Author: சக்தி ஆன்லைன் டீம்

  • maha-vishnuvuku-ugandha-purattasi

    புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.

    அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. கன்னி ராசியில் சூரியன் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    எமபயம் நீக்க வழிபாடு புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

  • puratasi-mangalya-patcham

    புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.

    அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்` என்பர்; “பட்சம்` என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    இந்த பட்சத்தில் வரும் பரணி, “மகாபரணி’ என்றும், அஷ்டமியை, “மத்யாஷ்டமி’ என்றும், திரயோ தசியை “கஜச்சாயை’ என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும்.

    மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 17
    விளம்பி வருடம் – புரட்டாசி 1
    அஷ்டமி
    17-செப்-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00 :
    திதி : சூன்ய
    திதி நேரம் : அஷ்டமி இ 8.56
    நட்சத்திரம் : கேட்டை கா 9.04
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – தடங்கல்
    மிதுனம் – நட்பு
    கடனம் – வரவு
    சிம்மம் – கவனம்
    கன்னி – அமைதி
    துலாம் – வீம்பு
    விருச்சிகம் – நன்மை
    தனுசு – போட்டி
    மகரம் – பரிசு
    கும்பம் – நஷ்டம்
    மீனம் – மகிழ்ச்சி

  • puratasi-kadaipidikum-viradhangal

    ஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

    துர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

    மகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    அமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

    ஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

    சஷ்டி-லலிதா விரதம் – புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

    கபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

    மகாளயபட்சம் – புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.

  • puratasi-month-sirappugal

    பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நாளைப் பிறக்கிறது. இது, தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். இது கன்னி ராசிக்குரிய மாதமாகும்.

    புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.

    இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.

  • sabari-malai-nadai-thirappu

    கேரளாவில் வெள்ளத்திற்கு பிறகு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பால் ஒட்டுமொத்த மாநிலமும் நிலைக்குலைந்தது. இந்நிலையில் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை கோயில் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியது. அதனைத் தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் நடைபெற்று தற்போது கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு மாறிவருகிறது.

    இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலையின் மேல்சாந்தி உன்னிகிருஷ்ண நம்பூதிரி நடையை திறந்து வைத்து நெய்விளக்கு ஏற்றினார்.

    இன்று முதல் தொடந்து 6 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக்கு பிறகு வரும் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்திற்கு பிறகு நடைபெறும் பூஜை என்பதாலும் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததாலும் பக்தர்களுக்கு பலவிதமான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பம்பை ஆற்றைக் கடக்கக்கூடாது, உணவு, குடிநீா் கொண்டு வரவேண்டும். காடுகளுக்குள் செல்லக் கூடாது. புதை குழிகள் இருப்பதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம் போர்டு விதித்துள்ளது.

  • simma-vaganathil-ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா 3-வது நாளில் ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை மலையப்ப சாமி சின்ன சே‌ஷ வாகனத்திலும் இரவு அம்ச வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாமி வேடம் அணிந்தும், பெண்கள் கோலாட்டம் நடனமாடியும் ஊர்வலம் முன்பு வந்தனர்.

    3-ம் நாளான இன்று காலை 9 மணிக்கு மலையப்ப சாமி சிம்ம வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு முத்து பல்லக்கு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நேற்று பக்தர்கள் ரூ.1 கோடியே 90 லட்சம் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

  • sabari-malai-nadai-thirappu

    சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை, நிலச்சரிவு காரணமாக ஒட்டுமொத்த மாநிலமும் நிலைக்குழைந்தது. இந்நிலையில் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் புரட்டாசி பூஜைக்கு சபரி மலை தயாராகி வருகிறது. நாளை மறுநாள் சபரிமலை திறக்கப்படும் நிலையில் அங்கு வரும் பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீா் கொண்டு வரவேண்டும். காடுகளுக்குள் செல்லக் கூடாது. புதை குழிகள் இருப்பதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம் போர்டு விதித்துள்ளது.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 16
    விளம்பி வருடம் – ஆவணி 31
    சபரிமலையில் இன்று முதல் 6 நாள் நடை திறப்பு
    16-செப்-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30 :
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 7.40
    நட்சத்திரம் : அனுஷம் கா 7.25
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – புகழ்
    ரிஷபம் – கீர்த்தி
    மிதுனம் – சுபம்
    கடனம் – நட்பு
    சிம்மம் – அன்பு
    கன்னி – சாந்தி
    துலாம் – வெற்றி
    விருச்சிகம் – வரவு
    தனுசு – சுகம்
    மகரம் – கோபம்
    கும்பம் – வீரம்
    மீனம் – திறமை

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 15
    விளம்பி வருடம் – ஆவணி 30
    சஷ்டி
    15-செப்-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00 :
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி மா 6.55
    நட்சத்திரம் : அனுஷம் முழுவதும் 0.00
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உயர்வு
    ரிஷபம் – சினம்
    மிதுனம் – அன்பு
    கடனம் – போட்டி
    சிம்மம் – ஜெயம்
    கன்னி – நன்மை
    துலாம் – பகை
    விருச்சிகம் – இன்பம்
    தனுசு – தீரம்
    மகரம் – பெருமை
    கும்பம் – மகிழ்ச்சி
    மீனம் – எதிர்ப்பு