Author: சக்தி ஆன்லைன் டீம்

  • raghavendrar-kovilil-mahotsava-vizha

    திருக்காட்டுப்பள்ளி கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ராகவேந்திரரின் ஆராதனை விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் ராகவேந்திர சுவாமியின் ஆராதனை, கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது. விழாவில் அப்புராவ், பீமசந்திரன், பங்குனி உத்திர கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ராம.மகாதேவன், ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரன், ஜெயகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோல் திருக்காட்டுப்பள்ளி ராயர் அக்ரஹாரம் ராகவேந்திர சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவனத்தில் சுவாமிக்கு நேற்று முன்தினம் அபிஷேக, ஆராதனை நடந்தது.

    நேற்று காலை நடந்த மத்திய ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்து வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை நகரின் மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றின் தென்கரையில் வடக்குவாசல் அருகே மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் நேற்று முன்தினம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் 347வது ஆராதனை மகோத்சம் விழா துவங்கியது. இந்த விழா இன்று வரை நடக்கிறது.

  • amaravathiyil-oru-thirupathi

    ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் ரூ.150 கோடி செலவில் புதிய ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருமலையில் உள்ள கோவர்த்தன சத்திரம் அருகில் புதிய ஓய்வறைகளைக் கட்ட ரூ.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து துறையில் பணிபுரியும் அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கான மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் திருமலையில் உள்ள துரித உணவகங்கள், தேநீர் விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள் உள்ளிட்டவற்றில் உணவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்களை செப்பனியிடவும், வளர்ச்சி பணிகளுக்காகவும் ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • kuzhandhai-baakiyam-arulum-navaneetha-krishnan

    குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இக்கோவில் பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

    ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

    அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.

    சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா’ என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம்.. கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.

    நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது. 

  • sri-rangam-namperumal-nellalavu-kandarul

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி- புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நாளை(வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. 

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பவித்ரோத்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார். 

    அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். இதையடுத்து அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நாளை காலை 9.30 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். 

  • manobalam-tharum-hanuman-slogam

    ஹனுமந் நஞ்ஜனீஸூனோ மஹாபலபராக்ரம
    லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
    ஸம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய
    லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய 
    ஹனுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்திரம்

    ஆஞ்சநேயப் பெருமானே, அஞ்சனா தேவியின் புதல்வரே நமஸ்காரம். மிகுந்த பலத்தையும் எதிரிகளையும் எளிதாக வெல்லும் சக்தியைக் கொண்டவரே, நமஸ்காரம். தங்களது வாலாகிய அஸ்திரத்தைப் பிரயோகித்து, என் எதிரிகளின் மனங்களை வீழ்த்தி அவர்களை என்னுடன் நேசம் கொண்டவர்களாக மாற்றித் தாருங்கள். நினைத்த மாத்திரத்தில் கோரிய எல்லாவற்றையும் வழங்கி அருளும் ஆஞ்சநேயா நமஸ்காரம். உம்மை வணங்குபவரிடம் பேரன்பு கொண்டவரே நமஸ்காரம்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    ஆகஸ்ட் 29
    விளம்பி வருடம் – ஆவணி 13
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00 :
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை இ 8.41
    நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 6.46
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – லாபம்
    மிதுனம் – உதவி
    கடனம் – நற்செயல்
    சிம்மம் – ஆதாயம்
    கன்னி – நிம்மதி
    துலாம் – பேராசை
    விருச்சிகம் – சினம்
    தனுசு – சிக்கல்
    மகரம் – அசதி
    கும்பம் – லாபம்
    மீனம் – முயற்சி

  • thrunallaru-sani-bagavan-koil

    சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.

    திருநள்ளாறு

    சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய “போகமார்த்த பூண்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது. சமணர்களுக்கு எதிரான சம்பந்தரின் அனல் வாதத்தில், இந்தப் பதிகம் எழுதப்பட்டிருந்த சுவடிகள் மட்டும் கருகாமல் இருந்ததால் “பச்சைப் பதிகம்” என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறது. விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. விடங்க என்றால் ‘செதுக்கப்படாத மூர்த்தி’ என்று பொருள். ஏழு சுயம்புத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.

    தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    தேவர்களை மறுத்து நிடத நாட்டு மன்னன் நளனைக் கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தார்கள். எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து சேவகனாக மாறினான் நளன். பின்னர் இங்குள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான். அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது. சனிபகவானின் கருணையை எண்ணி நளராஜனே பலவிதமான பண்டிகைகளை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தான். இவன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம். நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும்.

  • periyakaandiyamman-kovilil-thiruvilakku-poojai

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிபட்டியில் பெரியகாண்டியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு  பூஜை நடந்தது. இதில் பித்தளையால் ஆன அன்னபூரணி அம்மன் சிலை மற்றும் பூஜைபொருட்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிளக்கு பூஜையின் சிறப்பு அம்சமாக 1008 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மழை வேண்டுதல், மாங்கல்யம் நீடித்திருத்தல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, உறவினர்கள் ஒற்றுமை, என வரம் கேட்டு குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு தூவி பெண்கள் பக்தியுடன் வழிபட்டனர்.  

    பின்பு அலங்காரம் செய்த ஸ்ரீ பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னதான பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பூஜையில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள நாகனூர், பொருந்தலூர், தோகைமலை, கல்லடை, கழுகூர், கூடலூர், கள்ளை, பாதிரிப்பட்டி,  ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • kan-noi-theerkum-kanudaya-nayagi

    ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

    ‘ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

    ‘பூணுமெழிற் காளி எதிர் பொருந்தவர் மெய் கண்ணில் காணவர முற்றமையால் கண்ணுடையாள்’ என்கிறது காளையார்கோயில் புராணம்.

    கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், ‘நேத்ராம்பிகா’ என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், ‘கண்ணாத்தாள்’ என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.

    சுயம்பு மூர்த்தியான அம்பிகையின் அருட்கடாட்சம் போல், விரிந்து பரவியிருக்கிறது திருக்கோயில்..

    திருக்கோயிலின் முன்பாக திருக்குளம்..சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடியதாக இருக்கிறது தேவியின் திருக்குளம். இது, சதுர அமைப்புடன், தூண்கள் உடையதாக விளங்குகிற சொக்கட்டான் மண்டபத்துக்கு வடபாகத்தில் அமைந்துள்ளது. இதுவே இத்திருக்கோயிலின் தீர்த்தம்..

    அன்னையின் அருட்சக்தி, இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக‌ ஐதீகம்.. கண் நோய்கள் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில் விட்டு கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை

  • boologanaatharuku-thirukalyaana-utsavam

    நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனும், பெருமாளும் ஒரே கோவிலில் எழுந்தருளி இருப்பது தனி சிறப்பாகும். இந்த கோவில் கும்பாபிஷேக 9-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 25-ந்தேதி மாலையில் பிரசன்ன வெங்கடாசலபதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுதர்சன யாகம் மற்றும் 108 கலசாபிஷேகம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பூலோக நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 2-ம் காலயாகசாலை பூஜையும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும் ஒரே இடத்தில் வைத்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதையொட்டி சாமிகளுக்கு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.