Author: சக்தி ஆன்லைன் டீம்

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 19
    விளம்பி வருடம் – புரட்டாசி 3
    புதன்கிழமை
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00 :
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 12.28
    நட்சத்திரம் : பூராடம் ம 1.27
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அனுகூலம்
    ரிஷபம் – நன்மை
    மிதுனம் – பீடை
    கடனம் – மகிழ்ச்சி
    சிம்மம் – பொறுமை
    கன்னி – போட்டி
    துலாம் – பெருமை
    விருச்சிகம் – அன்பு
    தனுசு – திறமை
    மகரம் – தனம்
    கும்பம் – தாமதம்
    மீனம் – நற்செய்தி

  • gurupeyarchi-vizha

    மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார்.

    துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு அதாவது, விசாகம் 4-ம் பாதத்தில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

    குரு பெயர்ச்சி விழா தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றான திட்டை வசிஷ்டேஸ் வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

    தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

    இந்த கோவிலில் குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அடுத்தமாதம் 10-ந் தேதி லட்சார்ச்சனையும், 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பரிகார ஹோமமும் நடக்கிறது.

  • thirupathy-thanga-therottam-kolagalam

    திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6 ஆம் நாளான இன்று தங்கத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்ற. பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் தேரி பவனி வந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று இரவு கருட சேவை மிகவும் விசே‌ஷமாக நடந்தது. கருட வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளி வலம் வந்த ஏழுமலையானை மாட வீதிகளில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழாவான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார். வாகன சேவையின்போது பல்வேறு கலைக் குழுவினர் ஆட்டம், பாட்டத்துடன் பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.

    இதைத்தொடர்ந்து, இன்று மாலை தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நாச்சியார்களுடன் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வந்தார்.

    பிறகு, இரவு 8 மணிக்கு கஜ வாகனம் எனும் தங்க யானை வாகனத்தில் ஏழுமலையான பவனி வந்தார். பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையை தொடர்ந்து, தங்கத் தேரோட்டமும் மிகவும் விசே‌ஷம் என்பதால் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து இருந்தனர்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 18
    விளம்பி வருடம் – புரட்டாசி 2
    18-செப்-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30 :
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி இ 10.34
    நட்சத்திரம் : மூலம் கா 11.06
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சாந்தம்
    ரிஷபம் – தடங்கல்
    மிதுனம் – வெற்றி
    கடனம் – நட்பு
    சிம்மம் – கோபம்
    கன்னி – அச்சம்
    துலாம் – பெருமை
    விருச்சிகம் – சிரமம்
    தனுசு – சோதனை
    மகரம் – முயற்சி
    கும்பம் – அனுகூலம்
    மீனம் – புகழ்

  • aasai-vitozhiyungal

    வாழ்க்கையின் முழுமையான இன்பத்தை அடைய முதலில் பொருட்களின் மீதிருக்கும் ஆசையைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆசையே ஒருவரது நன்னடத்தையை சோதிக்கிறது.

    துவக்கத்தில் சிறியதாக இருக்கும் இந்த ஆசையே பேராசையாக மாறுகிறது. இதுவே, பல தவறுகளுக்கும் அடித்தளமாக அமைந்துவிடுகிறது. எனவே ஆசையில் இருந்து விடுபட்டு வாழுங்கள்.

    பொருளையும், செல்வத்தையும் ஒரு பொருட்டாகவே மதிக்காதிருங்கள். அவை உண்மையான இன்பம் எதையும் தந்துவிடாது. மாறாக அதிகமான துன்பங்களை மட்டுமே தரும்.

    பொருள் வைத்திருப்பவர்கள் தங்களது சுற்றத்தாராலும், ஏன் பிள்ளைகளாலும்கூட ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்கின்றனர். எனவே பொருளின் மீது ஆசை கொள்ளாதீர்கள்.

    – ஆதிசங்கரர்

  • nanmaigal-tharum-nava-thirupathy

    நவ திருப்பதிகள் என்றழைக்கப்படும் 9 வைணவ சேத்திரங்களும் நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை எனக் கருதி வழிபட்டு வருகின்றனர். 9 திருப்பதிகளிலும் உள்ள பெருமாளையே நவக்கிரகங்களாக கருதி வழிபடுகின்றனர்.

    சோழ நாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக பாண்டிய நாடான தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி சேத்திரங்களாகப் போற்றப்படுகின்றன. நவகிரகங்களில் தலைமை பதவி வகிக்கும் சூரியன் மகா விஷ்ணுவே ஆவார்.

    அவரை சூரிய நாராயணன் என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரப்பட்டம் பெற்ற சனி பகவானைத் தவிர மற்ற கோள்களெல்லாம் நெற்றியில் நாமம் திருமண் எனும் வைணவச் சின்னத்தை அணிந்திருப்பதிலிருந்து நவக்கிரகங்கள் வைணவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை உணர்கிறோம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஆலயங்களை திருவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி தேவர்பிரான் இரட்டை திருப்பதி அரவிந்தலோசனார் பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய வரிசைப்படி தரிசிக்கலாம்.

    நவதிருப்பதி அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யபெற்றவை. ஒவ்வொரு கோயில்களும் தனிச்சிறப்பு மிக்கவையாகும், திருவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாகும். 108 திவ்யதேசங்களில் இது 54வது திவ்யதேசமாகும். நெல்லை-திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டம் அமைந்துள்ளது. தங்கும் விடுதிகள் உள்ளன. 2வது திருப்பதியான நத்தம் விஜாசனப் பெருமாள் கோயில் 53வது திவ்யதேசமாகும்.

    இங்குள்ள அருள்மிகு யோக நரசிம்மருக்கு பிரதோஷ நேரங்களில் அனைத்து வகையான திருமஞ்சனங்களுடன் நீராஞ்சன வழிபாடு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காசினிவேந்த பெருமாள் கோயில் 52வது திவ்யதேசமாகும். சயனத்தில் இருக்கும் பெருமாளின் நாபியிலிருந்து புறப்படும் தாமரையின் தண்டு மலரோடு இணைந்து அதன் மீது பிரம்மன் அமர்ந்திருக்கும் கோலம் சுவரில் பொறிக்கப்பட்டிருப்பது இங்கு மட்டுமே.

    பிரகாரத்தில் வலம் வரும்போது பெருமாளின் தாமரைப் பாதங்களை வடக்கு வாயில் அருகே அமைந்துள்ள ஜன்னல் வழியாக தரிசிக்கலாம். 4ம் திருப்பதியான பெருங்குளம் கோயிலில் பெருமாள் மாயக்கூத்தராக அருள்புரிகிறார். பெருமாளுக்கு இணையாக ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி, கமலதேவி என நான்கு தாயார்கள் இருப்பது தனிச்சிறப்பு. சனிதோஷம் நீங்கி வாழ்வில் நலன்கள் பெறவும், திருமணத்தடை நீங்கவும் இத்தலத்தை தரிசிப்பது சிறந்தது.

    இரட்டை திருப்பதி தேவர்பிரான் திருக்கோயில் 5வது திருப்பதியாகும். இங்கு வழிபட்டால் ராகு தோஷத்தில் இருந்து விடுபடலாம். அனைத்து நலம், புத்திரசுகம் கிடைக்கும். மற்றொரு கோயிலான அரவிந்த லோசனார் கோயில் 6வது நவதிருப்பதி ஸ்தலமாகும். 56வது திவ்யதேசமாக அமைந்துள்ளது. கேது தோஷத்தில் இருந்து விடுபட தரிசிக்கவேண்டிய கோயில் இதுஆகும். தென்திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதர் கோயில் கருடன் சன்னதிக்கு நேரில் எதிரில் பெருமாள் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது.

    வேதம் ஓதும் சப்தங்களையும், விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும், சிறுபிள்ளைகள் விளையாடும் ஒலியையும் இப்பெருமாள் தினமும் கேட்க விரும்பியதால் இவ்வாறு அமைந்துள்ளதாக இத்தலம் பற்றிய பாடல்கள் மூலம் தெரியவருகிறது. நவ திருப்பதிகளில் 7வது ஸ்தலமாகும் இது. திருக்கோளூர் வைத்திமாநிதி பெருமாள் கோயில் நவ திருப்பதிகளில் 8வது திருப்பதியாகும். இழந்த செல்வத்தை திரும்பப்பெற இத்திருத்தலத்தை வழிபட்டுச் செல்வது சிறப்பாகும். ஆதிசேடன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (அளக்கப் பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே. அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில் நவதிருப்பதிகளில் 9வது திருப்பதியாகும். குரு தலமாகவும் உள்ளது.

    மரத்தால் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உடைய கல் நாதசுவரம் இக்கோயிலில் காணவேண்டிய அம்சமாகும். நம்மாழ்வார் சன்னதி விமானம் மூலவரான ஆதிநாதரின் விமானத்தைவிட உயரமானது. நவகிரகங்களின் தோஷங்களை போக்க நவதிருப்பதிகளுக்கும் சென்றுவருவது சிறப்பு என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை.

  • punnaiyam-tharum-purattasi-month

    ‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள்.

    இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான்.

    புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.

    புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

  • sree-appan-venkatesa-perumal

    சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு அடுத்த பழைய சீவரத்தில் உள்ளது ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில். செய்யாறு, பாலாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் ஆற்றங்கரையையொட்டியே இந்த ஆலயம் கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில், கையில் சங்கு, சக்கரம் இருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், திருவடியிலும் தாமரை புஷ்பம் இருப்பதால் பிரம்மரூபமாகவும் வெங்கடேச பெருமாள் காட்சி தருகிறார்.

    பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். நாச்சியார், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு தனிக்கோயில்கள் உண்டு. மேலும் தாயார் அலமேலு மங்கை, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் இங்கு உள்ளது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் வரலாற்று சிறப்புக்கும் உரியதாகும். முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை என்று தண்டன் தோட்டம் பட்டயம் கூறும் நந்திவர்ம பல்லவன் ஆண்ட காஞ்சியின் கிழக்கு திசையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகே இரு குன்றுகளுக்கு இடையே பாய்ந்தோடும் நதி, முப்புறமும் பச்சைப்பசேல் என திகழும் வயல்வெளிகள் என உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ள இயற்கை எழில் எல்லோரையும் மயங்க வைப்பதாகும்.

    தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.
    அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    அப்பன் வெங்கடேச பெருமாள் :
    பிறகு பெருமாளின் கட்டளைக்கு இணங்க தொண்டமான் சக்கரவர்த்தி திருமுக்கூடலுக்கு திரும்பி அப்பன் சீனிவாச பெருமாளை வணங்க வந்தார். அப்போது சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் வடிவமாக ஒன்று கலந்து ஓருருவில் காட்சி கொடுத்தார். அதை பார்த்த தொண்டமான் சக்கரவர்த்தி, அப்பன் வெங்கடேசா என்று பெருமாளை கட்டித்தழுவி கசிந்துருகி வேண்டினர்.
    அதனால் தான் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு பிருகு முனிவரின் தவத்திற்கு பெருமாள் காட்சி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

    ஒப்பிலியப்பன் போல் பெருமாளின் திருவடியில் பூமாதேவியும், மார்க்கண்டேயனும் இங்கு தவம் செய்கிறார்கள். திருப்பதி சீனிவாச பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரமும் இங்கு உள்ளது.
    இத்தலத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு உறையும் பெருமாள் மார்க்கண்டேயனுக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கு திருப்பதி சீனிவாச பெருமாளாகவும் காட்சி கொடுத்தார் என்பதே.

    கடன் தொல்லை தீர :
    இங்குள்ள ஆஞ்சநேயர் கர்ணகுண்டல ஆஞ்சநேயராகவும் திருக்கோலம் பூண்டுள்ளார். இவருக்கு வடமாலைக்கு பதிலாக தென்குழல் மாலை சாற்றப்படுகிறது. இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்பன் வெங்கடேசனை தொழுதாலும் கடன் சுமைகள் தீரும் என்பது ஐதீகம்.

    63 நாயன்மார்களில் ஒருவரான அப்பரும் (திருநாவுக்கரசர்) பழைய சீவர பெருமானை நெக்குருகி புகழ்ந்து பாடியுள்ளார். ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்று அப்பரால் அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
    இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம். சந்தன மரம் ஆகும்.

  • punnai-nallur-mariamman-car-festival

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத திருவிழா கடந்த மாதம் 8ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து 12ம் தேதி இரவு முத்து பல்லக்கு வீதியுலா நடந்தது. 14ம் தேதி முத்து பல்லக்கு விடையாற்றி விழா நடந்தது.

    இதைதொடர்ந்து நேற்று ஆவணிமாத கடைசி ஞாயிற்றுக்கிழமை விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.

    மூத்த இளவரசர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, இணை ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர்கள் மாதவன், சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தது. நாளை (18ம் தேதி) கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

  • purattasi-magimayai-vilakkum-kadhai

    பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.

    ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.

    பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.

    பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

    பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.