Author: சக்தி ஆன்லைன் டீம்

  • mandaikadu-bhagavathi-koil

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு வெகுவிமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    விழாவில் நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.

    மதியம் 12 மணிக்கு பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் கேரள மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து கலந்து கொண்டு பானைகளில் பொங்கலிட்டு அம்மனை வழி பட்டனர்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 1
    விளம்பி வருடம் – ஆவணி 16
    01-செப்-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00 :
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி இ 7.09
    நட்சத்திரம் : பரணி இ 7.26
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சந்தேகம்
    ரிஷபம் – நன்மை
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – பேராசை
    சிம்மம் – பக்தி
    கன்னி – இரக்கம்
    துலாம் – வரவு
    விருச்சிகம் – சுபம்
    தனுசு – உற்சாகம்
    மகரம் – உழைப்பு
    கும்பம் – மறதி
    மீனம் – சிரமம்

  • krishnaruku-ugandha-slogam

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்திருநாளில் கிருஷ்ணருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறும். 

    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
    ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்

    எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குப வரே, சூரியனைப் போல பிரகாசிப்பவரே, பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்று பவரே, இனிமை யாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

  • aayargalaikaatha-kannan

    ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். இதை அறிந்த கிருஷ்ணர் இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடுத்து விட்டார். அவர்களுக்கு வாழ்வளிக்கும் பசுக்களுக்கும் மலைகளுக்கும் விழா எடுக்க வேண்டியது அவசியம் என்றார். எனவே, யாதவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படி கோவர்த்தனகிரி யாகத்தைத் தொடங்கினர். தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள்.

    பசுக்களையும் பூஜித்தனர். பின்பு, நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன. இவ்வாறு மலைக்கு ஆராதனை செய்தபோது, கிருஷ்ணன் ஒரு தேவரூபமாக அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து, யாதவர்கள் அருளிய நைவேத்தியங்களை எல்லாம் ஏற்று அமுது செய்து அருளினார். மலைச் சிகரத்தையும் அர்ச்சித்துப் பணிந்த பிறகு, யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆயர்பாடிக்கு திரும்பினர்.

    இவ்வாறு கிருஷ்ணர் இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்து அவனை அவமானப்படுத்தியதால், இந்திரன் கோபம் கொண்டு சர்வர்த்தகம் என்ற மேகக் கூட்டங்களை அழைத்து, ‘கிருஷ்ணன் வசித்து வரும் இடைச்சேரியில் பெருமழை பெய்வித்து, மாடுகளை எல்லாம் அழித்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டான்.இந்திரனின் கட்டளைக்கிணங்க மேகங்கள் யாவும் ஆயர்பாடி முற்றிலும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையையும் பெய்வித்தன. இதனால் பசுக்களும் கன்றுகளும் துன்பப்பட்டன. காற்றினாலும் கடுங்குளிரினாலும் நடுங்கின. 

    பெருமழை காரணமாக கோகுலத்தில் உள்ள அனைவரும் துன்பப்படுவதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘இந்த நிலைக்கு இந்திரனே காரணம். ஆதலால், கோகுலத்தைக் காப்பாற்றுவது அவசியம்‘ என்று மலையை பெயர்த்து எடுத்து, ஒரு குடையைப் போல் தாங்கிப் பிடித்தார். இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பாதுகாப்பு அளித்தார். அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.இந்திரன் தன் முயற்சி வீணானதைக் கண்டு மேகங்களின் செயல்களை நிறுத்தினான். மழை நின்றது. ஆயர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர். தேவேந்திரன் தன் தவறை உணர்ந்தான். மகா விஷ்ணுவே கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்தவன் தன் செயலுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான். தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் எப்போதும் கைவிட மாட்டார் என்பது இந்த நிகழ்வு மூலம் தெரிகிறது

  • sagala-selvangalai-arulum-mahalakshmi-slogam

    வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை மனமுருகிப் பாட வேண்டும்.

    நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், ஒவ்வொரு உருவத்தில் தேவிஸ்ரீ மகாலட்சுமி வடிவெடுத்து வருகிறாள். மகாலட்சுமி தேவியை இல்லத்தில் படையல் இட்டு மகிழ வைத்துத் தாயை அம்மா என்றழைப்பது போல அழைப்போம்.

    பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள்
    எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள்
    தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள்
    தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!

    நாற்கரத்து நாயகியாள் நாற்றிசையின் நல்வினையாள்
    கார்மேகம் போல் தனத்தைக் காத்திடவே பெய்திடுவாள் 
    நூற்புலவர் தம்முகத்தான் நூதனத்தின் ஒருவடிவாள்
    பாற்பணியும் அயிசுவரியப் பாவையளே போற்றியம்மா!

  • bagavathi-amman-kovilil-sumangali-poojai

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். அதுபோல், ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது.
    இந்த ஆண்டு பொங்கல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 11.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் உச்ச பூஜை, அன்னதானம், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது. தொடர்ந்து நாளை 1-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.

  • krishna-jayanthi-viradha-vazhipadu

    கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணனின் திருப்பாதங்களைப் பச்சரிக்கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்கின்றனர். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

    அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். கிராமங்களில் மாலை வேளையில் தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்த பிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்குவது சிறப்பு.

    பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.

    வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி, பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

  • iskon-temple-krishna-jayanthi

    நெல்லையில் உள்ள இஸ்கான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்கான் சார்பில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி நெல்லையில் இந்த ஆண்டு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நெல்லையில் ஞாயிற்றுக்கிழமையும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா நகர முறைப்படி திங்கள்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 9 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    தொடர்ந்து, செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9.30 மணி வரையும் கிருஷ்ண ஜெயந்தி பொது தரிசனம் நடைபெறும். கிருஷ்ண அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள், மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
    விழாவையொட்டி ஹரே கிருஷ்ண மந்திரம் சொல்வதற்கான ஜப மாலைகள் இலவச வழிகாட்டும் புத்தகங்களுடன் மலிவு விலையில் விநியோகிக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    ஆகஸ்ட் 31
    விளம்பி வருடம் – ஆவணி 15
    31-ஆகஸ்ட் -2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30 :
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 8.08
    நட்சத்திரம் : அசுவினி இ 7.41
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வரவு
    ரிஷபம் – முயற்சி
    மிதுனம் – நன்மை
    கடனம் – பக்தி
    சிம்மம் – மேன்மை
    கன்னி – பாராட்டு
    துலாம் – நலம்
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு – சினம்
    மகரம் – செலவு
    கும்பம் – பாசம்
    மீனம் – பணிவு

  • vaaganathil-selvorai-kaakum-vazhithunai-baaba

    சென்னை புற நகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ள வழித்துணை பாபா திருக்கோயில். நெடுந்தூரம் பயணம் செல்லும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பாகவும், பயணிகளின் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவும் துணை புரிவதால், இந்த ஆலயத்தில் உள்ள சாயிபாபா ‘வழித்துணை சாயிபாபா’ என்று அழைக்கப்படுகிறார்.

    ‘என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ என்றவர் சீரடி சாயிபாபா. அந்தக் கூற்றின்படி இந்த ஆலயத்தின் வழித்துணை சாயிபாபா உயிர்ப்புடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு கூட்டு பிரார்த்தனை கோபுரம் அமைந்துள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் தங்களது குறைகளை வரி வடிவத்தில் கடிதமாக, பிரார்த்தனை படிவமாக எழுதி பாபாவின் பிரார்த்தனை பெட்டியில் போட்டால், அது பாபாவால் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

    மேலும் குழந்தை இல்லாத தம்பதிகள் எலுமிச்சை பழத்தை பாபாவின் பாதங்களில் வைத்து பிரார்த்தித்து வந்தால், அதன் மூலம் குழந்தை வரமும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரமும் கிடைக்கும் என் கிறார்கள். அப்படி தங்களின் பிரார்த்தனை நிறைவேறி மகப்பேறு பெற்ற தம்பதியர், குழந்தையோடு இங்கு வந்து பாபாவின் பாதங்களில் குழந்தையை வைத்து ஆசிபெற்றுச் செல் கிறார்கள். தம்பதியினர் இடையே ஒற்றுமை இன்மை, கடன் பிரச்சினை, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், காரியத் தடைகள் அனைத்துக்கும் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் வழி கிடைக்கும்.

    இங்கு இந்துக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவதோடு, பிரதி மாத பவுர்ணமி தினத்தில் சத்திய நாராயண பூஜையும், பிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி, மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளான ரமலான், பக்ரீத் பண்டிகை நாட்களிலும் பாபாவிற்கு லுங்கியும் ஜிப்பாவும் அணிவித்து அழகுபார்பதோடு தினமும் திருக்குரானையும், பைபிளையும், சாயி சத் சரித்திரத்தையும் படித்து வருகிறார்கள்.