Author: சக்தி ஆன்லைன் டீம்

  • thirupathiyil-8-vagaiyaana-dharisanangal-rathhu

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் மூத்த குடிமக்கள் உள்பட 8 வகையான தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது திருப்பதியில் வரும் செப்டம்பர் 12 முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது.

    அந்த நாட்களில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள். இதனால் பிரம்மோற்சவ விழா நாட்களில் தேவஸ்தானம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், பரிந்துரை கடிதங்களுக்கு அளிக்கப்படும் தரிசனங்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனங்கள், ராணுவ வீரர்கள், என்.ஆர்.ஐ. வாசிகள் மற்றும் ஆர்ஜித சேவை தரிசனங்கள் உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளது.ஆதலால் இதனை கருத்தில் கெண்டு பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் 67,890 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,289 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று வைகுண்டத்தில் உள்ள 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத் திருந்தனர். அவர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேர ஒதுக்கீடு முறை பக்தர்களும் நடைபாதை மார்க்கத்தில் வந்த பக்தர்களும் 4 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

  • kaakum-kadavul-ganapathy-slogam

    தினசரி காலையில் விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் வேலையை ஆரம்பித்தால் எந்த தடங்களும் இல்லாமல் இனிதே நடந்தேறும்.

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

  • sugavaneswarar-kovil-thirupanigal-thodakkam

    சேலத்தில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 20 ஆண்டுகள் ஆகியும் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து சமய அறநிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுகவனேசுவரர் கோவிலில் ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் செலவில் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்த திருப்பணிகள் தொடக்க விழா மற்றும் பாலாலய நிகழ்ச்சி நேற்று காலை சுகவனேசுவரர் கோவிலில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. பின்னர் சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு 108 மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. முன்னதாக யாகம் நடத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், முருகன், அய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காலபைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த சாமிகளின் உருவம் வரையப்பட்டு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகள் அனைத்தும் மண்டபத்தில் பாதுகாப்பான அறையில் நெல்லால் மூடப்பட்டு அதன் மீது துணிகள் போர்த்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது

  • vinaayagaruku-ugandha-sangadahara-sathurthi

    சங்கடஹர சதுர்த்தி விரதம மாதத்துக்கு ஒருமுறை பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம். ‘ஹர’ என்றால் அழித்தல் என்று பொருள். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை ‘சங்கடஹர சதுர்த்தி’ விரதத்துக்கு உண்டு. விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், ‘சங்கடஹர சதுர்த்தி’ மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம். 

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று. இது, ‘மகா  சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது.  திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியமும் உண்டாகும். நாள்பட்ட  நோய்கள் குணமாகும். நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உண்டாகும். தோஷங்கள் நீங்கும்.

  • thiruchenduril-indru-aavani-thiruvizhaa-thodakkam

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பட்ட வீதி உலா நடந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

    இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டமானது 1-ம் படி, செப்பு ஸ்தலத்தார் கோபி அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து கோவிலில் சேர்ந்தது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கோவில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது, மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் வந்து சேர்கிறார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதிஉலா வந்து கோவிலில் சேர்கிறார்.

  • klrishna-jayanthi-special-rava-seedai

    கிருஷ்ண ஜெயந்திக்கு பலரது வீடுகளிலும் பலகாரங்களை செய்து, கிருஷ்ணனுக்கு படைப்பார்கள். அப்படி செய்யும் பலகாரங்களில் ரவா சீடையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்ததாம்.
    ரவா சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்….

    தேவையான பொருட்கள்:
    ரவை – 1/2 கப் பொட்டுக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் எள் – 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் – சிறிது (2 டீஸ்பூன்) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பௌலில் ரவை, பொட்டுக்கடலை மாவு, எள், சீரகப் பொடி, மிளகுத் தூள், வதக்கிய தேங்காய், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து அந்த மாவை சீடை அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு பேப்பரில் வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும். அதே சமயம் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெயானது சூடானதும், அதில் உருட்டி வைத்துள்ள சீடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா சீடை ரெடி!!!

  • krishna-jayanthi-vizha

    நெல்லை அருகே உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதி நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    மாலையில் கோபாலகிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண் பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இந்த பண்டங்கள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி 12 ஆயிரத்து 8 பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பானைகள், கலயங்களில் வண்ணம் பூசப்பட்டு கிருஷ்ணன், சிவன் மற்றும் சாமி படங்கள் வரையப்பட்டு வருகிறது.

  • thambathiyargalai-kaakum-melattur-vinayagar

    தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில், 18 கிலோமீட்டர் தொலைவில் திட்டையை அடுத்து அமைந்துள்ளது மெலட்டூர் விநாயகர் கோவில் குரு பரிகாரத் தலமான தென்குடி திட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்திக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற பெயர் வந்ததன் காரணம் சுவையானது. 1899ம் ஆண்டு உத்தரவாஹினியாக பாயும் காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மிதந்தபடி வந்தவர்தான் இந்தக் கோயிலில் அருள்புரியும் கணபதி. அதனால், இவருக்கு ‘மிதந்தீஸ்வரர்’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு! 

    தெற்குதிசை பார்த்தபடி கரை ஒதுங்கிய கணபதி விக்கிரகத்தை கண்டெடுத்த அன்பர் ஒருவர், அவருக்குக் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தார். விநாயகரின் இந்தத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறுகின்றனர். இவர் கழுத்தைச் சுற்றி ருத்ராட்ச மாலை ஒன்று அணி செய்கிறது. தெற்கு நோக்கி அமைந்துள்ள கோபுர வாயிலைப் பார்த்தபடி தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார் இந்த ஸித்திபுத்தி சமேத விநாயகர். தெற்கு பார்த்து அருள்வதால் இவருக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விநாயகரின் தனிக் கோயிலாகவே இருந்தாலும் சிவாலயம் போலவே நிர்மாணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவாலயத்தில் நடராஜப் பெருமான் இடம் பெற்றிருப்பார்; இந்தக் கோயிலில் நர்த்தன கணபதி அருள் புரிகின்றார்! அஸ்திர தேவரைப் போலவே சூலாயுதம் தாங்கிய சூலத்துறை கணபதியும் தரிசனம் அருள்கிறார். இவர்களுடன் ஸித்திபுத்தி சமேதராக, செப்புத் திருமேனியில் சிரித்தவண்ணம் காட்சியளிக்கிறார், ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர்.

    மூலவர் சக்தி சமேதராய் இருந்தபோதிலும், ஸித்தி புத்தி தேவியர்கள் சிலா ரூபமாக அல்லாமல் மூலவரின் பீடத்திலேயே மந்திர ஸ்வரூபத்தில் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளனர் என்பது தனிச்சிறப்பு. சிவசொரூபமாகவே விநாயகர் வீற்றிருப்பதால், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத வண்ணம், விநாயகப் பெருமானின் சந்நதிக்கு, இடப்புறத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் ஸ்ரீகும்ப சண்டிகேஸ்வரர். திருமணம் தடைபட்டு வருத்தமுற்றிருக்கும் பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தி விநாயகரிடம் வேண்டிக் கொண்டால், உடனே திருமணம் நடைபெறுவதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேபோல் தம்பதியரிடையே கருத்து வேற்றுமை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பல பிரச்னைகளையும் போக்கி மகிழ்ச்சியைத்தருகிறார் இக்கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர்.

  • indrayanaal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    ஆகஸ்ட் 30
    விளம்பி வருடம் – ஆவணி 14
    சுபமுகூர்த்த நாள்
    மகா சங்கடஹர சதுர்த்தி
    30-ஆக-2018 வியாழன்
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30 :
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி இ 8.41
    நட்சத்திரம் : ரேவதி இ 7.28
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – சிக்கல்
    மிதுனம் – பேராசை
    கடனம் – லாபம்
    சிம்மம் – முயற்சி
    கன்னி – வீம்பு
    துலாம் – வரவு
    விருச்சிகம் – சிந்தனை
    தனுசு – கோபம்
    மகரம் – வெற்றி
    கும்பம் – எதிர்ப்பு
    மீனம் – நற்செயல்

  • ragavendrar-koil-mahotsava-vizha

    திருக்காட்டுப்பள்ளி கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ராகவேந்திரரின் ஆராதனை விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் ராகவேந்திர சுவாமியின் ஆராதனை, கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது.

    விழாவில் அப்புராவ், பீமசந்திரன், பங்குனி உத்திர கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ராம.மகாதேவன், ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரன், ஜெயகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோல் திருக்காட்டுப்பள்ளி ராயர் அக்ரஹாரம் ராகவேந்திர சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவனத்தில் சுவாமிக்கு நேற்று முன்தினம் அபிஷேக, ஆராதனை நடந்தது.

    நேற்று காலை நடந்த மத்திய ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்து வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை நகரின் மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றின் தென்கரையில் வடக்குவாசல் அருகே மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் நேற்று முன்தினம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் 347வது ஆராதனை மகோத்சம் விழா துவங்கியது. இந்த விழா இன்று வரை நடக்கிறது.