Blog

  • August 09 2023 Rasipalan

    ஆகஸ்ட் 09 – ஆடி கார்த்திகை நாள் ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் –    ஓய்வு
    மிதுனம் –   நிறைவு
    கடகம் –    பாராட்டு
    சிம்மம் –   நலம்
    கன்னி –    இன்பம்   
    துலாம் –     அசதி
    விருச்சிகம் – பக்தி
    தனுசு –     லாபம்  
    மகரம் –    ஆக்கம்
    கும்பம் –     தனம்
    மீனம் –       களிப்பு  
    சந்திராஷ்டமம்    –  சித்திரை

     

  • August 09 Aadi karthigai

    ஆகஸ்ட் 9 – ஆடி கார்த்திகை
    சோபகிருது வருடம் – ஆடி 24   
    கார்த்திகை
    ஆடி கார்த்திகை
    09-ஆக-2023 புதன்  
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : நவமி     
    திதி நேரம் : அஷ்டமி கா 9.33
    நட்சத்திரம் : பரணி கா 7.32
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • August 08 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் –    தனம்  
    மிதுனம் –   தேர்ச்சி
    கடகம் –    செலவு   
    சிம்மம் –   ஓய்வு  
    கன்னி –    சினம்  
    துலாம் –     அசதி
    விருச்சிகம் – மறதி
    தனுசு –     ஆதரவு  
    மகரம் –    பக்தி  
    கும்பம் –     சலனம்
    மீனம் –       உயர்வு
    சந்திராஷ்டமம்    –  அஸ்தம்

  • August 08 2023 Indrayanaal

    ஆகஸ்ட் 8 – ஆடி செவ்வாய்
    சோபகிருது வருடம் – ஆடி 23
    08-ஆக-2023 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30     
    திதி : அஷ்டமி     
    திதி நேரம் : சப்தமி கா 10.30
    நட்சத்திரம் : அசுவினி கா 7.46
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Ellaiamman koil thee midhi thiruvizha

    பூந்தமல்லி குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று  தீ மிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 28-ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவையொட்டி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    7ம் நாள் திருவிழாவன்று 1008 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. 10ம் நாள் திருவிழாவான  நேற்று  தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாள்தோறும் வானவேடிக்கை, இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், ரவிக்குமார் தலைமையில் 3 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் பூவை ஞானம், நிர்மலா ஞானம் தலைமையில் விழாக்குழுவினர், உபயதாரர்கள், ஊர்ப்பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

  • August 07 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நலம்
    ரிஷபம் –    நன்மை
    மிதுனம் –   செலவு
    கடகம் –    தடங்கல்  
    சிம்மம் –   ஆர்வம்
    கன்னி –    சாந்தம்
    துலாம் –     வெற்றி
    விருச்சிகம் – சிக்கல்  
    தனுசு –     மகிழ்ச்சி
    மகரம் –    இன்பம்
    கும்பம் –     விவேகம்  
    மீனம் –       இரக்கம்
    சந்திராஷ்டமம்    –  உத்திரம்

  • August 7 2023 indrayanaal

    ஆகஸ்ட் 7 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆடி 22
    07-ஆக-2023 திங்கள்  
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00     
    திதி : சப்தமி     
    திதி நேரம் : சஷ்டி கா 11.53
    நட்சத்திரம் : ரேவதி கா 8.25
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Nagadhosham neekum naga chadurthi vazhipadu

    நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம். நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி’. நாகத்தை வழிபட்டு நாக தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்கு உகந்த தினம்  நாக சதுர்த்தி தினமாகும். சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

    கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.

    பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

    பொதுவாக ராகு, கேது தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்த நாள் தினம் மிகவும் முக்கியமானது. நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    நாக தோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். கணவன் – மனைவி பிரிந்து வாழ்வார்கள், குழந்தை பாக்கியம் இருக்காது. இந்தத் தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு நாகத்தைப் பிரதிஷ்டை செய்து நாகருக்கு உண்டான வழிபாட்டினை மேற்கொண்டாலே கை மேல் பலன் கிடைக்கும். அனைத்துத் தடைகளும் விலகி உடனே திருமணம் நடைபெறும்.

  • Garuda panjami viradham

    ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி விரதமாகும். இந்நாளில் குழந்தை வரம் வேண்டியும், ஆண் பெண் திருமணம் வேண்டியும் பிரார்த்தனை செய்தால் நற்பலன்கள் பெறலாம். மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.

    கருட பகவானின் பல்வேறு நாமங்கள் :

    மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் என்ற பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படும் கருட பகவான் கச்யப்பர், விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.

    பெரிய திருவடி கருடாழ்வார்

    கருடன், மகா பலம் உடையவர். அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் 'பெரிய திருவடி" என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    கருடன் தரிசன சிறப்பு :

    கருடன்! மங்கள வடிவமானவன். பறவைகளின் அரசன். கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது. கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது. ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவதே தனிச்சிறப்பு ஆகும்.

     

  • August 06 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – பக்தி
    ரிஷபம் –    பரிசு
    மிதுனம் –   பயம்  
    கடகம் –    எதிர்ப்பு  
    சிம்மம் –   வரவு
    கன்னி –    பாராட்டு
    துலாம் –     பிரீதி
    விருச்சிகம் – ஓய்வு
    தனுசு –     வரவு
    மகரம் –    தடங்கல்
    கும்பம் –     வெற்றி
    மீனம் –       புகழ்   
    சந்திராஷ்டமம்    –  பூரம்