Author: சக்தி ஆன்லைன் டீம்

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி


    அக்டோபர் 2
    காந்தி ஜெயந்தி
    விளம்பி வருடம் – புரட்டாசி 16
    அஷ்டமி
    02-அக்-2018 செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி இ 12.40
    நட்சத்திரம் : திருவாதிரை இ 11.00
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்


    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி
    ரிஷபம் – லாபம்
    மிதுனம் – முயற்சி
    கடனம் – உயர்வு
    சிம்மம் – நன்மை
    கன்னி – வரவு
    துலாம் – வெற்றி
    விருச்சிகம் – சுகம்
    தனுசு – பிரயாணம்
    மகரம் – பெருமை
    கும்பம் – நற்செயல்
    மீனம் – பாராட்டு

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 23
    விளம்பி வருடம் – புரட்டாசி 7
    23-செப்-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி கா 6.14
    நட்சத்திரம் : சதயம் இ 11.09
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சந்தாஷம்
    ரிஷபம் – பாராட்டு
    மிதுனம் – பரிசு
    கடனம் – இன்பம்
    சிம்மம் – துன்பம்
    கன்னி – ஆக்கம்
    துலாம் – ஆதாயம்
    விருச்சிகம் – கீர்த்தி
    தனுசு – வெற்றி
    மகரம் – உதவி
    கும்பம் – பேராசை
    மீனம் – வாழ்வு

  • guru-peyarchi-palangal-rishabam

    ரிஷபம்
    கவர்ச்சிகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருந்து கொண்டேயிருக்கும் என்னும் அளவுக்கு உறவினர்களை விட நண்பர்கள் வட்டம் உங்களுக்குப் பெரிதாயிருக்கும். எல்லாரையும் பற்றிய விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்களான நீங்கள், அவர்களின் குணாதிசயங்களையும் நன்றாக உணர்ந்தவர்களாகவே இருப்பீர்கள். எனவே உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் தூய்மையாகவே இருக்க வேண்டுமென விரும்புபவர் நீங்கள்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி – தைரிய ஸ்தானம் – லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    ராகு உங்களது ராசிக்கு தைரிய வீர்ய ஸ்தானத்திலும் – சனி அஷ்டம ஸ்தானத்திலும் – கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடலாரோக்யமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பச் சூழலில் இன்பகரமான மாற்றங்களைக் காண்பீர்கள். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியமும் கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை எளிதாகப் பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறைமுக வருமானங்களின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும் என்பதுடன் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கும் நாளும் உயர்ந்து வரும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீண்டகாலம் திட்டமிட்டு வந்தவர்களின் திட்டம் செயல்வடிவம் பெறும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்கள் இப்போது ஒரு நல்ல வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவப் பதவிகளைப் பெறக்கூடிய நிலை சிலருக்கு உண்டு.

    வியாபாரிகளுக்கு:
    முழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார ஸ்தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. எனவே தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களிடம் கடன் பாக்கிகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். இல்லையெனில் வசூல் செய்வது கடினம். சிலர் வணிக சங்கங்களில் பொறுப்பான பதவியை ஏற்க நேரும்.

    கலைத்துறையினருக்கு:
    புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்ககூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு. எல்லோரிடமும் அனுசரணையாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வத்ன் மூலம் உங்களுக்குரிய வாய்ப்புகளில் சில, பிற கலைஞர்களுக்குக் கை நழுவிப் போகாமல் காத்துகொள்ள முடியும் என்பது உங்கள் கவனத்தில் இருந்து வருவது அவசியம்.

    மாணவர்களுக்கு:
    படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு. அரசு வழங்கும் கல்விச் சலுகைகள் போன்றவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்கள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். இதன் காரணமாக உங்கள் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் மன உறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

    பெண்களுக்கு:
    வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி சிறு சச்சரவுகளைச் சமாளித்து அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுகச் சேமிப்புகள் மனநிறைவு தரும்.

    நட்சத்திரபலன்கள்
    கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்:
    இந்த குருப் பெயர்ச்சியில் புதிய, சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி அவர்களைத் திருப்தி படுத்துவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும். கோபத்தைக் கட்டுபடுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம். பொதுவாக உடல் நலத்தில் ஓரளவு அக்கறை செலுத்தி வருவது நல்லது. புதிய திட்டங்களைச் செயல் படுத்தும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நன்மை தரும்.

    ரோகிணி:
    இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும். குழப்பத்துக்கு இடங்கொடுக்காதீர்கள். அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளைச் சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களைச் சரியாகப் பரிசோதனைச் செய்து, வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும். பிற்காலத்தில் தொல்லை நேராமல் தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் திருப்திகரமான போக்கு தென்படும்.

    மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்:
    இந்த பெயர்ச்சியில் சகோதர வழியில் செலவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் கைகூடி வரும். இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து வரும். கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். மணமான பெண்கலில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படக்கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்பாராத ஊதிய உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்சனை நீங்கும். உறவினர் மற்றூம் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஐந்து முக மண் அகல் விளக்கு ஒன்று நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து ஏற்றவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வ்வாய், சுக்கிரன், குரு

    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி

    + முதலீடு அதிகரிக்கும் : – உடல்நலம் பாதிக்கும்

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Email: ramjothidar@gmail.com
    போன்: 7845 11 9542
  • guru-peyarchi-palangal-midhunam

    மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

    பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர்களான நீங்கள் பார்வைக்குத் தான் அப்படியே தவிர, மற்றபடி அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான். தேவையான நேரத்தில் அவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி பிறரை வியப்படையச் செய்வீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகித் தவிப்பதைத் தவிர்த்தால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிட வாய்ப்புண்டு. மற்றவர்களிடம் கை நீட்டி நின்று சேவகம் புரியும் அவசியம் இல்லாமல் பலரையும் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கும் அமைப்புடையவர்கள் நீங்கள். சுயமாகத் தொழிலோ, வியாபாரமோ செய்வதிலும், மற்றவர்கள் பலரையும் அனுசரித்துப் போவதிலும், விருப்பம் மிகக்கொண்ட உங்களுக்கு, இந்த குருப் பெயர்ச்சி பலனைப் பார்ப்போம்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம் – தொழில் ஸ்தானம் – விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    ராகு உங்களது ராசிக்கு தனவாக்கு குடும ஸ்தானத்திலும் – சனி சப்தம ஸ்தானத்திலும் – கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். வெளிநாடுகளுக்கு உத்தியோகம், கல்வி ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆக அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

    உத்தியோகஸ்தர்களுக்கு
    உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது. சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும், புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம். சக பணியாளர்களிடம் பணிவாகவும் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் பெரும்பாலான சங்கடங்களைத் தவிர்க்கலாம். உடல் நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.

    வியாபாரிகளுக்கு
    உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம். வேலையாள்களின் நடாவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரையங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

    கலைத்துறையினருக்கு
    புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம். உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள். இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் நற்பெயர் கிட்டும்.

    மாணவர்களுக்கு
    விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும். விளையாடும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.

    அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பெயர்ச்சியாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள்.

    பெண்களுக்கு எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.

    நட்சத்திரப் பலன்கள்:
    மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.

    திருவாதிரை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும். நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

    புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்: குருப் பெயர்ச்சியின் மூலமாக உத்தியோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.

    பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி பெரிய தேங்காயை உடைத்து, தேங்காயில் நெய் விளக்கு ஏற்றவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்

    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

    + குடும்பத்தில் சந்தோஷம் : – தொழிலில் சுணக்கம்

     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Email: ramjothidar@gmail.com
    போன்: 7845 11 9542
  • guru-peyarchi-palangal-kadagam

    புனர்பூசம் 4 – ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

    கற்பனை வளம் மிக்கவர்களாகிய நீங்கள் எழத்துத்துறையில் பிரகாசமான வாய்ப்புகளைப் பெறக் கூடியவர்கள் என்பதால் உங்கள் படைப்புகளை வெளியிட்டோ, திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர் போன்ற வாய்ப்புகளை பெற்றோ பிரபலமும்புகழும் அடைவீர்கள். இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சில நேரங்களில் குழபத்துக்கு ஆட்பட்டு அல்லல் படுவது உங்களிடம் அமைந்துள்ள பெரும் குறை. எதிலும் சிந்தித்து முடிவெடுத்து அதன் படி திட்டமிட்டுச் செயல்படுவதால் வெற்றி காண முடியும் என்பதை நீங்கள்புரிந்து கொண்டு அதன் படி நடந்து கொண்டால் வேதனைக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு வெற்றிப்புன்னகை புரியலாம்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி – பாக்கிய ஸ்தானம் – லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    ராகு உங்களது ராசியில் – சனி ரண ருண ரோக ஸ்தானத்திலும் – கேது சப்தம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மற்றபடி புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சூழும். அதேநேரம் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் தோல்வியைச் சந்திப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உங்கள் அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையாலம். உங்கள் பணிகளில் நீங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவது அவசியம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பெரும் சிக்கல்கள் இராதென்ற நிலையில் தனியார் துறையில் பணிபுரிவர்களுக்குப் பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு பிறகு நிவர்த்தியாகும். சக பணியாளர்களுடன் சுமூகமாகநடந்து கொள்வது அவசியம். அதனால் உங்கள் பணிப்பளுவையும் குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பாராத இடமாற்றங்களால் சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க நேரலாம் நேரலாம். உடல்நலத்திலும் அடிக்கடி சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

    வியாபாரிகளுக்கு:
    வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு உங்களுக்கு இருந்து வரும் வகையில் நீங்கள் செயல்படுவது முதல் தேவையாகும். கொள்முதல் செய்யும் போது தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்வது மிக அவசியம். அதே போல தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வதே சிறப்பாகும். ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்க வேண்டுமென்பதற்காக வாங்கி அதிக அளவில் பொருள்களை இருப்பு வைப்பதைத்தவிர்ப்பதன் மூலம் பெரும் விரயங்களைத் தவிர்த்து விடலாம். மற்றபடி வியாபாரத்தில் பெரும் முன்னெற்றம் இருப்பதற்கில்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாதென்பதால் கவலை வேண்டாம். மேலும் பண்ம் புழங்கும் இடங்களில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளர்களையே அமர்த்துவதும் மிக முக்கியமாகும். உங்கள் நேரடி கவனமும் அடிக்கடி இருந்து வருவது நல்லது. போட்டி நிறுவனங்களின் எதிர்ப்புகள் பலமாகவே இருக்குமாயினும் உங்கள் சமயோஜித புத்தியினால் சமாளிப்பது நல்லது. கூட்டாளிகள் இருப்பவர்களாயின் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

    கலைத்துறையினருக்கு:
    உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலையுல்லதால் நீங்கள் சோர்வுக்கு இடம் தராமலும், மற்றவர்களை நம்பாமலும் நீங்களே நேரிடையாகப் பார்க்கவேண்டியவர்களை பார்த்து பேசுவது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். ஓரளவு சோர்வடைந்தாலும் உங்கல் திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும் வாய்ப்புகள் கை நழுவிப் போய்விடக்கூடும். எனவே உங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்வதிலேயே உங்கள் முழுக்கவனமும் இருந்து வர வேண்டும். சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாகப் பழகி வருவதும் அவசியம். நடனம், ஸ்டண்ட் போன்ற துறைக் கலைஞர்கள் கூடுதல் வாய்ப்பைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களின் போது கவனம் தேவை. புதிய படங்களுக்கான வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கக்கூடும்.

    மாணவர்களுக்கு:

    விளையாட்டு போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். மின்னணுத்துறை கல்வியில் சிலர் வாய்ப்பு பெறக்கூடும். ஜாதகப்படு தசாபுத்தி பலன்கள் பலமாக அமையப் பெற்றவர்கள் மட்டுமே உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று ஹாஸ்டல்கள் போன்றவற்றில் தங்கிப் படிக்க நேரலாம். அத்தகையவர்கள் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அரசின் கல்விச் சலுகைகள் கிடைப்பதில் கூட சிரமங்கள் ஏற்படக்கூடும். சிலர் மேற்படிப்பை தொடர முடியாமல் வாய்ப்புகளைத் தேடவும் முயல்வீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம் பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககூடும். இருப்பின் மாற்றும் முகாம்களுக்குத் தாவும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உறுதியான விசுவாசத்துடன் இருந்து வருவதே எதிர்கால நன்மைகளுக்கு வழி வகுக்கும். பொறுமையாக் இருந்து உங்கள் பணிகளைப் பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் ஆதரவையும் பெறுவதற்கு கடினமான உழைப்பு தேவை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சிலர் மிகப்பெரும் பொறுப்பான பதவிகளைப் பெற்று மகிழவும் வாய்ப்பு உண்டு. தலைமையின் நன்மதிப்பையும் ஆதரவையும்பெற உங்கள் கடினமான தொண்டு மட்டுமே இப்போது முக்கியமாகும்.

    பெண்களுக்கு:
    இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சிலரது திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும் என்பதாலும் அது உங்கள் கணவரின் பணத்தட்டுபாட்டை நீக்கும் வகையில் அவருக்குத் தக்க சமயத்தில் பயன்படக்கூடிய வகையில் அவருக்கு அமையும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும். வேலைகளின்காரணமாக பிரிந்திருந்த தம்பதி சேர்ந்து வாழும்வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்களை விட்டுவிடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. சிறு உபாதைகளின் அறிகுறி தெரியும்போதே சிகிச்சை பெறுவதன் மூலம் வயிற்றுக்கோளாறு போன்றவற்றுக்கான மருத்துவச் செலவைக் கட்டுபடுத்த முடியும். வேலைக்குப் போகும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவு பழகத்தை கடைபிடிக்கவும்.

    நட்சத்திரப் பலன்கள்
    புனர்பூசம் 4 ஆம் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பிரிவினருக்குமே ஏற்றமும் இறக்கமும் கூடிய நிலையே இருந்து வரும். எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை எதிர்பார்க்க முடியாது எனபதால் தொழில் , வியாபாரம் போன்ற எதுவாயினும் பெரும் ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்ப்பதற்கில்லை. குடும்ப நிலையிலும் நிம்மதி குறைந்து காணப்படலாம். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கைகூடும். பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மன்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும்காணலாம். தெய்வபலம் துணை நிற்கும்.

    பூசம்:
    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிதானமான மனப்போக்கு தேவை. சகோதர வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மன அமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும் நிலை உள்ளாதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருந்துவாருங்கள். பெரும் பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. இறைவழிபாட்டில் மனத்தைச் செலுத்தி பொறுமையுடன் செயல் பட்டு வருவதே இப்போதைக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது உத்தமம்.

    ஆயில்யம்
    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலைஉள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது. என்றாலும் எந்த முயற்சியில் ஈடுபடும் போதும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து திட்டமிட்டு அதன் பிறகே செயல்படத் தொடங்குவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாள்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்ற நிலை உள்ளதால் அவர்களிடம் கனிவாகநடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. கண்ணில் சிலருக்கு கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமாகும். சிலருக்கு திடீர் தனவரவு உண்டாக வாய்ப்புண்டு, வாகனப் பழுது பார்ப்புச் செலவு சிலருக்கு ஏற்படக்கூடும். நெருப்பு அருகில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

    பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் தாமரைத் திரியில், நான்கு ஒரு முக மண் அகல் விளக்கு நெய் விட்டு ஏற்றவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு

    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்

    + சுப நிகழ்ச்சிகள் : – கொடுத்த வாக்கில் சுணக்கம்

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Email: ramjothidar@gmail.com
    போன்: 7845 11 9542
  • guru-peyarchi-palangal-simam

    மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
    சிம்ம ராசி அனபர்களே! ராசியின் பெயருக்கேற்ப சிங்கதிற்கே உரிதான கம்பீரமான் தோற்றம் உங்களுக்கு அமைந்திருக்கும் என்பதுடன் எதிர்ப்புகள், இன்னல்கள் எதுவாயினும் தாங்கிக் கொண்டு செயல்படக்கூடிய மன உறுதியும் உங்களிடம் அமைந்திருக்கும் அதே வேளையில் அண்டியவர்களை ஆதரித்து அன்பு காட்டும் இரக்ககுணத்திலும் உங்களை மிஞ்ச ஆளில்லை என்பதும் உண்மை. அதாவது வம்புச்சண்டைக்கு போகமாட்டீர்கள். ஆனால் வந்த சண்டையை எளிதில் விட மாட்டீர்கள். எதிரிகளை ஊடுருவி கண்டரிந்து தக்கபடி நடந்துக்கொள்ளும் பண்பும் அறிவாற்றலும் , செயலாற்றலும் மிக்கவர்களான நீங்கள் உங்களிடம் இயல்பாக உள்ள பிடிவாத குணத்தை மட்டும் ஓரளவு மாற்றிக் கொண்டால் உங்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால் உங்கள் வாழ்வுக்கும் சரி உடல் நலத்திற்க்கும் சரி மிகப்பெரும் பாதுகாப்புக் கவசமாக இருக்கும். இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுக்கு நடைபெற இருக்கும் பலன்களை இனி பார்ப்போம்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக ஸ்தானத்தில் இருந்து உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானம் – தொழில் ஸ்தானம் – விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    சனி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் – கேது ரண ருண ரோக ஸ்தானத்திலும் – ராகு உங்களது விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அதே நேரம், இந்த காலகட்டத்தில் உங்களிடம் பணம் பெற்றவர்கள் நன்றி பாராட்டுவது குறைவாகவே இருக்கும். மேலும் உடல் உபாதைகளை அலட்சியப்படுத்தினால் பெரிய மருத்துவச் செலவுகள் செய்யுமாறு நேரிடலாம்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர் ப்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் விருப்ப ஓய்வின் மூல உத்தியோகத்திலிருந்துவிலகி தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவிவரும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோரும் சம்பள உயர்வுகள் போன்ற சலுகைகள் பெற்று மகிழ்ச்சியடைக்கூடும். சிலர் வேலையில் இருந்து கொண்டே தொழில் ஒன்றைத் தொடங்கி உபரி வருமானத்துக்கு வகை செய்து கொள்வீர்கள். சொந்த வீடு இல்லாமல் இதுவரை இருந்த சிலர் சொந்த வீடு அரசு குடியிருப்பு போன்ற ஏதேனும் வசதிகளைப் பெற்று மகிழக்கூடும்.

    வியாபாரிகளுக்கு:
    உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்துநல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருள்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பேயில்லாமல், முழுமன நிறைவு கிட்டும் வகையில் திருப்திகரமான ஆதாயம் கிடைத்து வருவதில் தடையே இராது கணிசமான லாபமும் அதிக் கையிருப்பும் இருப்பதன் மூலம் மனைவியின் பெயரில் சொந்த வீடு வாங்கும் அமைப்புண்டு.

    கலைத்துறையினருக்கு:
    வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவாரியாகப் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் , புகழும் நாடெங்கும் நன்கு பரவும்.உங்கள் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும் நிலை உண்டு. இதுவரை பகைமை காட்டி வந்த சில கலைஞர்களும் கூட உங்களைத்தேடி வருவார்கள். நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு அமையக்கூடும்.

    மாணவர்களுக்கு:
    கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று , ஆசிரியர்களின் பராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு முன்னரே சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின்பெரும் ஆதரவையும் பெற்றுள்ள உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உங்களூக்குத்தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.பொருப்பான பதவிகள் சில உங்கத்தேடிவரும் உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக்கணக்கில் சேமிப்பு பெருகும்.வீடு,மனை, வண்டி,வாகன வசதிகளைக் குறைவறப்பெற்றுக் களிப்பில் திளைப்பீர்கள்.

    பெண்களுக்கு:
    வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள். ஆடை,ஆபரணச் சேர்க்கை,உறவினர் வருகை எல்லமே உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அமையும். சிலர் மனம்போல மாங்கல்யம் அமையப் பெருவீர்கள். உங்கள் பிறந்தவீட்டு வகையிலான உங்கள் கனவருக்குப் பெரிதும் துனையாயிருக்கும்

    நட்சதிரப்பலன்கள்
    மகம்:
    உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டுமிட்டு வந்தவை யாவும் இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும் வீடு,மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்தவீட்டில்தான் இருக்கக்கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள்.குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிராது. எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டு. உங்கள் திட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெறத் தவறுமாயினும்,வெற்றி பெரும்வரை சளைக்காமல் அதற்கெனப்போராடி இறுதியில் வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள். உடல்நிலை சீராக இருந்துவரும். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பேசி நிறுத்திக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகளின் பெருமை பன் மடங்காக பெருகும்.

    பூரம்:
    குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பணப் புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். பிரிந்து சென்ற உறவினர் திரும்பி வந்து சேருவார்கள். மற்றவர்களுக்கு பெருமளவில் உதவியும் செய்வீர்கள். மாணவமணிகள் எல்லா வகையிலும் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்று மகிழ முடியும். மற்றவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பார்கள். பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை.

    உத்திரம் 1 ம் பாதம்:
    குருப் பெயர்ச்சியில் உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் பணப்புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இட முண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவுபடுத்தினால் போதுமானது. கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செல்வதே விவேகமாகும்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமசிவய” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஐந்து ஒரு முக மண் அகல் விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு

    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

    + பணவரவு : – சொத்துகளில் பிரச்சனை

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Email: ramjothidar@gmail.com
    போன்: 7845 11 9542
  • guru-peyarchi-palangal-kanni

    உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள்

    பெருந்தன்மையும் மற்றவர்களுக்கு இயன்ற அளவிலெல்லாம் உதவ வேண்டும் என்ற பேருள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்கள் பெருந்தன்மைக்கும் கௌரவத்திற்கும் குறை ஏற்படாமல் கவனித்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் நாணயமாக நடந்து கொள்வீர்கள். தெய்வ பக்தியிலும், தெய்வ பலத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்து உங்களது சப்தம களத்திர ஸ்தானம் – பாக்கிய ஸ்தானம் – லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    சனி சுக ஸ்தானத்திலும் – கேது பஞ்சம புர்வ புண்ணிய ஸ்தானத்திலும் – ராகு உங்களது லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியமும், மற்றவர்களுக்கு பேரக் குழந்தை பாக்கியமும் உண்டாகும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் திறமையால் புதிய நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் தர்க்க ஞானமும் வெளிப்படும். பிள்ளைகளின் வழியில் முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவீர்கள். அதே நேரம், கவனம் சிதறாமல் உழைக்காவிட்டால் சரியான இலக்கைக் குறித்த நேரத்தில் அடைய முடியாமல் போகலாம். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் தேவைகளையும் சரியாக பூர்த்திச் செய்யுங்கள். அதோடு எவருக்கும் வாக்குக் கொடுக்காமலும், முன்ஜாமீன் போடாமலும், உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்காமலும் இருந்தால் நஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற சற்று அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் சுமூகமாக பழகுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. பதவி உயர்வு சிறு தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேறும். உங்கள் பணிகளில் தைரியமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்கள் மேல் எவ்வித புகாரும் எழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    வியாபாரிகளுக்கு:
    வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியில் உள்ள கடன் தொகைகள் வசூலாகும். கொள்முதலில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து கொள்முதலில் ஈடுபடவும். தரமான பொருட்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவது சிறந்தது. உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை.

    கலைத்துறையினருக்கு:
    பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். எனினும் உங்கள் முயற்சியால் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் உங்கள் பெயரை பிரபலப்படுத்தும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். கவலை வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    மாணவர்களுக்கு:
    படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சிறு உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம். யோகா போன்ற பயிற்சிகளின் மூலம் ஞாபகத் திறனை பெருக்கிக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் சில தடங்கல்களுக்குப் பிறகு நிறைவேறும்.

    அரசியல்வாதிகளுக்கு:
    இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதன் மூலம் பெருமையும் கிட்டும். எடுத்த பணிகளை குறைவின்றிச் செய்து வாருங்கள்.

    பெண்களுக்கு:
    அவ்வப்பொது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்கள் விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடல் சூழ்நிலை காரணமாக அதிக செலவு செய்ய நேரலாம். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். புதியதாக வாகன சேர்க்கை இருக்கும். சொந்த மனையில் குடியேறும் நீண்ட நாட்கள் கனவு நிறைவேறும்.

    உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்:
    இந்த குருப் பெயர்ச்சியில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனத்தில் இருந்து வந்த தேவையற்ற வீண் குழப்பங்கள் அகலும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போதும் நெருப்பினைப் பிரயோகப்படுத்தும் போதும் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் நல்ல மாறுதல்களை உணர்வீர்கள். வெளிநாடு பயணம் செல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

    ஹஸ்தம்:
    இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்பார்க்காத பணி இட மாற்றம் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஈடுபடும் போதும் நேர்மறை எண்ணங்களோடு ஈடுபடுவது நல்லது. கூடுமானவரை சோம்பேறிதனத்தை விடுவது நன்மை தரும். பொருளாதார நிலை மேலோங்கும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    சித்திரை 1, 2ம் பாதங்கள்:
    இந்த குருப் பெயர்ச்சியில் குடும்ப நிம்மதியில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் வழியில் சில கவலைகள் நேரலாம். பொருளாதார நிலை மேலோங்கும். நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவீர்கள். தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது நன்மை தரும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். வியாபாரிகள் அதிக அள்வில் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்யவும். தள்ள்ப் போய் கொண்டிருந்த திருமணம் கைகூடும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும்.

    பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீசாஸ்தாய நம” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: வீட்டில் பித்தளை ஐந்து முக விளக்கு நல்லெண்ணை மற்றூம் நெய் கலந்து ஏற்றவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6, 9

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன்

    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;

    + பதவி உயர்வு : – வீண் விரையம்

     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    போன்: 7845 11 9542
  • guru-peyarchi-palangal-thulam

    சித்திரை 3, 4ம் பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்

    எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத் திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். தனிப்பட்ட திறமைகள் கொண்ட நீங்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்து இருப்பீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நபர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தால் உங்களுக்கு வெற்றி தேடி வரும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது. தெய்வ பலமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு நிறைந்திருக்கும். இதன் மூலம் எல்லாவித பிரச்சனைகளிலிருந்து எளிதாக விடுபடுவீர்கள்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது ராசியில் இருந்த குருபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து உங்களது ரண ருண ரோக ஸ்தானம் – அஷ்டம ஆயுள் ஸ்தானம் – தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    சனி தைரிய வீர்ய ஸ்தானத்திலும் – கேது சுக ஸ்தானத்திலும் – ராகு உங்களது தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடலாரோக்கியம் ஒத்துழைக்கும். முற்காலத்தில் வாங்கியச் சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் உங்களுடன் நட்புக் கொள்ள அழைப்பார்கள். அதேநேரம், உங்கள் செயல்களைப் பெரிய ஆரவாரம் இல்லாமல் செய்யுங்கள். மேலும் உங்கள் ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும். முரண்டுப் பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகிவிடவும். இதனால் புதுப்பிரச்னை எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு பிள்ளைகளிடம் அனாவசிய கெடுபிடிகளைத் தவிர்த்து தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு: நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பது நன்மை தரும்.

    தொழில் துறையினருக்கு: சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உப தொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் ஆவணங்களை சரியாக பார்த்து முடிவெடுப்பது சிறந்தது. முடிந்த வரை பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன்களை பைசல் செய்வீர்கள். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கையானவர்களை நியமிப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு: உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர் – பின்னணி இசைக்கலைஞர்கள் – நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதத்திற்குப் பிறகு பொன்னான காலகட்டமாக இருக்கும். சக கலைஞர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது சிறந்தது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளை சிறிது அக்கறை எடுத்து கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

    மாணவமணிகளுக்கு: கல்வியில் சிறிது ஆர்வகுறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற குற்றச்சாட்டு அகல தீய பழக்கவழக்கம் இருக்கும் நண்பர்களிடமிருந்து சற்றே விலகியிருப்பது நல்லது.

    அரசியல் துறையினருக்கு: உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். சிலருக்கு சுழல் விளக்கில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அதே வேளையில் மன உறுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.

    பெண்களுக்கு: குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது. நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும். தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைத்துக் கொள்வது நல்லது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம்.

    நட்சத்திர பலன்கள்:
    சித்திரை 3, 4ம் பாதங்கள்:
    இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

    ஸ்வாதி:
    இந்த குருப் பெயர்ச்சியில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

    விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:
    இந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும்.

    பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 9 ஒரு முக மண் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவும்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு

    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி;

     

    + முதலீடு அதிகரிக்கும் : – சகோதர சகோதரிகளிடம் மனகிலேசம்

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    போன்: 7845 11 9542
  • guru-peyarchi-palangal-viruchigam

    விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை:

    நீங்கள் எதிலும் முன்னனி பெற்று விளங்குவீர்கள். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கான பணிகளை முன் நின்று நடத்துவீர்கள். உங்கள் சொந்த பணிகளில் சற்று சுணக்கம் காணப்படும். கவனம் தேவை. எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தெய்வ பலம் உங்களை வழிநடத்தும்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது விரைய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ராசிக்கு மாறுகிறார். ராசியில் இருந்து உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் – சப்தம் களத்திர ஸ்தானம் – பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    சனி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் – கேது தைரிய வீர்ய ஸ்தானத்திலும் – ராகு உங்களது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுத் தெரியும். செய்தொழிலில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரில் இருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். மேலும் பழைய கடன் பாக்கிகளும் வசூலாகும். புதுப்புதுப் பிரச்னைகளுக்கு நூதனமாகக் சிந்தித்து முடிவு காண்பீர்கள். அதே நேரம், குடும்பப் பிரச்னைகளில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், நீங்கள் நம்பியவர்களாலேயே ஏமாற்றப்படலாம். அதனால் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்ளுங்கள். மேலும் தீயோரின் சகவாசத்தை அடியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதோடு பாகப்பிரிவினைகளை துரிதப்படுத்தாமல் தாமதப்படுத்துங்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும்.

    வியாபாரிகளுக்கு:
    உங்கள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம். படிப்படியான வளர்ச்சி நிலை உங்கள் தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். எனவே கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்து திருப்தி காண்பீர்கள்.

    கலைத்துறையினருக்கு:
    புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை இன்றி சுமூகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.

    மாணவர்களுக்கு:
    உங்கள் படிப்பாரவம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம். விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாரட்டுகளைப் பெறுவீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்கள் பொறுப்பான் பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உங்களுடன் உள்ள சிலரே பொறாமைப் படுவார்கள். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செய்தால் வெற்றி உண்டு.

    பெண்களுக்கு:
    குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். மனம்போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

    நட்சத்திரப்பலன்:
    விசாகம் 4ம் பாதம்:
    இந்த குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும்.

    அனுஷம்:
    இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திர வழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும்.

    கேட்டை:
    இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
    பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் தும் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் நெய் விட்டு ஒரே ஒரு ஐந்து முக மண் அகல் விளக்கு ஏற்றி வழிபடவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9

    அதிர்ஷ்ட ஹோரைகள்: ஞாயிறு, செவ்வாய், குரு

    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்;

     

    + உண்மையை உணர்தல் : – எடுத்த காரியங்களில் சுணக்கம்

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    போன்: 7845 11 9542
  • guru-peyarchi-palangal-dhanusu

    மூலம், பூராடம், உத்திராடம்

    தன்னுடைய சொந்த காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் பிறரிடம் கை கட்டி சேவை செய்ய விரும்பாதவர்கள். மனதிற்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். நேர்மையை கடைபிடித்து நடப்பதால் கம்பீரமாக பீடு நடை போடுவீர்கள். பிறர் உங்களுக்கு தீமை செய்தாலும் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் நன்மையே செய்வீர்கள். அவசரத்தில் உணர்ச்சிகளை மட்டும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். செய்யும் காரியங்களில் சிறிது அக்கறை மட்டும் எடுத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். விரைய ஸ்தானத்தில் இருந்து உங்களது சுக ஸ்தானம் – ரண ருண ரோக ஸ்தானம் – அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

    மற்ற கிரகங்களின் நிலை:
    சனி ராசியிலும் – கேது தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் – ராகு உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    இந்த குருப் பெயர்ச்சியில் முக்கிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டினால் குதூகலங்கள் அதிகம் சந்திப்பீர்கள். பாசம் காட்டாத உற்றார் உறவினர்கள் பாசம் காட்டத் துவங்குவார்கள். உடலில் இருந்த உபாதைகளும், மனக்குழப்பங்களும் விலகும். புதியவர்கள் நட்பு கிடைத்து அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கைகள் வீண் போகாது. சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடியும். புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் தேடிவரும். அதே நேரம் திரும்பத் திரும்பச் செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி விடவும். மறைமுகப் பகையை பாராட்டும் பழைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம்.

    உத்தியோகஸ்தர்களுக்கு: சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். உங்கள் பணிகளில் அதிக சிரத்தையும் முயற்சியும் தேவை. யாரும் உங்களை குறை கூறாத அளவிற்கு நேரத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் கனிவான உறவினை கொள்ளும். அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை நிமித்தமாக வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

    வியாபாரிகளுக்கு: குறைந்தபட்சம் லாபம் உறுதியாகக் கிடைக்கும். போட்டிகள் அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். உங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது நன்மை தரும். யாரிடமும் அனுசரணையான உறவைக் கையாள்வது நல்லது. கூட்டு வியாபாரங்களில் கணக்கினை சரியாக வைத்துக் கொள்வது நன்மை தரும். அரசு வகையில் சில பிரச்சனைகள் வரலாம்.

    கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சக கலைஞ்சர்களிடம் சுமூகமாக பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக படித்து பார்ப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்லும் சரியான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.

    மாணவர்களுக்கு: ஏழரை ஜென்ம சனி ஆரம்பிக்க இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. விளையாட்டில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நன்மை தரும். உயர்கல்விக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

    அரசியல்துறையினருக்கு: எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர்.

    பெண்மணிகளுக்கு: அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது. கடினமாக உழைத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் உதவிகளால் முன்னேறுவீர்கள்.

    மூலம்:
    இந்த குருப் பெயர்ச்சியில் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள்.

     பூராடம்:
    இந்த குருப் பெயர்ச்சியில் கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.

     
    உத்திராடம்:
    இந்த குருப் பெயர்ச்சியில் பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.


    பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

    விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 5 ஒரு முக மண் அகல் விளக்கு நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை கலந்து ஏற்றவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்

     

    + அதிகமாக உழைத்தல் : – பரபரப்பு மற்றும் உடல்நலம் பாதித்தல்

     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    போன்: 7845 11 9542