Blog

  • Varalakshmi viradam home

    வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கலர் காகிதங்களால் கோவில் போன்று அம்மனை அலங்காரம் செய்து சுமங்கலி பெண்களை அழைத்து சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். போரூரை சேர்ந்த லட்சுமி என்பவர் வண்ண, வண்ண காகிதங்களை மாலையாகவும், அம்மனையும் அலங்கரித்து வண்ண,  வண்ண காகிதங்களை பூக்கள் போன்று வடிவமைத்து தோரணமாக தொங்கவிட்டு தனது வீட்டில் வரலட்சுமி நோன்பை கொண்டாடியுள்ளார்.

    இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து சிறப்பு பூஜைகள் செய்து அவர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக போரூரில் வசித்து வரும் நிலையில் மிகுந்த தெய்வ பக்தி உடைய இவர் வீட்டில் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் வண்ண, வண்ண காகிதங்களை அலங்கரிக்கும் வேலையை கற்று கொண்டு தற்போது வண்ண, வண்ண காகிதங்களால் அம்மனை செய்து அதற்கு ஏற்ப காகிதங்களாலேயே கோவில் போல் அலங்கரித்து வரலட்சுமி நோன்பு கொண்டாடியது அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • August 26 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  உறுதி
    ரிஷபம் –    பாராட்டு
    மிதுனம் –   உதவி
    கடகம் –    சிரமம்
    சிம்மம் –   ஊக்கம்
    கன்னி –    தனம்
    துலாம் –     பரிவு
    விருச்சிகம் – நிறைவு
    தனுசு –     ஓய்வு
    மகரம் –    பணிவு
    கும்பம் –     நேர்மை
    மீனம் –      பாசம்
    சந்திராஷ்டமம்    – ரோகிணி

  • August 26 2023 Indrayanaal

    ஆகஸ்ட் 26 – இன்றைய நல்லநேரம்…
    சோபகிருது வருடம் – ஆவணி 9
    26-ஆக-2023 சனி
    தென்காசி சிவன் தெப்பம்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 7.32
    நட்சத்திரம் : மூலம் ந.இ 3.54
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • August 25 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஆதாயம்
    ரிஷபம் –    நன்மை   
    மிதுனம் –   தெளிவு
    கடகம் –    தடங்கல்
    சிம்மம் –   இழப்பு
    கன்னி –    உதவி  
    துலாம் –     செலவு
    விருச்சிகம் – ஆசை
    தனுசு –     ஆர்வம்
    மகரம் –    பரிசு
    கும்பம் –     பயம்
    மீனம் –      உறுதி
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை

  • August 25 varalakshmi viradham

    ஆகஸ்ட் 25 – வரலட்சுமி விரதம்
    சோபகிருது வருடம் – ஆவணி 8
    25-ஆக-2023 வெள்ளி
    வரலெட்சுமி விரதம்,
    மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி இ 9.9
    நட்சத்திரம் : கேட்டை அ.கா 4.53
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • 16 perugalai alli tharum varalakshmi viradham

    ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகள் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள்.இதனால் மங்களமும் ,சௌபாக்கியமும் அடையலாம். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். சுமங்கலிப் பெண்களுக்கு, மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

    திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.வரலக்ஷ்மி பூஜையை முறைப்படி தவறாமல் செய்தால்  செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் அன்று, அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள்.

    இம்மாதம்  வெள்ளிக்கிழமை (25.08.2023) இந்த விரதத்தை பெண்கள் கொண்டாட உள்ள நிலையில்,லக்ஷ்மி தேவியின் வரலாற்றை பற்றி நாம் அறிந்துக்கொள்வோம். ஸ்ரீவைகுண்டத்தில், சவுந்தர்யமே வடிவான லட்சுமியின் அழகையும், கீர்த்தியையும் யாழிசைத்தபடி பாடிய  கந்தர்வப் பெண் ஒருத்திக்கு லட்சுமி, மனம் மகிழ்ந்து, தன் கூந்தலில் சூடியிருந்த நறுமணம் மிக்க மலர் சரத்தை  பரிசாக கொடுத்தாள். அதை பிரசாதமாக நினைத்த அந்தப் பெண், தன் யாழில் சுற்றிக் கொண்டாள். வானவெளியில் துர்வாசர் என்ற முனிவர் அவளைச் சந்தித்துப் பேசினார்.

     அப்போது அதுவரை உணராத நறுமணம் கமழவே, அதற்கான காரணத்தை அந்த பெண்ணிடம்  கேட்டார். லட்சுமி தனக்கு பிராசதமாக  தந்த சரத்தில் இருந்தே அந்த மணம் கமழ்வதாக சொன்னதோடு,“உங்களைப் போன்ற மகாமுனிவர்களே மகாலட்சுமியின் இந்த பிரசாதத்தை பெறத் தக்கவர்கள்…’ என்று அதை முனிவரிடம் கொடுத்தும் விட்டாள்.

     அதை சாட்சாத் மகாலட்சுமியே தனக்கு தந்ததாகக் கருதிய துர்வாசர், அந்த மலர்ச்சரத்துடன் வானவெளிக்கு சென்றார். அச்சமயம் ஐராவதம் எனும் யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்கு, மலர் பிரசாதத்தின் அருமையைக் கூறி, அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அவனோ  அதை அலட்சியமாக வாங்கி, யானையின் மத்தகத்தில் வைக்க , அதில் இருந்த வண்டுகள், யானையை மொய்க்கவே, அது எரிச்சலடைந்து மலரை இழுத்து போட்டு மிதித்தது.

     இதைக்கண்டு கோபமடைந்த துர்வாசர், “இந்திரா… உனக்கு கற்பக விருட்சம், காமதேனு,ஐராவதம் போன்ற கேட்பதைத் தருபவை இருப்பதால் தானே, லட்சுமி தாயாரின் தயவு தேவையில்லை என நினைத்து இவ்வாறு செய்தாய். அவை எதுவும் உனக்கு இல்லாமல் போகட்டும்…’ என்றார்.

    அவை, பாற்கடலில் சென்று மூழ்கி விட்டன. திருமாலின் பொறுமையை பரிசோதிப்பதற்காக, பிருகு மகரிஷி,  அவரது மார்பில் எட்டி உதைத்தார். இதனால், திருமாலின் மார்பில் வசித்த லட்சுமியும்,கோபத்தில்  பாற்கடலில் சென்று மறைந்தாள்.

     லட்சுமி கடாட்சத்தையும், செல்வத்தையும் இழந்த இந்திரன், மீண்டும் அதைப் பெறுவதற்காக பிரம்மனை வேண்டினான். அவர்கள் திருமாலின் உதவியை நாடி  பாற்கடலைக் கடைந்த போது, ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது. லட்சுமி தாயாரும் வெளிப்பட்டாள். அவள் வெளியே வரும் போதே, முத்துமாலைகள் அணிந்தும், கையில் மணமாலையை ஏந்தியும் காட்சி தந்தாள். நவரத்தினங்கள் இழைத்த பொற்கலசங்களில் தீர்த்தமேந்தி வந்த யானைகள் அவளுக்கு அபிஷேகம் செய்தன. பிரம்மா  பல ஆபரணங்களை வழங்கினார். சரஸ்வதி,நட்சத்திரங்களை மாலையாகக் கோர்த்து கொடுத்தாள். வானம் பட்டாடைகளை அளித்தது. வைஜெயந்தி என்ற மாலையை வருணன் அளித்தான். நாகலோகத்தினர் நெற்றிச் சுட்டியும், மகர குண்டலமும் அளித்தனர்.

     அவளுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பிரம்மா கூறவே, அவள் தன் கையில் இருந்த மணமாலையை திருமால் கழுத்தில் அணிவித்தாள்; வரலட்சுமி விரத நன்னாளில், லட்சுமியின் வரலாற்றைப் படித்து, பூஜை செய்பவர்கள் செல்வ வளம், மாங்கல்ய பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வர்.

  • varalakshmi 108 pottri

    வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

    சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி

    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி

    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி

    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி

    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி

    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி

    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி

    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி

    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி

    ஓம்  கமலக்கன்னி  போற்றி
    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி

    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே

    போற்றி போற்றி போற்றி

  • varalakshmi viradham vazhipadum murai

    சுமங்கலிகளுக்கான மிக முக்கியமான பண்டிகையாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொண்டாடப்படும் இப்பண்டிகை இந்த ஆண்டு ஆடி மாதம் வருவதே ஒரு அபூர்வம் தான். இந்த விரதம் மாமியார் தொடங்கிக் கொடுக்க மருமகள் தொடர்ந்து செய்வது வழக்கம். பின்னர் அந்த மருமகள் எடுத்துக் கொடுக்க அடுத்து வரும் மருமகள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அவரவர்களும் தனித்தனியே தாயார் திருமுகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் பூஜையில் வைத்த மஞ்சள் சரடைப் பூஜைக்காக இல்லம் வரும் அனைத்துப் பெண்களும் கட்டிக் கொள்வார்கள்.

    வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.

    சரி இப்போது வரலட்சுமி விரதம் வழிபடும் முறையை பற்றி பார்ப்போம்…..

    அழகிய தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்ப வேண்டும். பின்னர் இதன் மீது கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் கால் பங்கு அரிசியை நிரப்பி, காதோலைக் கருக மணி, கரும் புள்ளி இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழம், தங்கக் காசு, வெள்ளிக் காசு, சிறிய கண்ணாடி, மரச் சீப்பு, இரண்டு வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் அகன்ற வாய் பகுதியின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.

    அத்தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் தாயார் முகமாக வைக்கப்படும் திருமுகத்தை, தேங்காயின் குடுமிப் பகுதி மறையுமாறு செருக வேண்டும். தாயாருக்குப் பொட்டு இட்டு, அதில் ஜொலிக்கும் கற்களைப் பதிக்கலாம். பின் பகுதியில் பூச்சரமும், பூ ஜடையும் வைத்தால் அழகாக இருக்கும். தாயாருக்கும், கலசத்திற்குமாக அழகிய ஆடை அணிய வேண்டும். அழகிய முத்து மாலை உள்ளிட்ட நகைகளைத் தாயாருக்கு அணிவிக்க வேண்டும்.

    முதல் நாளான வியாழன் இரவே தாயார் தயாராகிவிடுவார். ஒரு வருடமாக பூஜை அறையில் பெட்டிக்குள் இந்தத் தாயார், கண் திறக்கும் நேரத்தில் உணவு படைக்க வேண்டும். முன்னதாக வெண்பொங்கல் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைத் தட்டில் வைத்து, தீபாராதனை, ஆரத்தி போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துவிட வேண்டும். புதிய கண் மை எடுத்துத் தாயார் திருமுக மண்டலத்தில், கண்களுக்கு இட வேண்டும். இதனையே தாயார் கண் திறத்தல் என்று சொல்வார்கள். பின்னர் தாயாருக்குப் படைத்த பிரசாதத்தையே நோன்பு நோற்கும் பெண் சாப்பிட வேண்டும்.

    மறுநாள் விடியற்காலை இந்தத் தாயாரை இல்லத்திற்குள் வருமாறு அழைக்க வேண்டும். பக்கத்திற்கு ஒருவராக இரு சுமங்கலிப் பெண்கள் அலங்கரித்து வைத்துள்ள தாயாரைத் தாம்பாளத்துடன் தூக்கி வந்து முன்னதாகத் தயாரிக்கப்பட்ட சிறிய மண்டபத்தினுள் வைக்க வேண்டும். அந்த மண்டபத்தின் இரு புறமும் வாழைக்கன்றுகளைக் கட்டி, மாவிலை, தென்னை இலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். மண்டபத்துக்கும் மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

    முதலில் விநாயகர் பூஜையைச் செய்துவிட்டு பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். நோன்புச் சரடுக்குத் தனியாகப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தபின்பு தாயாருக்குப் பருப்பு பாயாசம், தேங்காய், உளுந்துக் கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலைப் பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் நோன்புச் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் பூஜை, ஸ்ரீவரலட்சுமி பூஜை. தாயாரை வழிபட்டு தனம் பெற்று வாழ்வோம்.

  • mahabaleswarar koil 108 sangu poojai

    மஹாபலேஸ்வர சுவாமி திருக்கோவிலில் 108 சங்கு பூஜை…மலைக்கோவிலூரில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ மஹாபலேஸ்வர சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிறைவு நாளில் 108 சங்கு பூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ மஹாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். கடந்த பல வருடங்களாக இந்த கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்து வந்தது.

    இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோவிலை புனரமைக்க கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலை துறையின் உதவியோடு பொதுமக்களின் பங்களிப்போடு பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாட்கள் நடைபெற்ற இந்த மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று திருக்கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பூஜைகளும் நடைபெற்றது.

    இதே போல இந்த கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 108 சங்கு பூஜையும் அதனைத் தொடர்ந்து யாக வேள்வியும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் மண்டல பூஜையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • August 24 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  நலம்
    ரிஷபம் –    பாராட்டு  
    மிதுனம் –   ஆசை
    கடகம் –    பரிசு
    சிம்மம் –   செலவு
    கன்னி –    மேன்மை
    துலாம் –     ஆர்வம்
    விருச்சிகம் – உதவி
    தனுசு –     முயற்சி
    மகரம் –    உறுதி
    கும்பம் –     பக்தி
    மீனம் –      தடங்கல்
    சந்திராஷ்டமம்    – பரணி