ஏப்ரல் 12 – சுபமுகூர்த்த நாள்
விளம்பி வருடம் – பங்குனி 29
12-ஏப்-2019 வெள்ளி
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 10.49
நட்சத்திரம் : திருவாதிரை கா 7.32
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
April 12 subamugurthanaal
-
April 11 Indraya Nalla Neram
ஏப்ரல் 11 – இன்றைய நல்ல நேரம்
விளம்பி வருடம் – பங்குனி 28
11-ஏப்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி ம 12.42
நட்சத்திரம் : மிருகசீரிடம் கா 8.37
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பெருமை
ரிஷபம் – உயர்வு
மிதுனம் – இரக்கம்
கடனம் – பரிவு
சிம்மம் – சோர்வு
கன்னி – விவேகம்
துலாம் – அச்சம்
விருச்சிகம் – நோய்
தனுசு – சினம்
மகரம் – பிரீதி
கும்பம் – தனம்
மீனம் – பொறாமை
சந்திராஷ்டமம் – மூலம் -
Thiruthani bramorchava kodiyetram
திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.
திருத்தணி கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினந்தோறும் காலை இரவு பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.
முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ இன்று காலை 6.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை மாத பிரம்மோற்சவயொட்டி இன்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதை தொடர்ந்து, தினமும், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, மாலை ஆகிய இருவேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.வரும், 16ம் தேதி தேர் திருவிழாவும், 17ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 19ம் தேதி உற்சவர் சண்முகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைபெறுகிறது.
-
Thirupathy ticket timing changed
திருப்பதியில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்களின் ஆதார் கார்டுகளை வைத்து நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் விதமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே பக்தர்கள் திருப்பதியில் உள்ள அரசு பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறை, திருப்பதி ரயில் நிலையம் பின்புறம் உள்ள இரண்டாவது சத்திரம், அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை மாற்றம் செய்யப்பட்ட நேரத்தில் இனி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
April 10 Indraya Nalla Neram
ஏப்ரல் 10 வசந்த பஞ்சமி
விளம்பி வருடம் – பங்குனி 27
சுபமுகூர்த்த நாள்
வசந்த பஞ்சமி
10-ஏப்-2019 புதன்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : பஞ்சமி ம 2.14
நட்சத்திரம் : ரோகிணி கா 9.18
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வரவு
ரிஷபம் – தாமதம்
மிதுனம் – செலவு
கடனம் – நோய்
சிம்மம் – வெற்றி
கன்னி – துன்பம்
துலாம் – நன்மை
விருச்சிகம் – அமைதி
தனுசு – பக்தி
மகரம் – பயம்
கும்பம் – கவலை
மீனம் – மேன்மை
சந்திராஷ்டமம் – கேட்டை
-
Kaala sarba dhosha parigarangal
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஷ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள் குறையும்.
கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய) நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். சும்மா பெயருக்காக சென்று வழிபடுவதைவிட வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று வழிபடுவது மிகவும் முக்கியம்.
சுவாதி நட்சத்திரத்தன்று, திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால், களத்திரதோஷம், புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.
திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும். இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.
ஒருவருக்கு பேய், பிசாசு தொல்லைகள் இருக்குமானால், அவரை திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.
-
Vasthu dhosham neenga
வீட்டில் ஓயாத பிரச்னையா… காரணம், வீட்டின் வாஸ்து தோஷமாக இருக்கலாம். கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது நம்பிக்கை. எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது. இதை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம். எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டியவை.
வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.
காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.