Tag: 000 பேருக்கு அனுமதி

  • poojai coconut bid

    போடிநாயக்கனூர் சுப்பிரமணியர் திருக்கோவில் முருகன் திருக்கல்யாணத்தில் நடைபெற்ற சுவாரசியம். கந்த சஷ்டி பூஜை கலசத்தில் வைக்கப்பட்ட கலசத் தேங்காய் ரூபாய் 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த நபர்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் திருத்தலங்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்று முடிந்ததை அடித்து திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக போடிநாயக்கனூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

     முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க கவசம்   சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவில் மண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் அலை கடலென பக்தர்கள் திரண்டு வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

     திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல் இந்த முறையும்  கலச பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஆலய நிர்வாகம் சார்பாக ரூபாய் 3001ல் தொடங்கப்பட்ட ஏலம் படிப்படியாக உயர்ந்து நிறைவாக ரூபாய் 36 ஆயிரத்திற்கு  ஏலம் கேட்கப்பட்டது.

    போடிநாயக்கனூர் குப்பிநாயக்கம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மதன் வீரன் என்பவர் ரூபாய் 36 ஆயிரத்து ஒன்றுக்கு பூஜையில் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காயை ஏலம் எடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும் வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வேள்வி பூஜையில் வைக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் வீட்டில் வைத்து பூஜிக்கும் பொழுது பல்வேறு சுபிட்சங்கள் சுப காரியங்கள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

  • Maha Deepam anumathi

    திருவண்ணாமலை கோயிலில் வரும் 10ம் தேதி நடக்கும் மகாதீபத்திருவிழாவில் பங்கேற்க 6 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர தீபமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பரணி தீபம் தரிசனத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபம் தரிசனத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், பொது தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பரணி தீபத்திற்கு 2 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

    தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கார் பார்க்கிங் வசதி 48 மணி நேரத்திற்கு முன்பு இணையதளம் திறக்கப்படும். இந்த ஆண்டு 1000 கார்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.