000

    ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழா ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, ராமானுஜர் கோயிலில் உள்ள தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஆதிகேஷவபெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவாதிரைக்கு 9 நாள்களுக்கு முன்பு, சித்திரைப் பெருவிழா அவதார உற்சவமாக நடைபெறும்.
    இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி உற்சவம், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 4 நாள்கள் தெப்பத் திருவிழா நடைபெறும். இதில், தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், சித்திரை திருவிழாவில் பெரிய தேரை பயன்படுத்தப்படாமல் சிறிய தேரை கோயில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
    இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, தேர் உலா வரும் காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு ஆகிய சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
    மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த பெரிய தேரை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
    இதில், தேரின் சக்கரங்கள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் விரைவில் நிறைவு பெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.