Blog

  • Lakshmi Narashimmar abishegam

    புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவில் வளாகத்தின் அருகே  அமைந்துள்ள  16 அடி உயர லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 10 மணி நேர தொடர் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் 108 கிலோ சந்தனம், விபூதி மற்றும் 108 லிட்டர் தேன், தயிர், பால் மற்றும் கரும்புச்சாறு இளநீர் உட்பட பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு காலை 6:00 மணிக்கு துவங்கிய அபிஷேகம் மாலை 5 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து பத்து மணி நேரம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் சகல விதமான நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Karur Nayanmar vizha

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயன்மார் குருபூஜை விழாவில் குதிரை யானை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா.

    தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயன்மார்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இரவு நாயன்மார்களின் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்டது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயர்மார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா காட்சியளித்தனர்.

    சுவாமி நாயன்மார்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. ஆலயம் குடி புகுந்த நாயன்மார் சுவாமிகளுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார்.

    கரூர் கல்யாண பசுபதீசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற நாயன்மார் குருபூஜை விழா திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • July 26 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் –    சாந்தம்  
    மிதுனம் –   முயற்சி  
    கடகம் –    அமைதி
    சிம்மம் –   இரக்கம்
    கன்னி –    நலம்
    துலாம் –     உயர்வு
    விருச்சிகம் – இன்பம்
    தனுசு –     நன்மை
    மகரம் –    புகழ்  
    கும்பம் –     அசதி
    மீனம் –       தொல்லை
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுபதி

  • July 26 2023 indrayanaal

    ஜூலை 26 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆடி 10
    26-ஜூலை-2023 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : நவமி     
    திதி நேரம் : அஷ்டமி கா 11.35
    நட்சத்திரம் : சுவாதி இ 9.38
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Aadi month ammanukku ugandha sirappugal

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருபப்து கூடுதல் பலன் களை தரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும். ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

    ஆடிப்பூரத் தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத் தன்று ஆண்டாளை நந்த வனத்துக்கு எழுந் தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  • Avvai nonbu

    தமிழ் மாதங்களில் "ஆடிக்கும், "மார்கழிக்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.

    பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. சரி ஆடி செவ்வாயில் கொண்டாடப்படும் அவ்வையார் நோன்பு எவ்வாறு கடைப்பிடிப்பது என்று தெரிந்துக் கொள்வோம்.

    ஆடியில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் தலை குளித்து அம்மனை வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம் கூடும். இதுதவிர ஆடி செவ்வாயில் அவ்வையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த அவ்வை நோன்பை கடைப்பிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

    அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் முறை:
    ஆடிச் செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த நோன்பை கடைப்பிடிப்பர். பச்சரி மாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்து படைப்பர். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்களில் உப்பு சேர்க்க மாட்டார்கள். அதன்பின் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள்.

    பிறகு, அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பத்தியோடு கேட்பர். அதன்பின் ஒரு நீர் நிரப்பிய பாத்திரத்தில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில் தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி, தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார் அம்மன் கோயிலில், இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும், விரதமிருந்தவர்கள் உண்பார்கள். இந்த விரதம் ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு செய்த இடத்தை தூய்மைப்படுத்தி விடுவார்கள். இந்த விரதம் ஒவ்வொரு ஆடி செவ்வாய்க் கிழமைகளில் ஒவ்வொருவரின் வீட்டில் கடைப்பிடிப்பர். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். திருமணம் கைக்கூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடிச் செவ்வாய் தேடிக்குளி என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய் சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் தீவிரமாக தாக்குகின்றன. இதனால் ஜாதகர் உடல், மன ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தல் அவசியம்.

    அவ்வாறு பலம் பெற்று இருக்கும் ஜாதகர் வாழ்வில் சகல வசதிகளும், அதாவது,சொந்த வீடு, வாசல், சொத்து என்று வசதியாக இருப்பர். செவ்வாய் பலம் இழந்து காணப்பட்டால், செவ்வாய் தோஷம், வாழ்க்கையில் பிரச்னை, திருமணத் தடை ஆகியவை ஏற்படும். எனவே செவ்வாயின் பலம் வாழ்வில் மிகவும் அவசியம். செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும், துர்க்கையம்மனையும் பூஜித்து வந்தால் செவ்வாய் பலம் பெறும்.

  • Sevvai gragha nanmaigal

    ராசியில் செவ்வாய் கிரகத்துடன் சூரியன் சேர்ந்து இருந்தால் நிறைகுறைகள் சில இருக்கும். உடல் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ற தொழில்களைச் செய்வார்கள். அடிக்கடி தொழில் மாற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் யோகம் உண்டு. இவர்கள் உஷ்ணதேக அமைப்பு உடையவர்களாக இருப்பர்.

    செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் அவர்கள் கைராசி மிக்கவர்களாக இருப்பார்கள். தாயார் வழியில் சொத்து சேரும். வாக்குபலிதம் உள்ளவர்களாக இருப்பர். உணர்ச்சிவசப்பட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள். நண்பர்களால் அவ்வப்போது பிரச்னைகளை சந்திப்பார்கள்.

    செவ்வாய் கிரகத்துடன் புதன் கிரகம் சேர்ந்திருந்தால் விதண்டாவாதம், கூடாநட்பு உண்டாகும். ஸ்திரத்தன்மை அற்றவராக இருப்பார்.  இவர்களின் உடலில் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஏற்படும். முன்யோசனை இல்லாமல் எதையும் செய்வார்கள்.

    இதேபோல செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் சாதக, பாதகங்கள் உண்டு. கலைத்துறையில் இவர்களின்  ஜீவனம் அமையும். சாகசச் செயல்களில் வெற்றி அடைவார்கள். முரட்டு பிடிவாதம் அதிகம் இருக்கும். காம இன்பத்தில் மூழ்கிக் கிடப்பார்கள். தகாத சேர்க்கைகள், பழக்கவழக்கங்கள் இருக்கும்.

    செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் எதிலும் நிபுணத்துவம் உண்டாகும். வாக்குபலிதம், சாஸ்திர ஆராய்ச்சி, ஜோதிடம், குறி சொல்லுதல், ஆசிரியர் பணி, வக்கீல், நிதி  நீதித்துறையில் ஜீவனம் அமையும். பிராமண நேசம், விவசாய நிலங்கள் சொத்து சேர்க்கை உண்டு.

    செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் இரும்பு, இயந்திரங்கள் சம்பந்தமான வகையில் ஜீவனம் அமையும். ஏதாவது வழக்கு, பஞ்சாயத்து என்று அலைந்து கொண்டிருப்பார்கள். முரண்பாடான கருத்துகள் இருக்கும். உடல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். சங்கீத ரசனை இருக்கும்.

    செவ்வாய் கிரகத்துடன் ராகு சேர்ந்திருந்தால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் செய்வார்கள். சினிமா துறையில் ஜீவனம் அமையும். விளையாட்டில் ஆர்வம் இருக்கும். தகாத சேர்க்கை, நீச்ச பழக்க வழக்கங்கள் உண்டாகும்.

    செவ்வாயுடன் கேது சேர்ந்திருந்தால் மருத்துவம், ரசாயனம் சம்பந்தமாக படிப்பு, ஜீவனம் அமையும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உண்டாகும். உற்சாகமாக செயல்பட்டாலும் மனச்சோர்வு அடைவார்கள். விவசாய விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.

  • July 25 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – போட்டி
    ரிஷபம் –    சினம்
    மிதுனம் –   தேர்ச்சி
    கடகம் –    உயர்வு
    சிம்மம் –   சுகம்
    கன்னி –    செலவு
    துலாம் –     வரவு
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு –     பிரிவு
    மகரம் –    பாராட்டு
    கும்பம் –     சிந்தனை
    மீனம் –       வெற்றி
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி

  • July 25 2023 Indrayanaal

    ஜூலை 25 – ஆடி செவ்வாய்
    சோபகிருது வருடம் – ஆடி 9
    25-ஜூலை-2023 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30     
    திதி : அஷ்டமி     
    திதி நேரம் : சப்தமி கா 11.24
    நட்சத்திரம் : சித்திரை இ 8.57
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால் …

     

  • July 24 2023 Indrayanaal eppadi

    ஜூலை 24 – இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் – ஆடி 8
    24-ஜூலை-2023 திங்கள்  
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00     
    திதி : சப்தமி     
    திதி நேரம் : சஷ்டி கா 10.43
    நட்சத்திரம் : அஸ்தம் இ 7.45
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்