Author: சக்தி ஆன்லைன் டீம்

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 21
    விளம்பி வருடம் – புரட்டாசி 5
    திருவோணம்
    மதுரை தல்லாகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், நாட்டரசன் கோட்டை பெருமாள் தேர்
    21-செப்-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30 :
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி அ.கா 4.30
    நட்சத்திரம் : திருவோணம் மா 6.32
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சாந்தம்
    ரிஷபம் – போட்டி
    மிதுனம் – ஆர்வம்
    கடனம் – கவலை
    சிம்மம் – தடங்கல்
    கன்னி – சலனம்
    துலாம் – பகை
    விருச்சிகம் – ஆக்கம்
    தனுசு – பரிசு
    மகரம் – பயம்
    கும்பம் – தெளிவு
    மீனம் – உதவி

  • sivan-koyilil-mudhalil-yarai-kumbida-vendu

    கோயிலுக்கு செல்பவர்கள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

    நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

    சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

    சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

    விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

    இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

    பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

    கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

    விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

    சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

    ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

    மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

    நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

    நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

    பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

    பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

    நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

     

  • thirupathiyil-maha-therottam

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளில் மகா தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மகா ரதத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை கடந்த 17-ந் தேதி விமரிசையாக நடந்தது. கருட சேவையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டனர்.

    நேற்று முன்தினம் தங்க தேரோட்டம் நடந்தது. 7-ம் நாள் விழாவான நேற்று காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் ஏழு மலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான இன்று காலை மகா தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மகா ரதத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். மகா ரதத்தை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிந்திருந்தனர்.

    பெரிய ரதத்தை ஏராளமான பக்தர்கள், ‘கோவிந்தா… கோவிந்தா’ என விண்ணதிர பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் பவனி வந்து அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நாளை காலை கோவில் அருகேயுள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

  • silirka-vaikkum-ezhumalayan-ragasiyangal

    திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும்’ என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இதில் இருந்தே தமிழகத்துக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் உள்ள தொடர்பை அறியலாம். பண்டைய தமிழகத்தின் வடக்கு எல்லையே திருப்பதிதான் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரிந்து இருக்கும். இப்போது அது ஆந்திரத்தின் கையில் இருந்தாலும் நாட்டின் அனைத்து மாநில பக்தர்களையும் தன்பால் இழுக்கும் அபூர்வ சக்தி வாய்ந்தது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

    ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்கு தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவைகளை அறியும்போது நம்மை சிலிர்க்க வைக்கிறது. இதில் சிலா தோரணம் என்று அழைக்கப்படும் பாறைகளால் ஆன தோரண வாயில் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும், ஏழுமலையானின் சிலையும் ஒரே விதமானவை.

    இத்தகைய ஏழுமலையான் திருவுருவத்துக்கு பச்சை கற்பூரத்தால் திருநாமம் இடப்படுகிறது. இக்கற்பூரம் தொடர்ந்து பூசப்படும் பாறை வெடித்து விடும். ஆனால், ஏழுமலையானுக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் சார்த்தப்பட்டும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் எந்த சிலையிலும் சிற்பியின் உளிபட்ட அடையாளம் இருக்கும்.

    ஆனால், ஏழுமலையான் சிலையில் அப்படி எந்த அடையாளமும் இல்லை. மேலும் ஏழுமலையான் திருமேனியில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பளபளப்புடன் இயற்கையாய் அமைந்துள்ளன. ஏழுமலையான் மூலவர் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. 3000 அடி உயரத்தில் குளிர்ந்த சீதோஷ்ணத்தில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்து முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

    பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளை கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இக்கோயிலின் வழிபாட்டு முறைகள், உண்டியல் வசூல், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் வியப்பூட்டுபவை. மேலும் இந்த கோயிலின் மடப்பள்ளி மிக பெரியதாகும். அதேபோல் மூலவருக்கான உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டு பீதாம்பரமாகும்.

    இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு அதை அணிவிப்பதற்கு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும்தான் மேல்சாத்து வஸ்திரம் எனப்படும் இந்த வஸ்திரத்தை அணிவிப்பார்கள்.

    அதேபோல் உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் அணிவிக்க சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் அணிவிக்க 10 ஆண்டுகள் பக்தர்கள் காத்திருக்க வேண்டும். இதுதவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இருமுறை சாத்தப்படுகிறது. அத்துடன் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு கட்டணம் செலுத்தி விட்டு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    மூலவரின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீசில் வாசனை திரவியங்கள் வரவழைக்கப்பட்டு, தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன் கலந்து, 51 வட்டில் பாலாபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரியுடன் சேர்த்து புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. அலங்காரத்துக்காக ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள் பக்தர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சீனாவிலிருந்து சீன சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனை பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப்பெற்ற’ என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும்.

    சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை காட்டப்படும். பிறகு தென்கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணை பறிக்கும் அழகோடு இருப்பார்.

  • puratasi-viradhathin-sirappugal

    ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நொடியும் இறைவனை வழிபட ஏற்றது என்றாலும், புரட்டாசி மாதத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே விஷ்ணுவின் அருள் பெற உதவும் மாதமாக புரட்டாசி திகழ்கிறது. சனி பகவான் அவதரித்த்தும் இந்த புரட்டாசி மாதத்தில் தான். எனவே இந்த புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானின் உக்கிரம் தணிந்து, பெருமாளின் கடாட்சம் பெருகுகிறது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்விய தேசங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெருமாளின் முக்கியத் தலங்களில், பிரம்மோற்சவம் நடைபெறும். சிலர் தங்கள் குலதெய்வ வழிபாடுகளையும், புரட்டாசியில் செய்வர்.

    வீடுகளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில், வெங்கடாசலபதி உருவப்படம் வைத்து, விளக்கை ஏற்றி, வழிபட வேண்டும், துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பழம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வணங்க வேண்டும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபட வேண்டும். இதுவே புரட்டாசி விரதம் எனப்படும்.

    நவராத்திரி விரதம்

    நவராத்திரி மனிதனின் தேவைகளான கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை வேண்டி அவற்றின் சக்திகளான, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்றோரை வழிபட வேண்டும். மூன்று நாட்கள் வீரத்தை வேண்டி பராசக்தியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி மகாலட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வணங்க வேண்டும். நவராத்திரியில், துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து, ஒன்பதாம் நாள் நவமியில் அவனை வதம் செய்தாள் என்றும், அதற்கடுத்த நாள் தசமியில், தேவர்கள் பூஜை செய்து வணங்கியதால், அது விஜயதசமி எனவாயிற்று என்பது உண்டு.

    விரத முறை

    நவராத்திரி விரதத்துக்குத் தேவையான பொருள்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு, அன்று முதல், ஒரு வேளை உணவு உட்கொண்டு, பிரதமையில் பூஜையைத் தொடங்க வேண்டும். நவமி வரை பூஜையைத் தொடர வேண்டும். வீடுகளிலும், ஆலயங்களிலும் கொலு வைத்தல் வேண்டும். அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு, பிரதமை முதல் எட்டு நாள்கள் பகல் உணவின்றி, இரவு மட்டும், பூஜை முடிந்தவுடன், ஒரு வேளை பால், பழம் அல்லது பலகாரம் உட்கொள்ள வேண்டும். ஒன்பதாவது நாள் மகாநவமி அன்று, பட்டினியாய் விரதம் இருந்து, விஜயதசமியன்று, காலை விரதத்தை முடிக்க வேண்டும்.

    இவ்விரத நாள்களில், சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றை வழங்குவர். நவராத்திரி விரதத்தைப் போன்று, எளிமையானதும், பலனளிக்கக் கூடியதும், எதுவும் இல்லை. நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதாகும். கொலு என்பது பல படிகளைக் கொண்ட மேடை, ஒவ்வொரு மேடையிலும், பல விதமான பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்து அலங்கரிப்பதே கொலு.

    இவ்விரதத்தைத் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நவராத்திரியில், திருமகளைத் தொடர்ந்து வழிபடுவோருக்கு, தேவி சகல சௌபாக்கியங்களையும் நல்கி, முக்தியையும் அளிப்பாள் என்பது ஐதீகம்.

  • verum-kaiyudan-koiluku-selalama

    பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

    வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

    குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

    கோயிலில் சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.

    கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.

    பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.

    கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.

    கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

    பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 20
    விளம்பி வருடம் – புரட்டாசி 4
    ஏகாதசி, திருப்பதியில் தேர்
    20-செப்-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30 :
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி இ 2.28
    நட்சத்திரம் : உத்திராடம் ம 3.59
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – சோர்வு
    மிதுனம் – விவேகம்
    கடனம் – நட்பு
    சிம்மம் – பெருமை
    கன்னி – வீம்பு
    துலாம் – தாமதம்
    விருச்சிகம் – அனுகூலம்
    தனுசு – ஜெயம்
    மகரம் – போட்டி
    கும்பம் – மறதி
    மீனம் – ஆதரவு

  • venkatesa-suprpadam

    கௌசல்யா சுப்ரஜா ராம
    பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
    உத்திஷ்ட நர ஸார்தூல
    கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

    உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
    உத்திஷ்ட கருடத்வஜ
    உத்திஷ்ட கமலா காந்தா
    த்ரைலோக்யம் மங்களம் குரு

    மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
    வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
    ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
    ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

    தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
    பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
    விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
    விருஷ சைலநாத தயிதே தயாநிதே

    அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
    ஆகாச சிந்து கமலானி மனோகரானி
    ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
    சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

    பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
    த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
    பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
    சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

    ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
    பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
    ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
    சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

    உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
    பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
    புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
    சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

    தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
    காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
    பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
    சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

    ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
    ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
    நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
    சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

    யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
    கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
    ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
    சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

    பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
    ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
    பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
    சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

    ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
    ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
    ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
    ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

    ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
    ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
    த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
    ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

    ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
    நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
    ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
    ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
    பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
    நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
    ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
    நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
    ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
    சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
    கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
    ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
    மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

    ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
    தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
    ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
    தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
    ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
    வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
    ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
    காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
    கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
    சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
    திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
    த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
    திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

    பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
    சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
    ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
    தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

    பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
    சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
    தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
    ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
    சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
    வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
    ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

    இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
    யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
    தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
    பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே

    ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்தோத்திரம்

    கமலா குச சூசுக குங்குமதோ
    நியதாருணி தாதுல நீல தனோ
    கமலாயத லோசன லோக பதே
    விஜயீ-பவ வேங்கட சைல பதே

    ச-சதுர்முக சண்முக பஞ்ச முக
    பிரமுகாகில தைவத மௌலி மனே
    சரணாகத வத்சல சார நிதே
    பரிபாலயமாம் விருஷ சைல பதே!

    அதி வேல தயா தவ துர்விஷஹைர்
    அனு வேல க்ருதைர் அபராத சதை:
    பரிதம் த்வரிதம் வ்ருஷ சைல பதே!
    பரயா க்ருபயா பரிபாஹி ஹரே!

    அதி வேங்கட சைலம் உதாரம தேர்
    ஜன தாபி மதா திக, தான ரதாத்
    பர தேவ தயா, கதி தாந் நிகமை:
    கமலா தயிதாந் ந பரம் கலயே!

    கல வேணு ரவா, வச கோப வதூ
    சத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்!
    ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்
    வசுதேவ சுதாந் ந பரம் கலயே!!

    அபி ராம, குணா கர, தாசரதே!
    ஜக தேக தநுர் தர, தீர மதே
    ரகு நாயக, ராம, ரமேச, விபோ!
    வரதோ பவ! தேவ, தயா ஜலதே

    அவனி தனயா கமநீய கரம்
    ரஜநீ கர சாரு முக அம்-புருஹம்
    ரஜநீ சர ராஜ தமோ மிகிரம்
    மகநீயம் அகம் ரகுராம மயே

    கல வேணு ரவா, வச கோப வதூ
    சத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்!
    ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்
    வசுதேவ சுதாந் ந பரம் கலயே!!

    விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
    சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
    ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
    ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச

    அகம் தூர தஸ் தே பதாம்போஜ யுக்ம
    ப்ரணாம் இச்சய ஆகத்ய சேவாம் கரோமி
    சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் த்வம்
    ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச

    அக்ஞானினா மயா தோஷான்
    அ சேஷாந் விகிதாந் ஹரே
    க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம்
    சேஷ சைல சிகா மணே!

  • golden-nandhi-bagavan

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவான் மீது மாலை வெயில் பட்ட உடன் நந்தி தங்க நிறத்தில் மாறுகிறது. ரிஷபேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

    இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், சங்காபிஷேகம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, கோபூஜை, பிரதோஷம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.

    அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 3-ம் நாள் மாலை 5.40 மணி முதல் 6 மணி வரை நந்தி பகவான் மீது மாலை வெயில் பட்ட உடன் நந்தி தங்க நிறத்தில் மாறும்.

    இந்த கோயிலின் நந்தி தங்கநிறத்தில் காட்சியளிப்பதைக் காண பக்தர்கள் குவிகின்றனர். இந்தக் கோயில் நந்தி சிலை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் தங்க நிறத்தில் காட்சியளிப்பதைக் காணலாம்.

  • chandra-prabai-vaganathil-ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 7-வது நாளான இன்றிரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    செப்., 21ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒவ்வொரு நாளும், மலையப்ப சாமி வெவ்வேறு அலங்காரங்களில் மாடவீதிகளில் பவனிவந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    அந்தவகையில், பிரமோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று மாலை தங்கதேரில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து இரவு தங்க யானை வாகனத்தில் மாட வீதிகளில் மலையப்ப சாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிலையில் பிரமோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று, காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில், மாடவீதிகளில் உலா வந்தார். அதனைத் தொடர்ந்து இன்றிரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. இரவில் குதிரை வாகனத்தில் ஏழுமலையான் பவனி வருகிறார். நாளை மறுதினம் சக்கரத் தாழ்வார் தீர்த்த வாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.