ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர். கங்கை ஆற்றின் ஓரம் ஒரு முறை ஆதிசங்கரர் நின்று கொண்டிருக்கையில் கரையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்பதை காண்கிறார். தனது சீடனை “உடனே வா” என்று அழைக்கிறார்.
குருநாதர் அழைக்கிறாரே என்று எதை பற்றியும் கவலைப்படாது அப்படியே ஆற்றின் மீது கால் வைத்து நீர் மேல் நடக்க ஆரம்பித்துவிட்டார் பத்மபாதர்.
என்ன ஆச்சரியம் அவரது குருபக்திக்கு கட்டுப்பட்டு, கங்காதேவி அவர் ஒவ்வொரு முறை பாதத்தை எடுத்து வைக்கும்போதும் ஒரு தாமரை மலரை தோன்றச் செய்தாள். அதன் மீது நடந்து வந்துவிட்டார் பத்மபாதர்.
பிறகு தான் தெரிந்தது தான் தாமரை பூக்கள் மீது நடந்து வந்தது. “எல்லாம்…. குருநாதரின் மகிமை” என்று மெய்சிலிர்த்து ஆதி சங்கரரின் கால்களில் வீழ்ந்தார்.
அது முதல் தான் அவருக்கு ‘பத்மபாதர்’ என்று பெயர் ஏற்பட்டது.
மிக தீவிர நரசிம்ம பக்தரான இவருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. ஆவல் கடைசியில் வைராக்கியமானது. எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு எய்து காட்டில் கடும் தவமிருந்தார்.
ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்துகொள்கிறான்.
“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.
“என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”.
“அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.
“நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்”.
“நரசிம்மமா? அப்படின்னா என்ன?”
வேடன் புரியாது கேட்கிறான்.
“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”
“நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்!
இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். “இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிக்கொண்டார்.
வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான்.
மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது.
“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! கந்தா… அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.
இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு அர்பணிப்பு கண்டு அந்த ஸ்ரீமன் நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானார்.
“ஆகா! மாட்டிகிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான்.
வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றது.
நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான். “சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”.
பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பது தான் தெரிந்தது.
“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய் சிரித்தார்.
“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” வேடன் கூறுகிறான்.
அப்போது ஒரு அசரீரி கேட்டது. “பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான்.
என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய்.
தவிர ஆணவமும் கொண்டாய்….உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.
ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார். அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.
ஆதிசங்கரரின் வராலற்றில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது.
Blog
-
narashimar
-
thirupathy-temple
திருப்பதிக்கு போகிறவர்கள் முதலில் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத்தான்.இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது.
என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்றும், நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்றுசொல்வது போல் விளக்கம்.பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம்.
பின்பே பெருமாளைச் சேவிக்க செல்ல வேண்டும்.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருமலையில் 64 புண்ணியதீர்த்தங்கள் உள்ளன.இந்த தீர்த்தப்பகுதிகளில் தான் சீனிவாச பத்மாவதி கல்யாணத்தில் பங்கேற்ற விருந்தினருக்குத் தேவையான உணவு வகைகள் தயாரானதாக திருமலை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயில் அருகில்உள்ள சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் சோறும், பாபவிநாசத்தில் சாம்பாரும், ஆகாசகங்கையில் பாயாசமும், தும்புரு தீர்த்தங்களில் சித்ரா அன்னங்களும், குமார தீர்த்தத்தில் அவியல், பொரியல் வகைகளும் தயாராயின.இவை தவிர, கபில, பாண்டவ, பல்குண, சக்கர, பத்மஸரோவம் தீர்த்தங்களிலும் பல்வகை உணவுகள் தயார் செய்யப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.திருப்பதி சீனிவாசனை வளர்த்தவள் வகுளாதேவி. முற்பிறவியில் யசோதையாக இருந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியம் பெற்றவள்.
துவாபரயுகத்தில் அஷ்டமகிஷிகள் என்னும் எட்டுப்பெண்களைக் கண்ணன் திருமணம் செய்தார்.ஆனால், யசோதைக்கு ஒரு திருமணத்தையும் காணும் பேறு பெறவில்லை.அக்குறையைப் போக்க கலியுகத்தில் வகுளாதேவியாகப் பிறந்தாள் யசோதை.திருப்பதியில் நடந்த சீனிவாசக் கல்யாணத்தை கண்டுகளித்தாள்.வகுளாதேவி சந்நிதி, திருப்பதி கோயில் மடப்பள்ளியில் உள்ளது.இவளுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயரும் உண்டு.
இவளது மேற்பார்வையில் ஏழுமலையானுக்கு உணவு தயாராவதாக ஐதீகம்.உணவை முடித்து மகன் ஓய்வுக்குச் சென்ற பின், இரவில் மட்டும் இவளுக்கு நைவேத்யம் நடக்கும்.பிள்ளை சாப்பிடுவதற்காக, சமையல் பணியை சாப்பிடாமல் கூட மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.
ராமானுஜர் திருமலையின் புனிதம் கருதி காலால் நடக்க விரும்பாமல் தவழ்ந்தே மலையேறினார். வழியில் அவருடைய முழங்கால் முறிந்தது. அந்த இடமே முழங்கால் முறிச்சான் என்று அழைக்கப்படுகிறது. இதனை மோக்காலு மிட்டா என்று சொல்வர்.இந்த இடத்தில் ராமானுஜர் கோயில் உள்ளது.
மோக்காலு மிட்டாவைக் கடந்தால் ஏழுமலையில் ஒன்றான சேஷாத்ரியின் சிகரத்தை அடையலாம். சிறுவனாக இருந்தபோது, அன்னமய்யா என்னும் பக்தர் மலையேறி வந்த களைப்பில் மோக்காலுமிட்டாவில் மயங்கி விழுந்தார்.
அவரின் பசிதாகம் போக்க பத்மாவதி தாயாரே, பாமரப் பெண்ணாக வந்து மயக்கம் தெளிய நீரும், உணவும் கொடுத்ததாகச் சொல்வர்.இவர் திருப்பதி ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். -
flowers
பூக்களிலுமே அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக் களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
* அல்லிப்பூ – செல்வம் பெருகும்
* பூவரசம்பூ – உடல் நலம் சீராகும்
* வாடாமல்லி – மரண பயம் நீங்கும்
* மல்லிகை – குடும்ப அமைதி ஏற்படும்
* செம்பருத்தி – ஆன்ம பலம் கூடும்
* காசாம்பூ – நன்மைகள் அதிகரிக்கும்.
* அரளிப்பூ – கடன்கள் நீங்கும்
* அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை
* செம்பருத்தி – நோயற்ற வாழ்வு
* ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும்
* கொடி ரோஜா – குடும்ப ஒற்றுமை
* ரோஜா பூ – நினைத்தது நடக்கும்
* மரிக்கொழுந்து – குலதெய்வம் அருள்
* சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்
* நந்தியாவட்டை – மகப்பேறு உண்டாகும்
* சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது
* சங்குப்பூ (நீலம்) – விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
* மனோரஞ்சிதம் – தேவர்களின் அருள் கிட்டும்
* தாமரைப்பூ – செல்வம் பெருகும்
* நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம்
* முல்லை பூ – தொழில் வளர்ச்சி உண்டாகும்
* பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்
* தங்க அரளி (மஞ்சள் பூ) – கிரக தோஷம் நீங்கும்
* பவள மல்லி – இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும்.
பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுகள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது. மேலும் இறைவனுக்கு அர்ச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் போன்றவற்றை காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான.. ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி அதில் போட்டு மூடிவிடலாம்.
நம்மில் பலரும், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை, தங்களது வாகனங்களில் முன்பக்கம் கட்டுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இதனால் தீமைகள் உண்டாகக்கூடும்.
-
adhisayangal-niraindha-kallazhagar
தென் திருப்பதியாக விளங்கும் கள்ளழகர் திருக்கோவில்
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். இக்கோவில் திருமாஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் கருணை நிறைந்த கோவிலாகும். இக்கோவிலானது தனிச்சிறப்பும் பெருமையும் நிறைந்த ஸ்தலம் என்பதில் ஐயமில்லை.இந்தக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கி அருள்பாலித்து வருவது பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலாகும். இங்கு பக்தர்கள் சந்தனம் சாத்தும்படி செய்து தங்களது வேண்டுதலை நிறை வேற்று வார்கள். கள்ளழகர் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூமி தேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் பஞ்சாயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். இன்றளவும் இப்பகுதி விவசாயி கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் அடி வாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இரவு பகலாக எப்போதும் வழித்துக் கொண்டிருக்கும் புனித தீர்த்தமாகும்.
இந்த தீர்த்தமானது எங்கிருந்து வருகிறது என்று எவரும் அறிந்தது இல்லை. இத்தீர்த்தமானது பெருமாளின் சிலம்பில் இருந்து வெளியேறி வருவதால் சிலம்பாறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் நீராடிய பெருமை படைத்தது இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். ஆண்டிற்கு ஒருமுறை மதுரை வைகை ஆற்றில் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவார்.
உலக அளவில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் அன்று இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்டு தரிசனம் செய்வார்கள். மதுரை யில் இருந்து அழகர் கோயில் 21 கி.மீ தூரம் அழகர்மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள் ளது. இயற்கை எழிலும், பொழுது போக்கும் சிறந்த சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. தினமும் நம்நாட்டைச் சேர்ந்த வர்கள் தவிர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏராள மானோர் வந்து செல்கின்றனர்.
-
kallazhagar
தென் திருப்பதியாக விளங்கும் கள்ளழகர் திருக்கோவில்
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். இக்கோவில் திருமாஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் கருணை நிறைந்த கோவிலாகும். இக்கோவிலானது தனிச்சிறப்பும் பெருமையும் நிறைந்த ஸ்தலம் என்பதில் ஐயமில்லை.இந்தக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கி அருள்பாலித்து வருவது பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலாகும். இங்கு பக்தர்கள் சந்தனம் சாத்தும்படி செய்து தங்களது வேண்டுதலை நிறை வேற்று வார்கள். கள்ளழகர் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூமி தேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் பஞ்சாயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். இன்றளவும் இப்பகுதி விவசாயி கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் அடி வாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இரவு பகலாக எப்போதும் வழித்துக் கொண்டிருக்கும் புனித தீர்த்தமாகும்.
இந்த தீர்த்தமானது எங்கிருந்து வருகிறது என்று எவரும் அறிந்தது இல்லை. இத்தீர்த்தமானது பெருமாளின் சிலம்பில் இருந்து வெளியேறி வருவதால் சிலம்பாறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் நீராடிய பெருமை படைத்தது இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். ஆண்டிற்கு ஒருமுறை மதுரை வைகை ஆற்றில் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவார்.
உலக அளவில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் அன்று இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்டு தரிசனம் செய்வார்கள். மதுரை யில் இருந்து அழகர் கோயில் 21 கி.மீ தூரம் அழகர்மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள் ளது. இயற்கை எழிலும், பொழுது போக்கும் சிறந்த சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. தினமும் நம்நாட்டைச் சேர்ந்த வர்கள் தவிர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏராள மானோர் வந்து செல்கின்றனர்.
-
thirupathy-hundi
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3 கோடியே 22 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இது தவிர பிற மாநிலங்களில் இருந்தும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக நாள்தோறும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
22 ஆம்தேதி அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 717 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்துக்கு 20 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 16 மணி நேரம், மலைப்பாதை வழியாக திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் ரூ.300 டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணியதில் ரூ.3.22 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். -
thirupathy-poojai
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.
முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.
பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.அந்நேரத்தில் “”கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.
சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் “போக ஸ்ரீனிவாச மூர்த்தி” பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.
அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.
சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து “நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.
“விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.
திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும்.
ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).
ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.
பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்.
சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.
பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.
மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.
பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.
சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.
குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். தன்பிறகு தீபாராதனை நடக்கும்.
இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.
அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.
பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.
ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.
இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.
பூ கட்டுவதற்கு என “யமுனாதுறை” என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.
காலை 3.45 மணிக்கு “தோமாலை சேவை” ஆரம்பமாகும்.
சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.
பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.
அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.
இதை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த சேவை ராமானுஜர் காலத்தில், “தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.
பின்னர் தெலுங்கில் “தோமாலா சேவா என மாறிவிட்டது.
கொலுவு தர்பார்: ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.
இதற்காக உள்ள “கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி” விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.
இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.
ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.
பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.முதல்மணி :
அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.
மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு.
மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.
மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.இரண்டாவது மணி:
இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும்.
அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.
ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.சகஸ்ரநாம அர்ச்சனை:
கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.
இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும்.
நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.
இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள்.
சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு “அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர்.
இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும்.
காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.
சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.
இதற்கும் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம்.
அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.
ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.
அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு “சாலிம்பு என்று பெயர்.
மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.கல்யாண உற்சவம்:
திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது.
அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும்.
பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள்.
சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.
ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.ஊஞ்சல் சேவை:
மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை “டோலாத்ஸவம் என்பர்.
அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.
மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும். -
singapore-pm
சிங்கப்பூரில் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் இந்திய பாரம்பரிய உடையுடன் சிறப்பு விருந்தினர் பிரதமர் லீ சியென் லூங் உட்பட பல அமைச்சர்களும் சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
164 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
நாலரை மில்லியன் வெள்ளி செலவில் சில முக்கிய மேம்பாடுகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற குடகுழுக்கு விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ மற்றும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமூகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ, மூதாதையர் விட்டுச்சென்றதை ஒவ்வொரு தலைமுறையினரும் பராமரித்து, மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளூர் இந்து சமூகத்துக்கு பெருமாள் கோவில் ஒரு முக்கியமான இடம் என்றும், பக்தர்களின் தாராள நன்கொடையாலும் ஆலய நிர்வாகத்தின் தலைமைத்துவத்தாலும் இந்து சமூகத்தாலும் இந்த குடமுழுக்கு விழா சாத்தியமானது என்றார் லீ. -
nellaiappar-koil
நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை ஏப்ரல் 24-ந் தேதி தொடங்குகிறது. நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கிறது.
இதற்காக கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம், ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.
கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு உள்ளன. தரைதளம் அமைக்கும் பணி, கோவிலை சுத்தப்படுத்தும் பணி, கோவில் நுழைவுவாசலில் உள்ள குடவறை மண்டபத்தில் உள்ள மரசிற்பங்கள் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
ஏப்ரல் 24-ந் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கத்தின் அருகில் யாகசாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த யாகசாலையில் 82 யாகசாலை பீடங்களும், 82 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு வர்ணம் பூசும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் யாகசாலைகள் அலங்கரிக்கும் பணியும் நடந்து வருகிறது. விழாவில் தினமும் கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, நவகிரக ஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்டவைகள் நடக்கிறது.
24-ந் தேதி மாலை 5.30 மணிக்கு விக்னேசுவர பூஜை, யாகசாலைக்கு புனித நீர் கொண்டு வருதல், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. மறுநாள் காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை, மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜை, பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 26-ந் தேதி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் விசேஷ சாந்தி, 5-ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது.
27-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பரிவார மூர்த்திகளின் யாகசாலை பூர்ணாகுதி, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கோபுரம், விமானம், மூலவர் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று மதியம் 12 மணிக்கு நெல்லை பொருட்காட்சி திடலில் அன்னதானம் நடக்கிறது. -
seerapalli
தென்கைலாயம் என போற்றுதலுக்குரிய சிறந்த சிவ வழிபாடு ஆலயமாக மாநிலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள “சிராப்பள்ளி” என அழைக்கப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..
இந்த கொடியேற்ற திருநாளில் சிராப்பள்ளி தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய பாடல் நினைவுக்கு வருகிறது.
மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல், செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச், சுந்தம் மலர்கள் கடைமேலுடையார் விடையூரும், எந்தன் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே!கொடி உயர கோ உயரும்! கோ உயர மக்கள் குடி உயரும் என அன்றைய கால சான்றோர்கள் கூறுவது வழக்கம்.
ஒரு நாட்டின் வளம், நலம், செல்வம், ஆகிய அனைத்திற்கும் அந்நாடு சிறந்து விளங்குமானால் அந்த நாட்டை “கொடி நீதி வழுவாத ஆட்சி” என்பார்கள். அது போல இறைவனுக்கும் கொடி மிகவும் முக்கியமானது.பரம்பொருளாகிய “சிவபெருமானுக்கு இடபக்கொடியும்” சக்தி வடிவமாகிய “அம்பாளுக்கு சிம்மக்கொடியும்” விஷ்ணு வடிவமான “பெருமாளுக்கு கருடக்கொடியும்” அமைந்துள்ளது. இவற்றில் தனி அம்பாள் கோவில்களில் மட்டுமே தான் சிம்மக்கொடியேற்றப்படும். சிவாலயத்தில் உள்ள அம்பாளின் திருவிழா காலங்களில் ரிஷப கொடியேற்றப்படும்.
ஒரு ஆலயத்தின் திருவிழாவின் முதல் தொடக்க நாளில் கொடியேற்றம் நடைப்பெறுகிறது. கொடியேற்றப்பட்டு அன்று மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று. எட்டுதிக்கு என்ற அஷ்டதிக் பாலகர்களுக்கு பலியிட்டு தச கட்டு வைபவம் நடைப்பெறும்.
அப்படி செய்யும் பொழுது திருவிழா முடியும் வரை அந்த ஊரை காத்து திருவிழா நன்முறையில் நடைபெற நடக்கும் பூஜையாகும். ஒரு திருவிழாவில் கொடியேற்றம் என்பது மிகவும் முக்கியமானது நிகழ்வாகவே கோவில்களில் அமைக்கின்றது.