Blog

  • August 06 2023 Indrayanaal

    ஆகஸ்ட் 6 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆடி 21
    06-ஆக-2023 ஞாயிறு  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30     
    திதி : சஷ்டி     
    திதி நேரம் : பஞ்சமி ம 1.37
    நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 9.28
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • August 05 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நிம்மதி
    ரிஷபம் –    எதிர்ப்பு   
    மிதுனம் –   வரவு
    கடகம் –    துன்பம்
    சிம்மம் –   புகழ்
    கன்னி –    ஊக்கம்
    துலாம் –     உதவி
    விருச்சிகம் – மறதி
    தனுசு –     அசதி
    மகரம் –    பெருமை
    கும்பம் –     ஆக்கம்
    மீனம் –       போட்டி  
    சந்திராஷ்டமம்    –  மகம்

     

  • August 05 2023 Nallaneram

    ஆகஸ்ட் 5 – இன்றைய நல்லநேரம்…
    சோபகிருது வருடம் – ஆடி 20
    05-ஆக-2023 சனி  
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00     
    திதி : திதித்துவயம்     
    திதி நேரம் : சதுர்த்தி ம 3.37
    நட்சத்திரம் : பூரட்டாதி கா 10.44
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Perumal Slogam

    நன்மைகளை பொழியும் பெருமாள் ஸ்லோகம்

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் :

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

  • Ishwaryam peruga Saturday Viradham

    பெருமாளுக்கு சனிக்கிழமை விரதமிருப்பதன் காரணம் பலபேருக்குத் தெரியாது. அதற்கான காரணத்தை தற்போது பார்ப்போம். புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார் என்பது ஐதீகம்.

    ஆகையால் சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.

    மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

    மேலும் சனிபகவான் மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும். அப்படி செய்து வந்தால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.

  • Mahalakshmi vazhipadu

    கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள்  தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். முன்னதாக ஆடி 18 அன்று  மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆடி 19 காலை சுவாமி மகாலட்சுமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா கண்டு கோவிலை வந்தடைந்தார்.

    பின்னர் சுவாமி அம்பாளுக்கு பரம்பரை பூசாரி ஆணி கால் அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டு கருடன் வட்டமிட்டத்தை தொடர்ந்து ஏழு பூசாரிகளும் ஒன்றாக கோயிலை வலம் வந்தனர்.

    பெரிய பூசாரியின் மேல் அம்மன் அருள் வந்து இறங்கியதும் சப்த கன்னிமார்களை குறிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழு பேரும், குறும்ப கவுண்டர்கள் 7 பேரும் தலையில் முதலில் தேங்காய் உடைக்கப்பட்டு பின்னர் வரிசையாக அமைந்திருந்த 520 பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.

     தலையில் தேங்காய் உடைக்கும் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று நாம முழக்கமிட்டும், மகாலட்சுமி தாயே  என்றும் கோஷம் எழுப்பினர். இதில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

     

  • August 04 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் –    செலவு  
    மிதுனம் –   லாபம்  
    கடகம் –    போட்டி  
    சிம்மம் –   விவேகம்
    கன்னி –    தடங்கல்
    துலாம் –     அமைதி
    விருச்சிகம் – சாந்தம்   
    தனுசு –     அன்பு
    மகரம் –    மகிழ்ச்சி  
    கும்பம் –     வெற்றி
    மீனம் –       இன்பம்
    சந்திராஷ்டமம்    –  ஆயில்யம், மகம்

  • August 04 2023 Sangadahara chadurthi

    ஆகஸ்ட் 4 – சங்கடஹர சதுர்த்தி
    சோபகிருது வருடம் – ஆடி 19   
    சங்கடஹர சதுர்த்தி
    04-ஆக-2023 வெள்ளி  
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : திரிதியை     
    திதி நேரம் : திரிதியை மா 5.51
    நட்சத்திரம் : சதயம் ம 12.14
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • August 03 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நலம்
    ரிஷபம் –    லாபம்
    மிதுனம் –   சாந்தம்  
    கடகம் –    போட்டி
    சிம்மம் –   நட்பு
    கன்னி –    ஆதரவு
    துலாம் –     சலனம்
    விருச்சிகம் – கவனம்  
    தனுசு –     உதவி
    மகரம் –    தேர்ச்சி
    கும்பம் –     புகழ்
    மீனம் –       நன்மை
    சந்திராஷ்டமம்    –  பூசம், ஆயில்யம்

  • August 03 2023 Aadi perukku

    ஆகஸ்ட் 3 – ஆடிப்பெருக்கு
    சோபகிருது வருடம் – ஆடி 18
    ஆடிப்பெருக்கு,
    ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த நாள்
    03-ஆக-2023 வியாழன்  
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30     
    திதி : துவிதியை     
    திதி நேரம் : துவிதியை இ 8.14
    நட்சத்திரம் : அவிட்டம் ம 1.51
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்.