Author: சக்தி ஆன்லைன் டீம்

  • ninaithadhai-nadathi-vaikum-maha-kaali

    விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தின் எல்லைப் பகுதியில் ஸ்ரீசாந்த மகா காளியம்மனாக அவதாரம் எடுத்து ஊரை பாதுகாத்து வருகிறாள் மகாகாளி. பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து காளியம்மனை மனதார வணங்கி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகுகால பூஜைகள் சிறப்பு வாய்ந்தது. பௌர்ணமி, அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

    பக்தர்கள் இந்த ராகுகால பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் திருமண தடை, கடன்தொல்லை, குடும்ப சண்டை, குழந்தை பாக்கியம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுவதாக நம்புகின்றனர். இங்குள்ள கல்வி விநாயகரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம், தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்றும் நம்பப்படுவதால் மாணவ, மாணவிகள் இந்த கல்வி விநாயகரை பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

    ஸ்ரீசாந்த மகாகாளியம்மன் சுமார் 1300 வருடங்குளுக்கு முன்னர் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சி காலத்திற்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

    மேலும் விக்கிரமாதித்த மன்னன் நாடாறு மாதம் காடாறு மாதம் ஆட்சிசெய்யும் போது இந்த சிறுவந்தாடு கிராமத்தில் உள்ள காளியம்மனை வழிபட்டதாக அப்பகுதி பெரியவர்கள் கூறுகின்றனர். காளிதேவியை பத்ர காளியாகவும், மகா காளியாகவும், வழிபட்டு வந்த மக்கள் தற்போது ஸ்ரீசாந்த மகா காளியம்மனாக மனதில் முன்நிறுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்த அம்மன் வடக்கு நோக்கி காட்சி தந்து வருகிறாள். திருவக்கரை வக்ர காளியம்மனுக்கு அடுத்தாக இந்த சாந்த மகாகாளியம்மனைத்தான் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    சிறுவந்தாடு சாந்த மகா காளியம்மனும், திருவக்கரை வக்கர காளியம்மனும் ஒரே நேர்க்கோட்டில் அமையப் பெற்றுள்ளது அற்புத நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளது. கோயிலின் தலவிருட்சடாக வில்வ மரம் திகழ்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட துர்க்கை மற்றும் கல்வி விநாயகர் ஆகிய சிலைகள் அதன் பழமையை காட்டுகின்றது.

    உட்புர கோயில்களாக சிவலிங்கம், துர்க்கை, நவகிரகங்கள், நாகம்மன் சன்னதிகள் உள்ளன. கோயில் கருவறை மேல் வழக்கமாக கோபுரம் இருக்கும். ஆனால் சாந்தமகாகாளியம்மன் கோயில் கருவறை மேல் பகுதியில் பொற்கூரை வடிவம் அமைக்கப்பட்டு 3 செப்புக் கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரையை நினைவுபடுத்துகிறது.

    விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வழியாக சிறுவந்தாடு வந்தால் 6 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து மடுகரை வழியாக 32 கி.மீ தொலைவிலும், கடலூரில் இருந்து மடுகரை வழியாக 30 கி.மீ தொலைவிலும் இந்த சாந்தமகாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு. வார நாட்களில் ராகுகால நேரங்களில் நடை திறந்திருக்கும்.

  • theeradha-noi-theerkum-koilgal

    சென்னை – திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

    கோவை-மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் அருளும் வனபத்ரகாளியம்மன் செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை நலம்பெறச் செய்கிறாள்.

    நாகர்கோவில் அருகே, மண்டைக்காட்டில் பகவதி அம்மன் அருள்புரிகிறாள். பச்சரிசிமாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதத்தை செய்து இந்த அம்மனுக்குப் படைக்க தீரா தலைவலியும் நீங்கிவிடும்.

    தூத்துக்குடி, வசவப்பபுரத்தில் அலங்காரச்செல்வி அம்மன் அருள்புரிகிறாள். கனவுத் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அன்னையை தரிசித்து, அதிலிருந்து விடுபடுகின்றனர்.

    சென்னை, மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் கோயில் கொண்டுள்ள கடும்பாடிச் சின்னம்மனுக்கு உப்பு, மிளகு செலுத்துவதாக வேண்டிக்கொண்டால் சரும நோய்கள் நீங்குகின்றன. அம்மை நோயை கருவறையில் வழங்கப்படும் சங்கு தீர்த்தம் தீர்க்கிறது.

    கோவை – பெருமாநல்லூரில் கோயில் கொண்டுள்ள கொண்டத்துக்காளியம்மன், சரும நோய்களை நீக்கியருள்கிறாள்.
    மூலஸ்தானத்தில் மாரி, காளி என இரு அம்பிகைகள் வீற்றருளும் தலம், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சந்தைக்கடை மாரியம்மன் கோயில். கண் நோய் மற்றும் பிற கொடிய நோய்களையும் இந்த இரட்டை அம்பிகையர் தீர்க்கிறார்கள்.

    திருவிடைமருதூரில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்பிகை, மகப்பேறு தடைகளை நீக்கி, குழந்தை வரம் தருகிறாள்.

    திருச்சி – பெரம்பலூர், சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து காக்கிறாள். உடலில் எந்த நோய் கண்டாலும் இந்த அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டு, ஆலயத்திலேயே மாவிடித்து, மாவிளக்கேற்றி, ஆலய பிராகாரத்தில் படுத்து அந்தந்த உடல் பாகத்தில் மாவிளக்கை வைத்து வேண்டிக்கொள்ள அந்த நோய் மாயமாய் மறைந்துவிடுகிறது.

    ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் நம்புநாயகி அம்மன் கோயில் கொண்டுள்ளாள். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள திருக்குள தீர்த்தங்கள் பல்வேறு நோய்களைப் போக்குபவை. எனவே சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள்.

    சென்னை, மயிலாப்பூர் கச்சேரி சாலை பகுதியில் உள்ள முண்டகக் கண்ணியம்மன், கண்நோய்களை நீக்குவதில் நிகரற்றவளாக விளங்குகிறாள்.

    திண்டுக்கல், நத்தத்தில் உள்ள மாரியம்மன், எல்லா பிணிகளையும் தீர்த்தருள்கிறாள். அன்னையின் அருளால் பலன் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டுதல், தீச்சட்டி எடுத்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    நவபாஷாணத்தால் ஆன அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சியில் தரிசிக்கலாம். தீராத நோய்களையும் இந்தத் தாய் தீர்த்தருள்கிறாள்.

    நாமக்கல், ராசிபுரத்தில் உள்ள நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு கண்மலர் வாங்கி சாத்தினால் கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

    விஜய ஜெய சாமுண்டீஸ்வரி எனும் பெயரில் தவக்கோல அம்பிகையை கல்பாக்கம், புதுப்பட்டினத்தில் தரிசிக்கலாம். இந்த அம்பிகை மன அமைதி தந்து காப்பவள்.

    கோயமுத்தூரில் அருளாட்சி புரிந்து வரும் கோனியம்மன், தீராத நோய்களை தீர்த்தருள்பவள் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

    தஞ்சாவூர், வல்லத்தில் அருளும் ஏகெளரி அம்மன், தன் பக்தைகளின் கணவர்களை நோய்களிலிருந்து காக்கிறாள். அப்படி பயன்பெற்ற பக்தைகள் ஆலயத்திற்கு எருமைக்கன்றை தானமாக வழங்குகின்றனர். குழந்தைப் பேற்றில் தடை உள்ள பெண்கள் இந்த அம்பிகையின் சந்நதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை அருந்த, அவர்களுக்கு அந்த பாக்கியம் எளிதாகக் கிட்டுகிறது.

    திருக்கருகாவூரில் அருளும் கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பப் பை சம்பந்தமான பிணிகளை நீக்கியருள்கிறாள்.

    திருவண்ணாமலை, சந்தவாசலில் கோயில்கொண்டிருக்கும் கங்கையம்மனுக்கு அபிஷேகம் செய்த நீர், தீராத நோய்களை தீர்க்கிறது.

    சிவகங்கை – நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி கண் சம்பந்தமான நோய்களைத் தீர்த்தருள்கிறாள்.

  • thiruchanoor-pavithra-malaigal-samarpanam

    திருச்சனூர் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவம் கடந்த 22ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது.

    பவித்ர உற்சவத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் பத்மாவதி தாயார் சுப்ரபாத சேவையுடன் துழில் எழுப்பப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்தி பத்மாவதி தாயார் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு அக்னி பிரதிஷ்டை மற்றும் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்நிலையில், பவித்ர உற்சவத்தின் 2வது நாளான நேற்று காலை யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பவித்ர மாலைகள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணமுக மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் கண்காணிப்பாளர் மல்லேஸ்வரி, கோயில் ஆய்வாளர் குருவய்யா உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 25
    விளம்பி வருடம் – புரட்டாசி 9
    மகாளய பட்சம் ஆரம்பம்
    25-செப்-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பவுர்ணமி கா 8.42
    நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 2.16
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆரோக்கியம்
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – அலைச்சல்
    கடனம் – ஆக்கம்
    சிம்மம் – குழப்பம்
    கன்னி – ஜெயம்
    துலாம் – பரிசு
    விருச்சிகம் – புகழ்
    தனுசு – அமைதி
    மகரம் – நன்மை
    கும்பம் – ஓய்வு
    மீனம் – கவனம்

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 26
    விளம்பி வருடம் – புரட்டாசி 10
    26-செப்-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை கா 9.15
    நட்சத்திரம் : ரேவதி இ 3.05
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உற்சாகம்
    ரிஷபம் – சினம்
    மிதுனம் – முயற்சி
    கடனம் – தெளிவு
    சிம்மம் – சிக்கல்
    கன்னி – பக்தி
    துலாம் – நிம்மதி
    விருச்சிகம் – சாந்தம்
    தனுசு – இன்பம்
    மகரம் – நலம்
    கும்பம் – நற்செயல்
    மீனம் – ஆக்கம்

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 27
    விளம்பி வருடம் – புரட்டாசி 11
    27-செப்-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை கா 9.17
    நட்சத்திரம் : அசுவினி இ 3.25
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்


    இன்றைய ராசி பலன்கள்

    மேஷம் – மேன்மை
    ரிஷபம் – பரிவு
    மிதுனம் – நன்மை
    கடனம் – பகை
    சிம்மம் – யோகம்
    கன்னி – வரவு
    துலாம் – நலம்
    விருச்சிகம் – பிரயாணம்
    தனுசு – சிந்தனை
    மகரம் – கவனம்
    கும்பம் – பெருமை
    மீனம் – பிரமை

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    அக்டோபர் 3
    விளம்பி வருடம் – புரட்டாசி 17
    03-அக்-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி இ 10.16
    நட்சத்திரம் : புனர்பூசம் இ 9.23
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்


    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தனம்
    ரிஷபம் – சுகம்
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – நன்மை
    சிம்மம் – செலவு
    கன்னி – மேன்மை
    துலாம் – சாதனை
    விருச்சிகம் – ஆதாயம்
    தனுசு – சாந்தம்
    மகரம் – புகழ்
    கும்பம் – பக்தி
    மீனம் – உற்சாகம்

     

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    அக்டோபர் 4
    விளம்பி வருடம் – புரட்டாசி 18
    04-அக்-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 7.54
    நட்சத்திரம் : பூசம் இ 7.42
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – புகழ்
    கடனம் – சாந்தம்
    சிம்மம் – கவனம்
    கன்னி – பயம்
    துலாம் – உதவி
    விருச்சிகம் – லாபம்
    தனுசு – வெற்றி
    மகரம் – சந்தேகம்
    கும்பம் – வீம்பு
    மீனம் – போட்டி

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 24
    விளம்பி வருடம் – புரட்டாசி 8
    பவுர்ணமி பவுர்ணமி
    24-செப்-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : சதுர்த்தசி கா 7.40
    நட்சத்திரம் : பூரட்டாதி இ 12.55
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தெளிவு
    ரிஷபம் – களிப்பு
    மிதுனம் – சினம்
    கடனம் – அசதி
    சிம்மம் – பிரிவு
    கன்னி – பாசம்
    துலாம் – நிறைவு
    விருச்சிகம் – வரவு
    தனுசு – லாபம்
    மகரம் – நலம்
    கும்பம் – பக்தி
    மீனம் – மறதி

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி


    விளம்பி வருடம் – புரட்டாசி 15
    01-அக்-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 2.51
    நட்சத்திரம் : மிருகசீரிடம் இ 12.25
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்


    இன்றைய ராசி பலன்கள்

    மேஷம் – தனம்
    ரிஷபம் – நலம்
    மிதுனம் – ஊக்கம்
    கடனம் – புகழ்
    சிம்மம் – உயர்வு
    கன்னி – பெருமை
    துலாம் – கவனம்
    விருச்சிகம் – மகிழ்ச்சி
    தனுசு – சிந்தனை
    மகரம் – மறதி
    கும்பம் – இன்பம்
    மீனம் – இரக்கம்