Author: சக்தி ஆன்லைன் டீம்

  • endha-padiyil-enna-bommai-vaika-vendum

    முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், செடி, கொடிகளையும், 2 ஆம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளையும், 3 ஆம் படியில் மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளையும் அடுக்க வேண்டும்.

    4ஆம் படியில் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5ஆம் படியில் விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், 6ஆம் படியில் மனிதர்களின் உருவபொம்மைகளையும் வைக்கலாம்.

    7ஆம் படியில் சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளையும், 8ஆம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் பொம்மைகளையும் அடுக்கலாம். 9 ஆம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பொம்மைகளை வைக்கலாம். அதன் நடுவில் ஆதிபராசக்தியை கொலுவின் அதிபதியாக வைத்து வழிபட வேண்டும்.

  • navarathiri-vizhavil-bommaikal-vaipathu-en

    நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும்.

    ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார்.

    கொலு வைத்து வழிபடுவது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும் என்பது ஐதீகம். நவராத்திரி கொலுவில் ஒவ்வொரு ஜீவராசிகளும் பெற்றுள்ள அறிவின் அடிப்படையில் கீழ்பகுதியில் இருந்து பொம்மைகளை அடுக்க வேண்டும்.

  • navarathiri-katchi-tharum-ambigai

    நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

    நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

    துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

    துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.

  • sirappu-vaindha-guru-thalangal

    பட்டமங்கலம் :
    ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்ட மங்கலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    தேவூர்:

    கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

    தக்கோலம்:

    அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலைநயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி.

    குருவித்துறை:

    மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருவில் இருக்கும் ஊர் குருவித்துறை. இங்கு சித்திரரத வல்லபப்பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக்கோயில் உள்ளது. வைஷ் ணவக் கோயிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    திரிசூலம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்ப் பொருளாகச் சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று. அம்மனின் உள்ளகை தங்கத்தாலானது. இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள்.

    இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம்பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது.

    மேதா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்தோடு சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம்,திருவாய்மூர், திருக்கைக் சின்னம் போன்ற ஊர்களில் அழகிய கோலத்தில் தட்சிணா மூர்த்தியைக்காணலாம். சிவபெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அந்தக் கோலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியைக்காண லால்குடி, திருநெய்தானம், திருச்சக் கரப்பள்ளி, சூரியனார் கோயில், திருவாங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

    திங்களூர்:

    திங்களூரில் கருவறையை சுற்றிய பிரகாரலத்தின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது அபூர்வமான காட்சியாகும். சிதம்பரத்தில் தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.

    பூந்தோட்டம்:

    பொதுவாக தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர்ந்துதான் அருள்பாலிப்பார். ஆனால் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரஸ்வாமி ஆலயத்தில் குருபகவான் பன்னிரண்டு ராசி மண்டலங்களின் மேல் வீற்றிருக்கிறார். இந்த ராசி மண்டல குருபகவான் ‘பரமகுரு‘ என சிறப்பு பெற்றவர். இவரை வணங்கினால் திருமணத்தை தடை நீங்கி, நல்ல மனைவி, புத்திர பாக்கியம், பெரும்புகழ், பெருஞ்செல்வம் ஆகியவை கிட்டும். இவருக்கு புத்திரகாரன் என்ற பெயரும் உண்டு. இந்த குருபகவானுக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேக அர்ச்சனை செய்தால் எல்லாவிதமான நன்மைகளும் கிட்டும் என்று ஸ்ரீஅகஸ்திய நாடி வாக்யம் கூறுகிறது.

    ஓமாம்புலியூர்:

    சிதம்பரத்திற்கு தென்மேற்கில் 30 கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் உள்ளது. இறைவன்: ஸ்ரீதுயர்தீர்த்தநாதர், இறைவி: பூங்கொடி நாயகி, இது இறைவன் தட்சிணா மூர்த்தி கோலத்தில் உமையம்பிகைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த திருத்தலம்.

    திருலோக்கி:

    கும்பகோணம் – திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி காளை மீது அமர்ந்திருக்கும் காட்சி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. குரு பரிகாரத்திற்கு ஏற்றது.

    மயிலாடுதுறை:

    மயூர நாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி – குரு வழிபாட்டுக்கு ஏற்ற தலம் ஆகும்.

    கும்பகோணம் :

    மகாமக பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம். குரு பரிகாரத்திற்கு ஏற்றது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இது ஒன்று.

  • guru-peyarchi-thittai

    குருபகவான் நாளை துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்வதால், பக்தர்களின் தரிசனத்துக்கு திட்டை கோயில் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வியாழக்கிழமை இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, திட்டையில் உள்ள வசிஷ்டேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை காலை முதல் வசிஷ்டேசுவரர்-சுகந்தகுந்தளாம்பிகைக்குச் சிறப்பு பூஜைகள், வழிபாடு, குரு பகவானுக்கு சிறப்பு ஆராதனைநடைபெறவுள்ளது.

    இக்கோயிலில் பக்தர்கள் வரிசையாகச் செல்லும் விதமாகத் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சிறப்புப் பேருந்துகள்: குருபெயர்ச்சி விழாவையொட்டி, வியாழக்கிழமை (அக்.4) காலை முதல் வெள்ளிக்கிழமை (அக்.5) காலை வரை தஞ்சாவூர் – திட்டை, கும்பகோணம் – சூரியனார்கோவில், கும்பகோணம் – ஆலங்குடி, தஞ்சாவூர் – ஆலங்குடி ஆகிய வழித்தடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

  • guru-peyarchi-ganamazhai

    இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம்.

    மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

    ஆன்மீகம் மற்றும் கோவில்கள்:
    புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வெள்ளிகிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

     பொது:
    பல முக்கிய வழக்குகளுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். குரு இல்லறத்தின் காரக கிரகமான சுக்கிரன் வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

    ஆரோக்கியம்:
    நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

    குடும்பம்:
    கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

    அரசியல்:
    அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

  • alangudi-guru-peyarchi-vizha

    திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடக்கிறது.
    நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில்.

    திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பாடப்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வியாழக்கிழமை (04/10/2018) இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  • guru-peyarchi-gold-rate

    பொது பலன்கள்:
    பொதுவாக விருச்சிக ராசி என்பது வேகமாக செய்யக்கூடிய காரியங்கள் மற்றும் பூமி சம்பந்தபட்ட காரியங்களை குறிக்கக்கூடிய ராசியாகும். இதன் அதிபதி பூமி காரகனாகிய செவ்வாய் ஆவார். வேகம் – பூமி – வீடு – மனை – வயல் – வாகனம் – ராணுவம் – காவல் ஆகிய விஷயங்களுக்கு செவ்வாயே அதிபதியாவார். அதே போல் மங்களகாரியங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கும் செவ்வாய் முக்கியமானவர் ஆவார்.

    மங்களகாரகன் செவ்வாய் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது நல்ல பலன்களை அள்ளித் தருவார். ஜோதிடத்தில் இதற்குப் பெயர் குரு மங்கள யோகம் என்று அழைக்கப்படும்.

    நாடு மற்றும் பொருளாதாரம்:
    செவ்வாய் வீட்டிற்கு குரு மாறுவதால் ரியல் எஸ்டேட் நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.

    விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு விருச்சிகம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் முன்னேற்றும். சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர்.

    உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். குரு சாரத்தில் மாறுவதால் மங்கள காரியங்கள் மிக அதிக அளவில் நடைபெறும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும்.

    பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

  • guruval-erpadum-bakiyangal

    பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

    ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

    ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

    அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

  • grur-bagavan-biodata

    சொந்த வீடு – தனுசு, மீனம்
    உச்சராசி – கடகம்
    நீச்சராசி – மகரம்
    திசை – வடக்கு
    அதிதேவதை – பிரம்மா
    நிறம் – மஞ்சள்
    வாகனம் – யானை
    தானியம் – கொண்டைக்கடலை
    மலர் – வெண்முல்லை
    வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை
    ரத்தினம் – புஷ்பராகம்
    நிவேதனம் – கடலைப்பொடி சாதம்
    உலோகம் – தங்கம்
    இனம் – ஆண்
    உறுப்பு – தசை
    நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
    பகைகிரகம் – புதன், சுக்கிரன்
    மனைவி – தாரை
    பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்
    பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
    தகுதி -தேவகுரு