Blog

  • Badrakali amman uchikala poojai

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த கோவிலின் சிறப்பு தினமும் மதியம் ஒரு மணிக்கு உச்சிகால பூஜை மிக சிறப்பாகும்.

    மேலும் ஆடி மாதம் தை மாதம் போன்ற மாதங்களில் வெள்ளிக்கிழமைகளில் இந்த உச்சிகால பூஜையை காண்பதற்காக பக்தர்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மதுரை மானாமதுரை சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல் தூத்துக்குடி மேலும் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் பக்தர்கள் வருவார்கள்.

    மேலும் ஆடி கடைசி வெள்ளி என்பதால் உச்சி கால பூஜையில் மட்டும் சுமார் 20,000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டனர் இதற்காக சிவகங்கை மதுரை போன்ற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

     

  • August 12 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – உற்சாகம்
    ரிஷபம் –    போட்டி
    மிதுனம் –   சாந்தம்
    கடகம் –    ஓய்வு
    சிம்மம் –   ஆதாயம்
    கன்னி –    நட்பு
    துலாம் –     இழப்பு
    விருச்சிகம் – செலவு
    தனுசு –     கவலை
    மகரம் –    பெருமை
    கும்பம் –     எதிர்ப்பு
    மீனம் –       பயம்
    சந்திராஷ்டமம்    – விசாகம்

  • August 11 2023 aadi velli

    ஆகஸ்ட் 11 – ஆடி வெள்ளி
    சோபகிருது வருடம் – ஆடி 26
    11-ஆக-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி கா 9.5
    நட்சத்திரம் : ரோகிணி கா 8.27
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • August 10 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – அச்சம்
    ரிஷபம் –    சுகம்  
    மிதுனம் –   ஆக்கம்
    கடகம் –    சலனம்  
    சிம்மம் –   ஆர்வம்
    கன்னி –    சிரமம்   
    துலாம் –     ஊக்கம்
    விருச்சிகம் – நலம்
    தனுசு –     நிறைவு
    மகரம் –    இரக்கம்
    கும்பம் –     வெற்றி
    மீனம் –       புகழ்
    சந்திராஷ்டமம்    – சுவாதி

  • August 10 2023 Indrayanaal

    ஆகஸ்ட் 10 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆடி 25
    10-ஆக-2023 வியாழன்  
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30     
    திதி : தசமி     
    திதி நேரம் : நவமி கா 9.4
    நட்சத்திரம் : கார்த்திகை கா 7.44
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்.

     

  • Thiruthani murugan aadi kiruthigai kolagalam

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்  நேற்றைய முன் தினம் அஸ்வினி தொடங்கி நேற்று பரணி இன்று ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இன்று ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம் வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்றன  இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா தெலுங்கானா. கர்நாடகா. பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    காவடி சுமந்துவந்து மொட்டை அடித்து சரவண பொய்கை திருக்குளத்தில் நீராடி முருக கடவுளை வழிபடுவதற்கு திருக்கோயில் சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பக்தர்கள் காவடி செலுத்த தனி மண்டபம்  முடி காணிக்கை மற்றும் சிரமம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோயில அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் உஷாரவி மோகனன் சுரேஷ் பாபு, நாகன் துணை ஆணையர் விஜயாமற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்தனர்.

  • Thanga therii Palani Andavar

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தங்கத்தேரில் சுவாமி திருவீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து விழிபாடு செய்தனர்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  

    மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையம் ,படிப்பாதை , யானை பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று பொது தரிசன வழி, சிறப்பு கட்டண தரிசன வழிகளில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று இரவு ஏழு முப்பது மணியளவில் நடைபெற்ற தங்கத்தேரில் முருகப்பெருமானை காட்சி தந்தார் இதனை தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் ஆடி கிருத்திகை முன்னிட்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Sevai dhosham pookum aadi kiruthigai viradham

    தேவர்களை சிறைப்பிடித்து,மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை  பாலூட்டி போற்றி வளர்த்தார்கள்.

    அவனை சேர்த்து ஒன்றாக்கிய  உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார்.  மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு,அவனருளால்  குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.

    இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது

     கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

  • murugaperuman ugandha aadi kiruthigai

    முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்றவை மிகவும் முக்கியம் வாய்ந்த விழாக்களாக கருதப்படுகிறது.

    எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.  அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வீதிஉலா என விமரிசையாக நடைபெறும்.

    இது தேவர்களின் மாலை காலம். எனவே, இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருந்தால் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

    நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

  • Thiruthani vizha kolam

    முருகப்பெருமானின்  ஐந்தாம்படை வீடாக போற்றப்படும் திருத்தணி  அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பெற்ற ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா   நேற்று  ஆடி அஸ்வினியுடன்  தொடங்கியது.  ஐந்து நாட்கள் நடைபெற உள்ள   விழாவில் இரண்டாம் நாளான  இன்று ஆடி பரணி  யொட்டி மலைக் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதானை மற்றும்  அலங்காரம் செய்யப்பட்டு  தீபாராதணை நடைபெற்றது.

    தமிழகம்,ஆந்திரா,  உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்த  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  சரவண பொய்கை திருக்குளத்தில் நீராடி, காவடிகளுக்கு பூஜைகள் செய்து  மலையடிவாரத்திலிருந்து திருப்படிகள் வழியாக   காவடிகளுடன்  மலைக் கோயிலில் குவிந்து வருகின்றனர்.    

    பஜனை குழுக்கள் முருகன் பக்தி  பாடல்கள்  பாடிக்கொண்டும்  உற்சாகத்துடன் நடனமாடி   மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து காவடிகள் செலுத்தி முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.  மாட வீதியில் காவடி ஓசைகளும், அரோகர முழக்கங்களுடன் மலைக் கோயில்   கோலாகம் பூண்டு காணப்படுகின்றது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.