Author: சக்தி ஆன்லைன் டீம்

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 9
    09-செப்-2018 ஞாயிறு
    விளம்பி வருடம் – ஆவணி 24
    அமாவாசை
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30 :
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை இ 12.08
    நட்சத்திரம் : மகம் கா 8.38
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – புகழ்
    ரிஷபம் – இன்பம்
    மிதுனம் – உதவி
    கடனம் – பொறுமை
    சிம்மம் – பாராட்டு
    கன்னி – ஏமாற்றம்
    துலாம் – வெற்றி
    விருச்சிகம் – சோதனை
    தனுசு – அலைச்சல்
    மகரம் – மேன்மை
    கும்பம் – சுபம்
    மீனம் – நன்மை

  • 10-rich-temples

    பத்மநாப சுவாமி கோயில்
    பத்மநாப சுவாமி கோயில் விஷ்ணுவை கடவுளாக கொண்ட கோயில் பத்மநாப சுவாமி கோயில் ( திருவனந்தபுரம் ) , கேரளா . இந்திய கோயில்களில் முதல் செல்வந்த கோயில் பத்மநாப சுவாமி கோயில். இந்த கோயிலில் 6 ரகசிய அரை உள்ளது. ரகசியம் நிறைந்த இந்த அறைகளில் எண்ணிலடங்கா புதையல்கள் கொட்டி கிடகின்றன, இந்த 6 ரகசிய அறைகளில் 4 இல் ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது , ஆனால் மீதமுள்ள 2 அறைகளில் பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் தங்கம் வைடூரியம் போன்ற எண்ணற்ற செல்வங்கள் உள்ளன.

    திருப்பதி பாலாஜி கோயில்
    திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம் வெங்கடேஷ்வரரின் பழமையான புனிதமான கோயில் ஆகும். இது இந்து கடவுளான விஷ்ணுவின் ஒரு வடிவமாகும். திருப்பதி மலைகளின் ஏழாவது சிகரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது “ஏழுமலையான் கோயில்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 80,000 உள்ளது. பாலிவுட், விளையாட்டு மற்றும் வணிகத் தொழிற்துறையில் இருந்து பல புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு தடவையும் அவர்கள் வருகை தரும் போதும் பல கோடிகளை நன்கெடையாக கோவிலுக்கு செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 கோடியை நன்கொடையாக வருகிறது.

    சாய் பாபா கோவில்
    சாய் பாபா கோவில் இந்தியாவில் உள்ள மற்றொரு பிரபலமான யாத்ரீக ஸ்தலமாகும். சாய் பாபாவிற்கு தனி மதம் என்று எதுவும் இல்லாத காரணத்தால் அணைத்து மதத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து செல்வதை காணலாம். அவரது வாழ்க்கை முழுவதிலும் போதித்த ஒரே சொல் ‘கடவுள் ஒன்று’ என்று ,அதனை ‘சப்பா மாலிக் ஏக் ஹாய்’.அக்கோவிலில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 6 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 350 கோடி ரூபாய் நன்கொடையாக அங்கு வரும் பக்தர்களால் அளிக்கப்படுகிறது.

    வைஷ்ணவ தேவி கோவில்
    வைஷ்ணவ தேவி கோவில் காத்ரா, ஜம்மு காஷ்மீர் நகருக்கு அருகே உள்ளது. இக்கோவிலுக்கு இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள அம்மனின் ஆசிர்வாதத்தை பெற ஒன்றிணைகின்றனர். வட இந்தியாவில் உள்ள முக்கிய புனித தளங்களில் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது. இது இந்தியாவின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சன்னதிக்கு வருகை தருகின்றனர், பணம் செலுத்துகின்றனர். இக்கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக வருகின்ற வருமானத்தின் மதிப்பு ரூ. 500 கோடி ரூபாயாகும்.

    சித்தி விநாயகர் கோவில்
    சித்தி விநாயகர் கோவில் விநாயக பெருமானுக்கான ஒரு வழிபாட்டு தளமாகும். இக்கோவிலில் விநாயகர் ஒரு சிறு அறையில்தான் காட்சி தருகின்றார். பிரபலமான கோயில்களில் ஒன்றாக மும்பை சித்திவிநாயக் கோயில் ஆகும். கோயிலின் பொதுவான பார்வையாளர்களின் பட்டியலில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களாகும் அடங்குவர்.உள்ளூர் பார்வையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலுக்கு செல்கின்றனர். கணேஷ் மீது அணியப்படும் கிரிடமானது சுமார் 3.7 கிலோ தங்கத்தால் ஆனது இதனை கொல்கத்தாவில் உள்ள வணிக வியாபாரி ஒருவர் நன்கொடை அளித்துள்ளார். கோயிலின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 48 கோடி ரூபாயும் நிலையான வைப்பு நிதி ரூ. 125 கோடியாகும்.

    பொற்கோவில்
    பொற்கோவில் உலகின் மிக முக்கியமான சீக்கிய யாத்ரீக ஸ்தலம் ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப், அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள பொற் கோவில் குருத்வாரா என அழைக்கப்படுகிறது. இதன் பிரதான கோவில் கட்டிட சுவர்களில் மரத்தாலான பேனல்கள் மற்றும் விரிவான தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.’ஆதி கிரந்த்’ (குரு கிரந்த் சாஹிப்) தாங்கி நிற்கும் அடித்தளம் விலையுயர்ந்த கற்கள் மற்றும் வைரங்களால் நிரம்பியுள்ளது. குரு கிரந்த் சாஹிப்பின் சுற்றளவானது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் இங்கு சுமார் 35,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகைபுரிகின்றனர். இக்கோவிலானது வடகிழக்கு திசையிலமைந்த மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோயில்களுல் ஒன்று.

    சோம்நாத் கோவில்
    சோம்நாத் கோயிலின் சொத்துக்கள் ஒரு புதிராகவே இருந்தாலும், மிகவும் புகழ் பெட்ர பணக்கார கோவிலில் ஒன்றாகவே திகழ்கின்றது, நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. ‘சோம்நாத்’ என்ற பெயர், ‘சந்திர கடவுளின் காப்பாளர்’ என்று பொருள்படும், சிவபெருமானைக் குறிக்கும் இதன் கற்ப கிரகமானது முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.1,00,000 முதல் 5,00,000 பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். சோம்நாத் அறக்கட்டளையின் நிலசொத்துக்கள் ரூ .1,639.14 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இதுவும் இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.2012 ஆம் ஆண்டில், சூரத் மற்றும் மும்பையிலிருந்து வந்த இரண்டு வணிகர்கள், கோயிலுக்கு சுமார் 36 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

    மீனாட்சி அம்மன் கோவில்
    மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோயிலாகும்,இக்கோவில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.இதில் பார்வதி தேவி காட்சி புரிந்து மக்களுக்கு அருள் புரிகிறார்.இந்த கோவில் ஒரு நாளைக்கு 15,000 பக்தர்கள் வருகை புரிகின்றனர். வெள்ளிக்கிழமை 25,000 பேர் இங்கு கூடுகின்றனர். கோயிலில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. கோயிலுடன் தொடர்புடைய மிக முக்கியமான திருவிழா “மீனாட்சி திருக்கல்யாணம் “(மீனாட்சி தெய்வீக திருமணம்) ஆகும்.இது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மூன்றாவது பணக்கார கோவில்களில் ஒன்றாகும். வருடந்த மற்றும் மே மாதத்தில் 10 ஆவது நாள் மீனாட்சி திருக்கல்யாணம் திருவிழா கொண்டாடபடுகிறது. இத்திருவிழாவிற்கு சுமார் 1மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆறு கோடி 60 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வருகின்றது.இந்த கோவில் இரு தங்க விமனங்களும், 33,000 சிலைகளும் இருப்பது இக்கோவிலுக்கு சிறப்பை அளிக்கிறது.

    காசி விஸ்வநாத கோவில்
    காசி விஸ்வநாத கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது இது வாரனாசியில் அமைந்துள்ளது.இக்கோவிலின் மேற்கு கரையோரம் புனித நதியான கங்கை பாய்கிறது, இங்கமைந்துள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் விஸ்வநாதர் மிகவும் சத்தி வாய்ந்த கடவுளாக காட்சி தருகின்றார். கோயிலின் குறிப்பிடத்தக்க தூண்கள் மற்றும் கோபுரங்கள் தூய தங்கத்தால் செய்யப்பட்டவை.

    அமர்நாத் கோயில்
    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தென் காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சிவனின் புனித பனி லிங்கத்தை வழிபட மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். எந்த ஆடம்பரமான தூண்கள் மற்றும் கோபுரங்களும் இல்லாமலே மக்களின் மனதை தன்வசப்படுத்திய ஒரு தனிசிறப்பு வாய்ந்த யாத்ரீக தளமாகும் .ஒவ்வொரு வருடமும் ஐீலை மற்றும் ஆகஷ்ட் மாதங்களில் மக்கள் இந்த புனித பயணத்தை தொடங்குகின்றனர்.

  • kalathra-dhosham-padhippu-yarukku

    ஒருவரின் ஜாகத்தில் 7ம் வீடு பாதிப்படைந்தால் களத்திர தோஷம் ஏற்படுகிறது. இந்த அமைப்பை பெற்ற ஜாதகங்களில் 2ம் வீடும் சேர்ந்து பாதிப்படைந்தால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இதனால், திருமண வாழ்க்கை அமையாமல் ஜாதகர் சிரமப்படுவர். இந்த அமைப்பு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளமல் இருப்பது சிறந்தது.

    இல்லையெனில் களத்திர தோஷம் உள்ள ஆண்கள் (அதாவது 2 மற்றும் 7ம் பாவங்கள் பாதிப்படைந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களை) திருமணம் செய்து கொண்டால் களத்திர தோஷம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

    சுக்கிரன் களத்திரபாவாதிபதி ஆவார். அவர் சர்ப்ப கிரகங்களான ராகுவுடனோ, கேதுவுடனோ சேர்ந்திருந்தாலும், கன்னியில் நீச்சம் அடைந்திருந்தாலும், லக்னாதிபதிகள் ராகு, கேதுவுடன் இருப்பினும், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் சர்ப்ப கிரகங்கள் இருப்பினும், நீச்சம் பெற்ற ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் இணைந்திருந்தாலும், ஏழாம் அதிபதி நீச்சம் அடைந்திருந்தாலும், நீச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்து இருந்தாலும் களத்திர பாவம் பலம் இன்றி திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

    தோஷமில்லாத ஜாதகத்திலும் சனி – சந்திரன் கூட்டு ஏற்படும் போது தடையை ஏற்படுத்தி துன்பத்தை தருகிறது.

    இதனால், எந்த காரியத்தை துவங்கினாலும் தடை ஏற்படும். திருமண ஏற்பாடு முழுவதும் திடீரென்று நின்று விடுதல் அல்லது தள்ளிப்போதல், மணமகன், மணமகளை மாற்றும்படி அமைதல் போன்ற சிக்கல்கள் தோன்றும்.

  • thirupathy-calendar-dairy-sale

    திருமலை திருப்பதி தேவஸ்தான நாட்காட்டிகள், டைரிகள் ஆன் லைன் மூலம் விற்பனை செய்யப் பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் விற் பனையை வரும் 14ம் தேதி முதல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்க உள்ளார்.

    திருப்பதியில் வருடாந்திர பிரம் மோற்சவம் வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளதால், 12- ம் தேதி கோயிலில் ஆகம விதிகளின்படி அங்குரார்பணம் நடைபெறுகிறது. பின்னர், 13-ம் தேதி கொடியேற் றத்தை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரங்களை அரசு சார்பில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்க உள்ளார்.

    பின்னர் மறுநாள், 2019-ம் ஆண்டின் தேவஸ்தான நாட்காட்டி மற்றும் டைரிகளை கணினிமய மூலம் வெளியிட்டு விற்பனையை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள், நாட்காட்டிகள், டைரிகளை கணினிமய மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

  • thiruchendur-ther

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

    திருவிழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று சுவாமி குமரவிடங்கப் பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளி வீதி உலா வந்து பாளை சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் மேலக்கோயில் சேர்ந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்தி லும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    விநாயகர் தேர் இன்று காலை 5.35 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இதையடுத்து சுவாமி தேர் காலை 6.10 க்கு புறப்பட்டு 7.20 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. அம்மன் தேர் காலை 7.30 க்கு புறப்பட்டு 8 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேர்களை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

  • menmai-pera-pacchaiamman

    ஈசன் நிலை பெற்றவன். அவன் கண்ணசைவில் உலகம் நில்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாய் விளங்கும் ஈசனின் கண்களை வேடிக்கையாய் பொத்தினாள் அன்னை பார்வதி. ஒரு வினாடி உலகம் இருண்டது. சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்கள் அனைத்தும் இருண்டு ஒளி இழந்தன. உயிர்கள் அசைவற்று நின்றன. முத்தேவர்களும் இயக்கமற்று நின்றனர். இதனால் உலகமே ஸ்த்ம்பித்தது.

    நிலைமையை உணர்ந்த அன்னை பரமேஸ்வரிக்கு அச்சம் மேலீட்டால் வியர்வை மிகுந்தது. சிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தோன்றிய ஓர் ஒளிக் கீற்று அம்பாளின் கையிலிருந்து வழிந்த வியர்வையின் வழியாக ஊடுருவும் போது அழகில்லாத, கோர உருவோடு அதிக சக்தி, அதிக வீரம் ஆகியவற்றின் வெளிப்பாடாக ஓர் உருவம் தோன்றியது. சிவனின் உக்கிரமும், சக்தியின் வீரமும் கொண்ட அவன் உக்கிர வீரன் எனப்பட்டான். அவன் வீரமாபுரிப் பட்டினத்தை ஆண்டதுடன், மனிதர்களுக்கும், அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லல் விளைத்து வந்தான்.

    கணப்பொழுது ஈசனின் கண் பொத்தி உலகை இருள் அடையச் செய்ததனால் அம்பாளுக்கு சாயா தோஷம் பீடித்தது. இறைவனிடமே பரிகாரம் வேண்டினாள் பார்வதி.

    “தேவி, எதுவும் இவ்வுலகில் காரணமின்றி நடைபெறுவதில்லை. உலகம் இருண்டதும் அவ்வகையில் அடங்கும். நீ ஒரு கடமை கருதியே செயல் புரிந்து உள்ளாய். பாவக் கழுவாயாக இயற்கை நியதிப் படி நீ காசி சென்று அன்னபூரணியாக அன்னதானம் செய்து, பின்னர் வீரமாபுரிப் பட்டினம் சென்று தவம் செய். அவ்விடம் நீ செய்யப் போகும் செய்கையால் உன் புகழ் விளங்கி அப்பட்டினமும் உன் பெயர் விளங்க சிறப்புடன் திகழும்” என்றார்.

    பராசக்தி, காசியில் அன்னப்பூரணியாக அன்னதானம் முதலிய அறச்செயல்கள் பல புரிந்தபிறகு மரகதமணிப் பல்லக்கில் பச்சை ஒளி வீசி எழில்வடிவோடு அஷ்ட லட்சுமிகள் உடன் வர, அருந்ததி, தேவ மாதர்கள், கங்கை அம்மன், வேங்கை அம்மன், விநாயகர், முருகர், பூத கணங்கள் பரிவாரங்களுடன் புழுதிக் கிளம்ப வீரமாபுரிப் பட்டினம் நோக்கி வந்து பசுமைசூழ்ந்த பகுதியில் ஒரு பாறையின் மேல் வந்து நின்றாள் அம்மை.

    அவள் கிளம்பி வரும் போது ஏற்பட்ட புழுதி வீரமாபுரிப் பட்டினத்தின் மாட மாளிகை கூட கோபுரம் ஆகியவற்றைப் பாழ் படுத்தியதால் வெகுண்ட உக்கிரவீரன், அக்னிவீரன் உட்பட ஆறு வீரர்களை அனுப்பி அம்பாளை தொடர்ந்து செல்ல விடாமல் தடுத்து அழிக்கக் கூறினான்.

    அக்னி வீரன், அனியந்திரவீரன், தக்கபாதாளவீரன், தனதந்திரன், இக்கணவீரன், எழில்கணவீரன் ஆகியோர் வந்து முருகர், விநாயகரை தூக்கி வீசி கடும் யுத்தம் செய்தனர். அம்பாள் அண்ணன் திருமாலை துணைக்கழைத்தாள். அவரோ தன் தண்டத்தையும் மஞ்சள் நீரையும் அம்பாளிடம் தந்தார். மஞ்சள் நீரை தெளித்து நாராயண தண்டத்தால் ஆறு முறை பூமியில் தட்ட, செம்முனி, கருமுனி, முத்துமுனி, லாடமுனி, வேதமுனி, ஜடாமுனி என்னும் ஆறு முனிவர்கள் வந்து உக்கிர வீரனின் ஆட்களை வென்று கொன்றனர்.உக்கிரவீரன் தானே வெகுண்டு எழுந்து வந்து விண்ணிலும் மண்ணிலும் இருந்து மாயப்போர் புரிந்து அம்பாளின் படைகளை ஓட வைத்தான்.

    அம்பாள் மஞ்சள் நீர் தெளித்து நாராயண தண்டத்தால் தட்ட பூமி வெடித்து வாழ் முனி தோன்றி எதிர்படை அரக்கர்களைக் கொன்றார். வாழ்முனி மூன்று நாட்கள் போர் செய்து களைத்து போனதால், ஈசனை தியானித்து அவனை வெல்லும் வரம் பெற்று, தானே வந்து போர் செய்தாள்.

    ஏழாம் நாள் உக்கிர வீரனை தன் அம்புகளால் துளைத்தபோது, அவனது மனைவி வீராட்சி மாங்கல்யப் பிச்சை வேண்டவும், பச்சிலை தந்து குணம் ஆக்கினாள் அன்னை. உண்மை உணர்ந்த உக்கிர வீரன், அன்னை, ஆதி ஈஸ்வரனுடன் இவ்விடத்தில் இருந்து மக்கள் வேண்டுவதை அருள வேண்டும் எனவும், தான் ஏவலனாக இருந்து பணி செய்வதாகவும் வேண்டினான். அம்பாள் தவம் புரிந்த போது, எதிரில் ஏவலனாக உக்கிர வீரனும், வாழ்முனியும் தன் பரிவாரங்களுடன் காவல் காத்தனர். பின்னர் தன் தோஷம் நீங்கப்பெற்ற அன்னை சிவனை சேர்ந்தாள்.

    ஈசன், ஆதியில் முதன்முதலில் லிங்க வடிவில் வந்து நிலை பெற்ற, தலம் என்ற காரணப் பெயரொடு மன்னாதீஸ்வரன் எனப்படுகிறார். அன்னை பச்சையம்மனாக அருள்பாலிக்கிறாள். ஆடி ஐந்தாம் வெள்ளிக் கிழமை உக்கிர வீரனுடன் சண்டையிட்டு நிலைப்பெற்ற இடமே திருமுல்லைவாயில் ஆகும். அதனால் அனைத்து ஆடி, தை வெள்ளிக் கிழமைகளில் பச்சையம்மனை வழிபட்டு மேன்மையான வாழ்க்கையைப் பெறலாம். இத் திருக்கோவில், சென்னை – ஆவடி சாலையில் அம்பத்தூருக்கு அடுத்து உள்ளது.

  • thirupathy-dharshan-cancell

    திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் நடைபெறுகிறது.

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி செப்டம்பர் 11-ந் தேதி காலை 6.10-க்கு தொடங்கி 11 மணி வரை நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த நிலையத்திலிருந்து வெளியே உள்ள மகாதுவாரம் வரைக்கும் இந்த பணி நடைபெறும்.

    அன்று காலை 6.30 மணிக்கு நடக்கும் அஷ்டதல பாதபத்மாராதன சேவையும், வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படும். இதையடுத்து கோவில் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதனால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.

    பின்னர் கோவில் கதவுகள் திறக்கப்பட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு நண்பகல் 12 மணிக்கு நைவேத்தியம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 1 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பபடுகின்றனர்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 8
    விளம்பி வருடம் – ஆவணி 23
    சிவராத்திரி
    திருச்செந்தூர் முருகன் தேர்
    08-செப்-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00 :
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 2.16
    நட்சத்திரம் : ஆயில்யம் கா 10.08
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – பாராட்டு
    மிதுனம் – தனம்
    கடனம் – போட்டி
    சிம்மம் – கோபம்
    கன்னி – முயற்சி
    துலாம் – நன்மை
    விருச்சிகம் – நிறைவு
    தனுசு – வெற்றி
    மகரம் – பொறுமை
    கும்பம் – மறதி
    மீனம் – சுகம்

  • kuladeivam-poojai-avasiyam-enna

    குலதெய்வ பூஜை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அல்லது பங்காளிகள் ஒன்று கூடி நடத்துவது ஆகும். இது குடும்ப ஒற்றுமைக்கும் மிக பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த பூஜை ஒரு சில குடும்பங்களில் பகலில் நடத்துகிறார்கள் ஒரு சில குடும்பங்களில் இரவு முழுவதும் நடத்துகிறார்கள்.

    அது அந்த குலதெய்வத்தின் வழக்கபடி அமைகிறது. இந்த பூஜையின் அவசியம் என்ன என்றால் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் குலதெய்வம்.அதனை நாம் வணங்காமல் இருக்கலாமா. நீங்கள் சோதிடர்களிடம் சென்றால் குலதெய்வத்தை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகும் என்று கூறுவார்கள். நீங்கள் என்ன என்னமோ பரிகாரம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் பரிகாரம் எடுபடாது.

    எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது. ஒரு சில இடங்களில் குலதெய்வத்தை ஒருமுறை மட்டும் தான் கும்பிடுவார்கள் அதற்கு பிறகு அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் குலதெய்வத்தை ஒரு முறை தான் கும்பிட வேண்டும் என்று இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டு கும்பிடமாட்டார்கள் அவ்வாறு ஒன்றும் கிடையாது. தாராளமாக கும்பிடலாம். உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் ஒரு முறை சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

    உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீங்கள் வெளியூரில் இருந்தால் மாதம் ஒரு முறை சென்று வாருங்கள் அவ்வாறு சென்று வரமுடியவில்லை என்றால் அந்த கோவிலுக்கு ஒரு குறிபிட்ட தொகை அனுப்பி அங்கு உள்ளவர்களை சாமி கும்பிட்டு பிரசாதத்தை உங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் கும்பிடலாம் அவ்வாறு இல்லை என்றால் பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று செய்யலாம்.

    நாம் மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம் ஆனால் குலதெய்வத்திற்க்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும். நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் உங்கள் வீட்டு குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு எந்த தோஷம் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள் அது அனைத்து தோஷத்தையும் போக்க கூடியது. குலதெய்வ வழிபாடு தான் முதலில் அடுத்த பரிகாரங்கள் எல்லாம் பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள்.

  • varthaigaluku-vasai-padatha-sai-magathuvam

    சீரடி சாய்பாபாவின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ சிறப்பாக சொல்லி விட முடியும் என்று தோன்றவில்லை . கடலை கைகளால் அள்ளி விட முடியுமா? ஆம் அப்படி ஒரு மகத்தான உணர்வு தான் சாய் பாபாவின் சரிதத்தை சொல்லுவது . எங்கும் நிறை பேரறிவான அவரின் அருகாமையை அவரின் பக்தர்களால் மட்டுமே நன்றாக உணர முடியும் .

    சாய் பாபாவின் கருணை வெளிச்சம் ஒருவர் மீது பட்டால் மட்டுமே அவரை மனத்தால் வரிக்கவோ அல்லது அவரின் நாமத்தை ஜெபித்திடவோ முடியும். பூர்வ ஜென்ம புண்ணிய பலன் காரணமாக மட்டுமே சாயி நாமத்தை ஒருவரால் சொல்ல முடியும் . அவரைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு கடினமானதா என்ன …..? இல்லை , அதற்காக கடின யோகா பயிற்சியோ , மூச்சை அடக்கும் வித்தையையோ தெரிந்திருக்க வேண்டாம் . அவரிடம் பொறுமையும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதும் . அவருக்காக பொறுமையோடு காத்திருந்தவர்கள் தங்கள் வாழ் நாளில் பெற்ற புண்ணியங்கள் ஏராளம். அது இந்த பிறவிக்கும் இனி தொடர இருக்கும் ஏழேழு பிறவிக்குமான பலன்கள் தரும் . நம்பிக்கையோடு அவர் முன் நம் தலை தாழ்ந்தால் ,இந்த ஜென்மம் ஈடேற சாயி நமக்கு துணையாக நிற்பார் என்பதில் ஏதேனும் ஐயம் இருக்க முடியுமா ?

    பாபாவின் யோக நிலை

    பாபாவின் தெய்வீக தன்மையை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்கள் ஆனார்கள் . சத்குருவான பாபா மக்கள் மனதில் தெய்வமாகவும் , குருவாகவும் உயர்ந்து நின்றார் . இருப்பினும் அவர் சமாதி நிலை அடையும் வரை ஒரு யோகியைப் போலவே தான் வாழ்ந்து வந்தார் . அன்றாடம் தனது உணவுக்காக பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். அவரது பாதம் பட்ட தெருக்கள் புண்ணியம் செய்தன . அவருக்கு உணவளித்த பெண்கள் மகா பாக்கியசாலிகள் . உலகிற்கே தனது கருணையால் பசிப்பிணியை போக்கும் அந்த மகானின் குரல் கேட்டு அன்னம் அளித்த அன்னையர்கள் ஆசீர்வசிக்கப் பட்டவர்கள் அல்லவா . தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபா பசியோடு தன்னை நாடி வந்தவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பியதே இல்லை . எத்தனை பக்தர்கள் தன்னை நாடி வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. இதனால் அந்த கருணாமூர்தியை தேடி தாய்ப் பசுவை தேடி செல்லும் கன்றுக்களை போல் மக்கள் சீரடியை நோக்கி வரத் தொடங்கினர் .

    பாபாவிற்கு பகவத் கீதையும் தெரியும் …குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும் அறிவார் . இரண்டிலும் உள்ள சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து தேர்ந்த பண்டிதர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் . பாபாவிற்கு எம்மதமும் சம்மதம் .

    நீரிலே விளக்கேற்றிய அற்புதம்

    பாபா தான் எப்போது தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம் . அந்த விளக்குகளுக்கான எண்ணையை அந்த ஊர் இருந்த இரண்டு எண்ணெய் வியாபாரிகள் கொடுத்து வந்தனர். ஒருநாள் பாபாவின் சக்தியை சோதிக்க நினைத்த அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.அன்று பாபா எவ்வாறு விளக்குகளை ஏற்றப் போகிறார் என்று பார்க்க மசூதிக்கு சென்ற அவர்கள் ஒளிந்துகொண்டு பார்த்தார்கள் . பாபா விளக்குகளில் தண்ணீரை விட்டு திரி போட்டு ஏற்றுவதைப் பார்த்த அவர்கள் வெட்கி தலை குனிந்தார்கள் . பாபா நிகழ்த்திய இந்த அற்புதத்தால் அவர் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. தினந்தோறும் அவரின் அற்புதங்களைக் காண அந்த சீரடி கிராமம் தயாரானது .