Blog

  • August 30 2023 Aavani avittam

    ஆகஸ்ட் 30 – ஆவணி அவிட்டம்
    சோபகிருது வருடம் – ஆவணி 13
    பவுர்ணமி
    30-ஆக-2023 புதன்
    ஆவணி அவிட்டம்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : சதுர்த்தசி கா 10.45
    நட்சத்திரம் : அவிட்டம் இ 9.58
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • August 29 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஆக்கம்
    ரிஷபம் –    தனம்  
    மிதுனம் –   பக்தி
    கடகம் –    நிறைவு
    சிம்மம் –   உதவி
    கன்னி –    உறுதி
    துலாம் –     பாராட்டு  
    விருச்சிகம் – பணிவு
    தனுசு –     ஆர்வம்
    மகரம் –    தெளிவு
    கும்பம் –     போட்டி
    மீனம் –      வரவு
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்

  • August 29 2023 Oonam festival

    ஆகஸ்ட் 29 – ஓணம் பண்டிகை
    சோபகிருது வருடம் – ஆவணி 12
    29-ஆக-2023 செவ்வாய்
    ஓணம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி ம 1.10
    நட்சத்திரம் : திருவோணம் இ 11.35
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Kalyana pasupateeswara pradhosham

    கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.

    தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மூலவர் கல்யாண பசுபதீஸ்வரர் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, அதை தொடர்ச்சியாக பக்தர்கள் வழங்கிய பல்வேறு வண்ண மாலைகளால் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி சுவாமிக்கு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு சோடச உபச்சாரங்கள் நடைபெற்று பின்னர் பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

    கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • thirupathi poojai

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி பவித்ர மாலைகள் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்திர உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சம்பங்கி மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.  

    இதில் இரண்டாம் நாளான நாளை யாக சாலையில் வைக்கப்பட்ட பவித்திரம் மாலைகள் அனைத்தும் உற்சவருக்கும், மூலவருக்கும், கோயிலில் உள்ள இதர சன்னதியில் மூலவருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை மறுநாள் யாகம் பூர்னாவூதியுடன் பவித்திர உற்சவம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பவித்ர உற்சவத்தில் கோயில் பெரிய ஜீயர் ,சின்ன ஜீயர் ,செயல் அலுவலர் தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் லோகநாதம், வி.ஜி.ஒ.பாலிரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பவித்ர உற்சவம் நடத்துவதும் முக்கிய நோக்கம் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜைகளில் தெரிந்தோ தெரியாமலோ அர்ச்சகர்களால், பணியாளர்களால் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக இந்த பவித்ர உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை இந்த பவித்ர உற்சவம் நடத்தப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கைவிடப்பட்டது. பின்னர் 1962ஆம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் தவறாமல் பவித்திர உற்சவத்தை ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • August 28 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  பரிவு
    ரிஷபம் –    ஊக்கம்
    மிதுனம் –   ஆர்வம்
    கடகம் –    பயம்
    சிம்மம் –   பரிவு
    கன்னி –    தடை
    துலாம் –     உதவி
    விருச்சிகம் – செலவு
    தனுசு –     பக்தி
    மகரம் –    உயர்வு
    கும்பம் –     முயற்சி
    மீனம் –      பாசம்
    சந்திராஷ்டமம்    – மிருகஷீருஷம், திருவாதிரை

  • August 28 Pradhosham

    ஆகஸ்ட் 28 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – ஆவணி 11
    பிரதோஷம்
    28-ஆக-2023 திங்கள்
    விருதுநகர் சொக்கநாதர் தேர்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : துவாதசி ம 3.29
    நட்சத்திரம் : உத்திராடம் ந.இ 1.12
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்,திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • August 27 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  போட்டி
    ரிஷபம் –    அமைதி
    மிதுனம் –   களிப்பு
    கடகம் –    மகிழ்ச்சி
    சிம்மம் –   வெற்றி
    கன்னி –    உயர்வு
    துலாம் –     நேசம்
    விருச்சிகம் – பணிவு
    தனுசு –     சாதகம்
    மகரம் –    சோர்வு
    கும்பம் –     பக்தி
    மீனம் –      சினம்
    சந்திராஷ்டமம்    – மிருகஷீருஷம்

  • August 27 2023 Sarva egadasi

    ஆகஸ்ட் 27 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – ஆவணி 10
    27-ஆக-2023 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி மா 5.38
    நட்சத்திரம் : பூராடம் ந.இ 2.39
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Madurai meenatchi pattabishegam

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிவபெருமானின்  லீலைகளை எடுத்துக்கூறும் வகையிலான நாள்தோறும் ஒவ்வொரு லீலைகள் நடைபெற்று அதன் பின்னர் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றுவருகிறது.  

    இதையடுத்து  சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது , பொற்கிழி அளித்தது போன்ற சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் 7-ம் நாளான  காலை சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் எழுந்தருளி சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    இதையடுத்து  ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், கோவிலில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில்  நடைபெற்றது. அதில் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக கோவில் அதிகாரி சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம்வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்ரார்.

    இதை தொடர்ந்து இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறும் என்பது ஐதீகம். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.