Blog

  • August 24 2023 Indrayanalla neram

    ஆகஸ்ட் 24 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆவணி 7
    24-ஆக-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி இ 10.23
    நட்சத்திரம் : அனுஷம் அ.கா 5.30
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • August 22 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் –    நலம்
    மிதுனம் –   பணிவு
    கடகம் –    பயம்
    சிம்மம் –   பரிசு
    கன்னி –    ஆசை
    துலாம் –     வாழ்வு
    விருச்சிகம் – பாராட்டு  
    தனுசு –     செலவு
    மகரம் –    தனம்  
    கும்பம் –     ஆர்வம்
    மீனம் –      தெளிவு
    சந்திராஷ்டமம்    – அஸ்வினி

  • August 23 2023 Vasthu naal

    ஆகஸ்ட் 23 – வாஸ்து நாள்
    சோபகிருது வருடம் – ஆவணி 6
    23-ஆக-2023 புதன்
    வாஸ்து நாள்(காலை 7.23 – 7.59)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 11.9
    நட்சத்திரம்: விசாகம் அ.கா 5.40
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • narashimmar abishegam

    உலக நன்மை வேண்டி புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற  16 அடி உயர லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 7 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற அபிஷேகம்.

    புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவில் வளாகத்தின் அருகே  அமைந்துள்ள  16 அடி உயர லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 7 மணி நேர தொடர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் 108 கிலோ சந்தனம், விபூதி மற்றும் 108 லிட்டர் தேன், தயிர், பால் மற்றும் கரும்புச்சாறு இளநீர் உட்பட பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு காலை 10 மணிக்கு துவங்கிய அபிஷேகம் மாலை 5 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து 7 மணி நேரம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் சகல விதமான நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அபிஷேகம் குறித்து ஆலய பீடாதிபதி நடத்துர் ஜனார்த்தன சுவாமிகள் கூறுகையில்: புதுச்சேரி விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலேயே உயரமான லட்சுமி நரசிம்மரின் சிலை இங்குதான் அமைந்துள்ளது. இங்கு அமையப்பெற்ற லட்சுமி நரசிம்மரின் சிறப்பு என்னவென்றால் 108  திவ்ய தேசங்களில் 54 திவ்ய தேசங்களுக்கு இங்கு அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் விஜயம் புரிந்து தற்போது இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்என்றும் சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் மகா அபிஷேகத்தை பக்தர்கள் நேரில் கண்டால் திருமண தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நோய் நொடிகள் நீங்கும் எனவே பக்தர்கள் அனைவரும் சுவாதி நட்சத்திர அபிஷேகத்தில் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்து லட்சுமி நரசிம்மரின் அருளைப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

  • koil prarthanai

    கோயிலில் சாமியிடம் வேண்டுவதாக இருந்தாலும், பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு முறை இருக்கிறது… அந்த முறைப்படி நாம் இறைவனிடம் வேண்டினால் கண்டிப்பாக அது நிறைவேற்றப்படும். அந்த முறைப்படி பரிகாரம் செய்தாலும் தெய்வம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

    கோவிலுக்கு சென்றால் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டு என்ற நிறைய பேர் சொல்லி நாம் கேட்டிருப்போம் ஆனால், நம்மில் எத்தனை பேர், இந்த முறையில் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டி உள்ளனர் என்பது தெரியாது.

    ஆனால் அடுத்தமுறை நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றாலும் அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்துடைய கோவிலுக்கு சென்று வேண்டினாலும் தெய்வத்தின் முன் முட்டி போட்டு உங்கள் பிராத்தனைகளை வையுங்கள்.

    நீங்கள் தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பு மண்டி போட்டு உங்கள் இரு கைகளையும் ஏந்தி உங்களுடைய பிரச்சனையை மற்றும் குறைகளை கடவுளிடம் சொல்லி வேண்டிய வரங்களை பெற்று கொள்ளுங்கள்.

    இப்படி முட்டி போட்டு வேண்டினால் தெய்வம் நாம் கேட்டதை உடனே கொடுக்கும் என சொல்லபடுகிறது. இப்படி நீங்கள் எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்றாலும் முழங்கால் போட்டு மண்டி இட்டு, உங்களின் இரு கைகளையும் ஏந்தி வேண்டுதல் வைக்கும் போது உங்களுடைய வேண்டுதலை சீக்கிரம் ஏற்றுக் கொள்ளும்.

    நீங்கள் நிறைய கோவில்களில் சிலர் தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்து முழங்கால் மண்டியிட்டு கோவிலை சுற்றி வளம் வருவார்கள் அல்லது கோவில் படி ஏறி, தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படி எல்லாம் கூட தெய்வத்திற்கு பிராத்தனை செய்யாலாம் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகிறது..

    தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பே மண்டியிட்டு தெய்வத்ததை முழு நம்பிக்கையோடு நினைத்து மனதார வேண்டிக் கொண்டாலே போதும். நீங்கள் நினைத்தது நிச்சயமாக ஒரு மண்டலத்தில் நடக்கும் அது நடக்கும்.

  • garuda mandiram

    அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம். கருட தரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டுமென்று கூறப்படுகிறது.

    கருட சேவை:

    பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருடவாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம். இதனை "ஆனை துயரம் தீரப்புள்ளூர்ந்து நின்றாழி தொட்டானை' என்கிறார் திருமங்கையாழ்வார்.

    கருட சேவையின் போது காக்க நீ வருவாயே கருடனேறி, என்று பக்தர்கள் பாடுவர். ஆசித் எனப்படும் சப்பரத்தின்மேல் சித் எனப்படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமானைச் சுமந்து வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருட சேவையாகும். கருட சேவையை பெரிய திருவடி சேவை என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோயில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருட சேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

    கருட வியூகம்:

    கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.

    கருட மந்திரம் :

    "குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
    விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'
    என்னும் கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.

    கருடாழ்வானின் பகவத் தொண்டு:

    ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான மூவரில் அனந்தன், விஷ்வக்சேனர்களுடன் கருடாழ்வானும் ஒருவன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான். அதுவே கருடாத்ரி என்பதாகும்.

    எம்பெருமான் திருக்கோயில்களில் கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமானைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும என்பது நெறிமுறையாகும்.

    கருடனும் அஹோபிலமும்:

    கருடன், அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப் போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுக்கோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார்.

    கருட புராணம்:

    ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகிறது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்.

  • Garuda Dharisanam palangal

    ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி, எனப் பலபெயர்கள் உண்டு.

    கச்சபர்-விநதை தம்பதிக்கு ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார் கருடன். இவருடைய அண்ணன் அருணன். இரண்டாவதாகப் பிறந்த கருடாழ்வார் மகாபலமும், சர்ப்பங்களை விழுங்கும் சக்தியும், அழகான முகமும், குவிந்த இறகுகளையும், உறுதியான நகங்களையும், சிறந்த கூர்மையான கண்களையும், பருத்த கழுத்தையும், குட்டையான கால்களையும், பெரிய தலையையும், உடையவன். எல்லா திசைகளிலும் வேகமாகப் பறக்கும் ஆற்றலைப் பெற்றவன். கருடனுக்கு ருத்ரை, சுகீர்த்தி என இரு மனைவிகள் உண்டு. மாற்றாந்தாயான கத்ருவிடம் அடிமைப்பட்டிருந்த தன் தாய் விநதையின் அடிமைத்தனத்தை, இந்திரலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டுவந்து போக்கினான் கருடன்.

    கருட வாகனமும் கருடக் கொடியும்:

    ஒரு சமயம் கருடன் இந்திரனுடன் போரிட்டபோது, திருமால் உபேந்திரனாக இருந்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். திருமால் கருடனின் கர்வத்தை அடக்கி, தனக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வரமளித்தார்.

    கருட தரிசனப்பலன்:

    கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நன்மையைத் தரும். பலன்களும் கிடைக்கும். அவை,

    ஞாயிறு நோய் நீங்கும்.

    திங்கள், செவ்வாய் – அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.

    புதன், வியாழன் – பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.

    வெள்ளி, சனி -ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.

     

  • August 21 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  பயம்
    ரிஷபம் –    வரவு
    மிதுனம் –   நன்மை
    கடகம் –    ஈகை
    சிம்மம் –   செலவு
    கன்னி –    ஆதாயம்  
    துலாம் –     நேர்மை
    விருச்சிகம் – அச்சம்
    தனுசு –     லாபம்
    மகரம் –    தாமதம்
    கும்பம் –     கவலை
    மீனம் –      சுகம்
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி

  • August 21 2023 Garuda panchami

    ஆகஸ்ட் 21 – கருட பஞ்சமி
    சோபகிருது வருடம் – ஆவணி 4
    சுபமுகூர்த்த நாள்
    21-ஆக-2023 திங்கள்
    கருட பஞ்சமி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 11.11
    நட்சத்திரம்: சித்திரை அ.கா 4.34
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Sri lakshmi narashimmar vazhipattu kurippugal

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பானகம் பிடித்தமானவையாகும். கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

    நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம். நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

    வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

    நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் மற்றும் மாமிசம் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

    நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

    நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.